Home Blog Page 109

உலக நடன தினம்: அசத்தல் டான்ஸ் வீடியோ வெளியிட்ட கிகி!

0
KiKi Dance Video

KiKi Dance Video; உலக நடன தினம்: அசத்தல் டான்ஸ் வீடியோ வெளியிட்ட கிகி! உலக நடன தினத்தை முன்னிட்டு சாந்தனுவின் மனைவி கிகி அசத்தலான டான்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கிகி டான்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் World Dance Day.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் மே 3 ஆம் தேதி லாக்டவுன் முடிவடையும் நிலையில், மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் முதல் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தான் நேரம் செலவிட்டு வருகின்றனர்.

தங்களது அன்றாட பணிகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தி பகிர்ந்து வருகின்றனர்.

சமையல் செய்வது, தோட்ட வேலை பார்ப்பது, விவசாயம் செய்வது, யோகா, உடற்பயிற்சி, வீட்டு வேலை பார்ப்பது, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி ஆகியோர் டிக் டாக் செய்து பல வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இன்று உலக நடன தினம் என்பதால், அசத்தலாக ஒரு டான்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிகி வெளியிட்டுள்ளார்.

ஹிந்தி பாடல் ஒன்றிற்கு டான்ஸ் ஆடுவது போன்று காட்டப்பட்டுள்ளது. அதில், இன்று சர்வதேச நடன தினம் என்று பதிவிட்டுள்ளார்.

இன்று உலக நடன தினம் என்பதால் ஹலோவில், Best Dance Video என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதன் மூலம், நடன வீடியோ மற்றும் நடிகர், நடிகைகளின் டான்ஸ் வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

உலக நடன தினம் இன்று!

1
World Dance Video

World Dance Day; உலக நடன தினம் இன்று! ஆண்டுதோறும் ஏப்ரல் 29 ஆம் தேதி உலக நடன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உலக நடன தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பிரபலங்கள் பலரும் தங்களது டான்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று உலக நடன தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த 1982 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

இது, நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும். பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.

அதே ஆண்டில், நடன தினம் பற்றிய செய்தியை சர்வதேச நடன சபையின் தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் வெளியிடார்.

அதில், அரசு அறிவிக்கும் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப்படுவதில்லை என்றார்.

இதையடுத்து, கடந்த 2005 ஆம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் முழுவதும் ஆரம்பக் கல்வியின் மூலமாக நடனத்தை கற்றுத்தருவதை நோக்கமாக கொண்டிருந்தது.

நடன பயிற்சியாளர்கள், நடன பயிற்சி பள்ளிகள் ஆகியவை தங்களது நாடுகளின் கல்வி, கலாச்சார அமைப்புகளை தொடர்பு கொண்டு பள்ளிகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது.

தமிழ்நாடு – பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் சாக்கியார் கூத்து, கதகளி, மோகினி ஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்,

ஆந்திரா – குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம்.

கர்நாடகா – யக்ஷகானம்

ஒரிஸ்ஸா – ஒடிசி

மணிப்பூர் – மணிப்புரி, லாய்-ஹரோபா

பஞ்சாப் – பாங்ரா, கிட்டா

பீகார் – பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி

அஸ்சாம் – பிகு

ஜம்மு-காஷ்மீர் – சக்ரி, ரூக்ப்.

இந்தியாவின் கிராமிய நடனங்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம்.

தென்னிந்தியக் கிராமிய நடனங்கள்: தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்) இலவா, நிக்கோபாரிய நடனம்.

வட இந்தியக் கிராமிய நடனங்கள்: டும்ஹால் இரூவ்ப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி.

கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள்: நாகா நடனம், ஹஸாகிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் வ்ரிதா, ஹுர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய் ஆகியவை.

மேற்கிந்திய நடனங்கள்: கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மண்டோ. காதலர் தினம் படத்தில் வரும் தாண்டியா ஆட்டம் என்ற பாடல் மேற்கிந்திய நடனத்தை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், நடிகைகள் தங்களது நாடு மற்றும் மாநிலத்திற்கு ஏற்ப அவரவர் நடன கலைகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஹாலிவுட்டில் நடித்து புகழ்பெற்ற இந்தி நடிகர் இர்பான் கான் மரணம்

0
நடிகர் இர்பான் கான்

மும்பை: பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை நடித்து புகழ் பெற்ற நடிகர் இர்பான் கான் தனது 53 ஆவது வயதில் இன்று காலமானார்.

செவ்வாயன்று மும்பையில் உள்ள கோகிலாபென்(kokilaben) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பெருங்குடல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார், புதன்(இன்று) காலை அவரது உயிர் பிரிந்தது என அறிவிக்கப்பட்டது.

உலக அளவில் அறியப்பட்டவர்

“இர்பான் அனைவராலும் விரும்பப்பட்டவர் மற்றும் நல்ல மனம் உடையவர்”, என நெருங்கியவர்களால் தெரிவிக்கப்பட்டது.

அவர் மிகவும் அடக்கமானவர் மற்றும் பாலிவுட்டில் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் எனவும், அவரின் இறப்பு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்துவதாக உள்ளது மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கான இறங்கல் செய்தி வெளியிட்டுவருகிறார்கள்.

பிரதமர் மோடி இறங்கல்

இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ” இவரின் இறப்பு சினிமாவிற்கும், நாடகத்துறைக்கும் ஏற்பட்ட பெரிய இழப்பு ஆகும். அவர் பல்வேறு துறையில் இருந்த நடிப்பாற்றலால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன், அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்”, என தெரிவித்தார்.

விருது பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர்

இவர், “ஸ்லம் டாக் மில்லியனெயர்(slum dog millionaire)”, “லைப் ஆப் பை(life of pi)”, மற்றும் “ஜுராஸிக் பார்க்(jurasic park)” போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலக அளவில் அனைவராலும் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

நாங்க கேட்கவே மாட்டோம்: ஹலோவில் டிரெண்டாகும் அட்வான்ஸ் HBD அஜித்!

0
Thala Ajith

Thala Ajith; நாங்க கேட்கவே மாட்டோம்: ஹலோவில் டிரெண்டாகும் அட்வான்ஸ் HBD அஜித்! வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ஹலோவில் அட்வான்ஸ் HBD அஜித் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஹலோவில் அட்வான்ஸ் HBD அஜித்  என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் அஜித். தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னேறியவர்.

இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். படங்களில் நடிப்பதோடு சரி, வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியில் வரவே மாட்டார்.

இவரை எப்படியாவது, பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்காதவர்கள் எவரும் இருக்கவே மாட்டார்கள்.

அஜித் எந்தவித சமூக வலைதள பக்கத்திலும் இல்லை. அரசியல் பற்றி எப்போதும் பேசுவதும், அரசியல் கட்சியை ஆதரிப்பதும் இல்லை.

பல தோல்விகளையும் கடந்து இன்று சினிமாவில் சாதித்து வருகிறார். ஒரு நடிகர் மட்டுமல்லாமல், போட்டோகிராஃபர், பைக் மற்றும் கார் ரேஸர், சமையல் வல்லுநர், துப்பாக்கி சுடும் வித்தகர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். தற்போது இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் டுவிட்டர், ஹலோவில் ஹேஷ்டேக் உருவாக்கி அஜித் பிறந்தநாளை இப்போதிலிருந்தே கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக ரசிகர்கள் யாரும் தனது பிறந்த்நாளை கொண்டாட வேண்டாம். மேலும், Common DP வச்சு சிறப்பிக்க வேண்டாம் என்று அஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்படியிருந்தும், நாங்க கேட்கவே மாட்டோம் என்று தல ரசிகர்கள் அவரது புகைப்படங்களை பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும், அட்வான்ஸ் HBD அஜித், Thala Ajith BDay Gala CDP, Thala Birthday Mashup ஆகிய ஹலோ ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் அஜித்தைப் பற்றி கவிதை, அவரது நடிப்பில் வந்த பாடல்கள், புகைப்படங்கள் என்று பலவற்றை பகிர்ந்து வருகின்றனர்.

அஜித் பற்றி ரசிகர் ஒருவர் கூறியிருப்பதாவது;

மே -1 தல திருவிழா

REEL நடிகர்களுக்கு நடுவே ஒரு

REAL மனிதர்…

மிகப் பெரிய சொத்தென பெரும்

ரசிகர் பட்டாளம் கொண்டவர்…

பல அறுவை சிகிச்சை கண்டு

பல தோல்விகளைக் கடந்து

பல வலிகளையும் கண்டு

ரசிகனுக்காக இன்றளவும்

வலிமையுடன் உழைக்கும் நடிகனுக்கு

பிறந்த நாள் வாழ்த்துகள்…

NELLAI SOUTH THALA FANS என்று குறிப்பிட்டுள்ளார்..

3

இப்படியொரு பர்த்டே கிப்ட் கேட்ட பிரியங்கா: கிடச்சுச்சா இல்லையா?

0
Priyanka Deshpande

Priyanka Deshpande; இப்படியொரு பர்த்டே கிப்ட் கேட்ட பிரியங்கா: கிடச்சுச்சா இல்லையா? விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

விஜய் டிவி புகழ் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி பிறந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அதன் பிறகு கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தார்.

சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்த பிரியங்கா மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்துள்ளார். எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார்.

ஆனால், மீடியா துறையில் போராடி வந்த பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில ஆண்டுகள் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில், சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்துள்ளார்.

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்தார். சினிமா காரம் காஃபி என்ற நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

ஏர்டெல் சூப்ப சிங்கர் ஜூனியர் சீசன் 4, ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 5, கிங்ஸ் ஆப் டான்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தனது 30 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரது சகோதரனே வீட்டில் கேக் செய்துள்ளார்.

மேலும், நேற்று ஒருநாள் முழுவதும் பிரியங்காவை கிச்சன் பக்கமே விடவே இல்லையாம். அதோடு, முதல் முறையாக தனது பிறந்தநாளை குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடியுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

தனது பிறந்தநாள் சிறப்பு குறித்து பேசிய பிரியங்கா கூறுகையில், நேற்று இரவிலிருந்து என்னை கிச்சன் பக்கம் யாருமே விடவே இல்லை.

இதுதான் சரியான நேரம் என்று அனைவரையும் அது எடுத்துட்டுவா, தண்ணீர் எடுத்துட்டு வா என்று வேலை வாங்கினேன்.

எனது தம்பி எனக்காக கேக் செய்துள்ளான். ரோஹித் தேஷ்பாண்டேக்குள்ள இப்படியொரு திறமை இருக்குமா என்று நான் யோசிக்கவே இல்லை.

அப்புறம் இரவு 12 மணிக்கு கேக் வெட்டி ஒரே கொண்டாட்டம் தான். அதன் பிறகு மாடிக்கு சென்று பாட்டு பாடி, டான்ஸ் ஆடி ஒரே ஜாலியாக இருந்தோம்.

அம்மா என்னுடைய பிறந்தநாளுக்கு என்ன வேண்டுமென்றால் கேட்டாங்க. அதை வாங்கி தருவதாக சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அதெல்லாம் வேண்டாம்.

நான் இன்றைக்கு ஒரு கிப்ட் கேட்டேன். 2 மணிநேரம் எனது தம்பி என்னுடைய காலை பிடித்து விட வேண்டும். 2 மணி நேரம் பிரவீன் எனக்கு தலையை அமுக்கி விட வேண்டும்.

அம்மா எனக்கு தலையில் எண்ணெய் தேய்த்து விட வேண்டும். தலையை கோதி விட்டுக்கொண்டே இருந்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இதையெல்லாம் நீங்கள் எனக்கு கிப்டா கொடுக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டு இருக்கிறேன்.

அதன் பிறகு பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட பிரியங்கா ஒன்று புளூபெர்ரி ஒயிட் சாக்குல் என்றார். இன்னொரு கேக் மாகாபா ஆனந்த் மனைவி எனக்கு ரெடி பண்ணிய கேக் கொடுத்தாங்க.

நியூஸ் பேப்பரிலும் வாழ்த்து சொல்லியிருக்காங்க. இன்றைக்கு செடியூல் படி பார்த்தால் எனக்கு சூப்பர் சிங்கர் ஷூட்டிங் இருந்தது.

அங்க சென்றிருந்தாலும் கேக் வெட்டி, ஹேப்பி பர்த்டே பாடி கொண்டாடியிருப்போம். அது ஒரு தனி பீலிங்.

கடந்த சில வருடங்களுக்குப் பிறகு எனது வீட்டில், அம்மா, தம்பி உடன் இணைந்து ஒரு நாள் முழுவதும் பிறந்தநாள் கொண்டாடியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இன்றைக்கு வீட்டில் இருக்கும் போது இத்தனை பேர் நமக்காக வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள் என்று எனும் போது ரொம்பவே ஹேப்பி.

இதெற்கெல்லாம் நான் தகுதியானவளா? என்றெல்லாம் எனக்கு எண்ணத் தோன்றியது. இதுவரை யாரையுமே பார்க்கவில்லை என்ற வருத்தம் இருந்தது.

ஆனால், அனைவருமே நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷம் தான். அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு!

0
RK Nagar In Netflix

RK Nagar Movie In Netflix; ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு! இயக்குநர் வெங்கட் பிரபு தனது படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சூர்யாவுக்கு முன் இயக்குனர் வெங்கட் பிரபு தான் தயாரித்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு, புதுப்படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

சிறிய பட்ஜெட் படங்கள் முதல் மாஸ் ஹீரோவின் பெரிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்து படங்களுமே தள்ளிப்போயுள்ளது.

இனி திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

இதன் காரணமாக சிறிய பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

அந்த வகையில், சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இனி சூர்யா மற்றும் அவரது சார்பில் வரும் படங்களுக்கு திரையரங்குகளில் அனுமதி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது.

இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சூர்யாவுக்கு முன்னதாக, இயக்குநர் வெங்கட் பிரபு தனது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆம், வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரித்துள்ள ஆர்கே நகர் படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆர்கே நகர் படத்தில் வைபவ், சனா அல்தாஃப் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தமிழ்நாட்டின் ஊரடங்கால் 1000கிமீ தூரம் தப்பிச்சென்ற 90 மீனவர்கள்

0
1000கிமீ தூரம்

சென்னை: ஊரடங்கால் மீன் பிடிக்க தடை விதித்ததை அடுத்து சென்னையின் காசிமேடு மற்றும் ராயபுரத்தில் தனித்து விடப்பட்ட ஆந்திரா மற்றும் ஒடிசாவை சேர்ந்த 90 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு 1000கிமீ தூரம் கடந்து அவர் அவர் இருப்பிடத்திற்கு சென்றனர்.

துறைமுகம் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ப்பு துறை ஆகியவற்றை நிர்வகிக்கும் சென்னை துறைமுக அதிகாரிகளும் இதை பற்றி தாங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என தெரிவித்தனர்.

கடலோர ரோந்து கப்பல்கள் இவ்வாறு மெதுவாக சென்ற மீனவர்களின் படகுகளை கவனிக்காமல் விட்டு இருக்கலாம் ஏனென்றால் அவர்கள் 4 நாட்கள் கடலிலேயே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இழுவிசை படகுகள்

மேலும் மீனவர்கள் இழுவிசை படகுகளையே கையாண்டதாகவும், ரேடாரில் சிக்காமல் இருக்க கடற்கரை ஓரமாகவே பயணித்து தங்களது எல்லைகளுக்கு சென்றதாக தெரிவிக்கபடுகிறது.

மீனவர்கள் 5 இலட்சம் வரை செலவு செய்து பைபர் படகுகளை வாங்கி இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரிகிறது.

அவ்வாறு பயணம் செய்த மீனவர்கள் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் நிறுத்தி தேவையான மளிகை பொருட்களை வாங்கியதாவும், எரிபொருள் நிரப்பியதாகவும் தெரிவித்தனர்.

மேலும் மனோகரன் என்பவர் படகுகளை பற்றி தெரிவிக்கையில், பைபர் படகுகள், திறந்த நிலை படகுகள் என்றும் இதந்த பயணத்திற்காக இரண்டு வெளிப்புர இயந்திரங்களை பொருத்தியதாகவும், ஒவ்வொரு படகும் ரூ.1.5 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரை அதன் தரத்தை பொருத்து மதிப்பீடு உடையவை எனவும் தெரிவித்தார்.

1000கிமீ தூரம் பயணம்

ராஜ்குமார் என்பவர் தெரிவிக்கையில், பொதுவாக 1000 கிமீ கடற் பயணம் மேற்கொள்வது என்பது சாதாரண மனிதர்களுக்கு கடினமானது ஆனால், கடலில் நீரோட்டம் தெரிந்த , கடலை பற்றி அறிந்தவர்களுக்கு சுலபம் தான், மேலும் வானிலை எங்களுக்கு சாதகமாக இருந்தது இன்னும் சுலபமாக இருந்தது என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து காவல் துறை தரப்பில், ” அவர்கள் கடலில் சாதாரணமாக உலாவியது போல தெரிந்ததாலும் , சிறிய படகுகளை கையாண்டதாலும், சட்டத்துக்கு புறம்பாக ஏதும் செய்வது போல் தெரியாததாலும் அவர்களை நாங்கள் தடுக்க முனயவில்லை”, என தெரிவித்தனர்.

3

கொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்; மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
கொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்

கொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்; மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு, Coronavirus new 6 Symptoms. கொரோனா புதிய அறிகுறிகள்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுதலை பற்றி மூன்று அறிகுறிகள் மட்டுமே மக்களுக்கு தெரியும்.

அதாவது காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற மூன்று அறிகுறிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது புதிய ஆறு கொரோனா வைரஸ் அறிகுறிகள் மத்திய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் புதிதாக பட்டியலிட்டுள்ளது.

இதன்படி,  தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு, குளிர்க்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல் மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைந்து போதல் மற்றும் கண் சிவப்பு ஆகியவை புதிய 6 ஆறிகுறிகள் ஆகும்.

3

35 நாட்கள் லாக்டவுனால் குடியை நிறுத்திட்டாங்க: பார்த்திபன் பாராட்டு!

0
Parthiepan

Parthiepan; 35 நாட்கள் லாக்டவுனால் குடியை நிறுத்திட்டாங்க: பார்த்திபன் பாராட்டு!கொரோனா லாக்டவுன் காரணமாக இதுவரை 35 நாட்கள் டாஸ்மாக் மூடப்பட்ட நிலையில், நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள் என்று நடிகர் பார்த்திபன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுவரை 35 நாட்கள் டாஸ்மாக் மூடப்பட்ட நிலையில், நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திட்டாங்க என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா ஊரடங்கு பற்றியும், நடிகை ஜோதிகாவின் பேசியது சர்ச்சையானது குறித்தும் நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு பிரச்சனையில் மருத்துவர்களுக்கு அடுத்து மிகவும் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஊடகத்துறையினர்.

தங்களது உயிரையும் பணயம வைத்து, செய்திகளை சேகரித்து மக்களிடம் கொடுக்கிறார்கள். இது பாராட்டுதலுக்குரிய விஷயம். அணுசக்தி போரை விட, செய்தித்தாள் சக்தி வாய்ந்தது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறைய பேருக்கு நன்மைகளும் நடந்துள்ளன. ஆம், குடும்பத்தினருடன் பலர் மகிழ்ச்சியுடன் இருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இவ்வளவு ஏன், கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளால் நிறைய பேர் குடிப்பழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். என்னைப் போன்று சிலரை உடற்பயிற்சி செய்யவும் தூண்டிருக்கிறது.

வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு மருத்துவமனைகள் திறந்திருக்கின்றன. ஜோதிகாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் வந்து பார்வையிட்டுள்ளார்.

எங்களைப் போன்ற பிரபலங்கள் செய்கிற உதவிகளை விட, பொதுமக்கள் செய்யும் உதவிகள் பாராட்டுக்குரியது. மனிதம் வளர்ப்போம். இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

டிடிக்கு இப்படி தான் மாவுக்கட்டு போடப்பட்டது – அதிர்ச்சி தகவல்

0
மாவுக்கட்டு

டிடி மாவுக்கட்டு: விஜய் டிவி ஆங்கர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி சமீப காலமாக சோசியல் மீடியாக்களில் பார்க்க முடியவில்லை. அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு உள்ளது.

வீட்டிலேயே இருந்தவருக்கு எப்படி கால் முறிவு ஏற்பட்டது என எல்லோருக்குமே சற்று சந்தேகம் ஏற்பட்டு இருக்கும்.

இந்நிலையில் லாக்டவுன் காரணமாக வீட்டில் இருந்த போது டிடி நடனம் ஆடிக்கொண்டே மாடிப்படியில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் அடிபட்டுவிட்டது.

ஆனால் சில விஷமிகள் டிடி மதுபோதையில் நடனம் ஆடியதாக அதனால் தான் மடிப்படியில் இருந்து கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டதாக கூறி வதந்தி பரப்பி வருகின்றனர்.

டிடி போதையில் இருக்கும் சுஜி லீக் படத்தை வெளியிட்டு அவரை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

டிடி மதுக்குடிப்பதால் தான் அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

உண்மையில் டிடி ரசிகர்களை சந்திக்க முடியாதற்கு காரணம் என் காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது எனக் கூறி உள்ளார். ஆனால் எதனால் ஏற்பட்டது எனக் கூறவில்லை.

3