இர்ஃபான் கான் மரணம்; பத்ம ஸ்ரீ, தேசிய விருதுகள் வென்ற மகா நடிகர், இர்ஃபான் கான் தன்னுடைய 54 வயதில் பெருங்குடல் புற்று நோயால் உயிரழந்தார்.
புது தில்லி: பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானுக்கு நியூரோ எண்டோகிரைன் கட்டி இருப்பது 2018-ம் ஆண்டு கண்டறியப்பட்ட நிலையில், அவர் மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகரின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
53 வயதான நடிகரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது, இதன் விளைவாக அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இவருடன் அவரது மனைவி சுதாபா மற்றும் மகன்களும் உள்ளனர்.
இதனிடையே சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார் என அதிகாரப்பூர்வக ட்விட்டர் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் திரை உலகில் இவருடைய பங்களிப்பு வியக்கத்தக்கது. பல ஹாலிவுட் படங்களும் நடித்துள்ளார். மேலும் இவர் பத்மா ஸ்ரீ மற்றும் தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.
கரீனா கபூர் மற்றும் ராதிகா மதன் இணைந்து நடித்த ஆங்ரேஸி மீடியம் , நியூரோ எண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் இர்பான் கானின் முதல் படம்.
இவர் நடித்த ஸ்லம் டாக் மில்லியனர் பல ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஜூராசிக் வேர்ல்டு, அமேசிங் ஸ்பைடர் மேன் மற்றும் லைஃப் ஆஃப் பை ஆகிய ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
எம்எஸ் தோனியின் எதிர்காலம் ஐபிஎல் தொடரை சார்ந்து இல்லை, முன்னாள் இந்திய வீரரும் கமண்டேடருமான ஆகாஷ் சோப்ரா தோனி எதிர்காலம் பற்றி கூறியுள்ளார்.
கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு எந்த வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காத இந்தியாவின் மூத்த வீரர் தோனி ஓய்வு பற்றியும் எந்த வித தகவலும் கூறாமல் இருந்தார்.
இதனிடையே ஐபிஎல் தொடருக்காக ஒரு மாதத்திற்கு முன்பே சிஎஸ்கே அணிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த கேப்டன் தோனி, கொரொனா பரவலின் காரணமாக ஊருக்கே சென்று விட்டார்.
கொரோனா இந்தியாவில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஐபிஎல் தொடர் கைவிடும் நிலையில் இருக்கிறது. டி20 உலகக்கோப்பையும் நடக்குமா என தெரியவில்லை.
தோனியின் எதிர்காலம் குறித்து சக வீரர்கள் அவ்வப்போது அவர்களின் கருத்தை கூறி வருகின்றனர். இந்தியா முன்னாள் ஆகாஷ் சோப்ரா தோனியின் எதிர்காலம் பற்றி அனைவரும் தவறாக புரிந்து வைத்துள்ளனர்.
அவர் இந்தியா அணிக்கு திரும்புவதற்கும் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பலாம் என நினைத்தால் அவரை தேர்வுக்குழு உடனே எடுத்துக்கொள்ள தயாராக உள்ளது. அவர் கையில் தான் அவர் எதிர்காலம் உள்ளது என கூறியுள்ளார்.
மே மதத்தில் மீண்டும் கார் உற்பத்தி துவக்கப்படும் என மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் ஆகிய கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
புதுடெல்லி: ஒரு மாதத்திற்கும் மேலாக கோவிட்-19 ஊரடங்கு நாட்டின் முதல் இரண்டு முன்னணி வாகன உற்பத்தியாளர்களை, தங்களின் நடவடிக்கைகளை நிறுத்திவைக்கும் நிலைக்கு தள்ளியது.
மாருதியும், ஹூண்டாயும், குஜராத்தில் தனது தொழிற்சாலையை மீண்டும் திறந்து வைத்த எம்.ஜி.மோட்டார் இந்தியாவின் வழியை பின்பற்றி, தங்களின் தொழிற்ச்சாலைகளையும் இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகியவை அரசாங்கத்தின் அனுமதிகளைப் பொறுத்து உற்பத்தியை 20-30% உடன் தொடங்கும். மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் நுகர்வோர் தேவையை பொறுத்து உற்பத்தி உயர்த்தப்படும்.
குறைந்த அளவில் உற்பத்தி
மாருதி மற்றும் ஹூண்டாய் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது இந்தியாவின் வாகனத் தொழிலுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் அவை உள்நாட்டு பயணிகள் வாகன சந்தையில் கிட்டத்தட்ட 70% கட்டுப்படுத்துகின்றன.
மே மாதத்தில் மாருதி வெறும் 45,000 வாகனங்களை உற்பத்தி செய்யும், நிலைமைகள் உகந்ததாக இருந்தால் ஜூன் மாதத்தில் 65,000 வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மாருதி பொதுவாக ஒவ்வொரு மாதமும் சராசரியாக உற்பத்தி செய்யும் 150,000 வாகனங்களில் இந்த எண்ணிக்கை பாதிக்கும் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மே மாதத்தில் 12,500-13000 யூனிட்டுகளில் தொடங்கி அளவுகளை படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்தநிறுவனம் ஒவ்வொரு மாதமும் 60,000 வாகனங்களை சென்னையில் உற்பத்தி செய்கிறது.
பெரும்பாலான பிற வாகன உற்பத்தியாளர்கள் மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகியவற்றைப் பின்தொடர வாய்ப்பில்லை, மேலும் சிலர் மே அல்லது ஜூன் மாதங்களில் உற்பத்தியை எப்போது தொடங்குவது என்பது குறித்து மட்டுமே முடிவு செய்யலாம்.
மானேசரில் மறுதொடக்கம்
மாருதி உற்பத்தியை மறுதொடக்கம் செய்ய ஹரியானாவில் உள்ள தனது மானேஜர் தொழிற்சாலையைத் தேர்வுசெய்ய வாய்ப்புள்ளது. வழக்கமான மூன்றுக்கு பதிலாக ஒரே ஒரு ஷிப்ட் மட்டுமே இருக்கும்.
மலிவு ஹேட்ச்பேக்குகளை மையமாகக் கொண்டே பணிகள் நடைபெறும். நிறுவனம் அதன் விற்பனையாளர்களின் தயார் நிலை குறித்தும் விசாரித்து வருகிறது. மேலும் புனேவைச் சேர்ந்த அவர்களில் சிலர் சிவப்பு மண்டலத்தில் இருப்பதால் முடியாமல் போகலாம்.
சமாளிக்க வேண்டிய சிக்கல்கள்
“ஆரம்ப கட்ட திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. அவை, உள்ளூர் அதிகாரிகளின் விதிமுறைகளை சார்ந்தே செயல்படுத்தப்படும். சில சப்ளையர்கள் குருகிராமிலிருக்கின்றனர்.
அந்த பகுதி ஹாட் ஸ்பாட் ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், “உற்பத்தியாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அரசு வழங்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரசு அனுமதி
மாருதி திங்களன்று தனது குருகிராம் ஆலையில் பராமரிப்பு தொடங்க ஹரியானா அரசிடம் அனுமதி பெற்றது.
திங்களன்று மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் மற்றும் செவ்வாய்க்கிழமை எம்ஜி மோட்டருக்கு அனுப்பிய மின்னஞ்சல் வினவலுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை.
சவால்களும் சிக்கல்களும்
கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் இயந்திரங்கள் நன்கு எண்ணெயிடப்பட்டிருந்தன, ஆனால் நீடித்த பணிநிறுத்தம் முழு விநியோகச் சங்கிலியையும், மீண்டும் இயக்கும் சவாலையும் அதிகரிக்கும்.
“எந்த கோரிக்கையும் இல்லை, ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு விஷயங்கள் இயல்பு நிலைக்கு வருவதால் திடீரென்று ஏற்படலாம். இன்று, அனைத்து மாநிலங்களும் அவற்றின் தனித்துவமான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன.
எனவே தேவை ஒரே மாதிரியாக இருக்காது. வழங்கல் மற்றும் தேவை தரப்பில் இருந்து பல சவால்கள் உள்ளன, “என்று ஐ.எச்.எஸ். இணை இயக்குனர் புனீத் குப்தா கூறினார்.
கொரோனா தடுப்பூசி செப்டெம்பர் இறுதியில் வெளிவரும் விலை ரூ.1000, கொரோனா தடுப்பூசி பற்றி புனேவில் இருக்கும் இந்திய ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.
உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனாவைரஸ் பரவலால் உலகமே அச்சம் கொண்டுள்ளது. இதன் பரவலை தடுக்க இயலாமல் திணறி வருகிறது.
இதற்கு தடுப்பூசி கண்டறிய உலகத்தில் இருக்கும் அனைத்து மருத்துவக் குழுக்களும் ஆய்வகங்களும் போட்டி போட்டு முயற்சி செய்து வருகிறது.
100க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தயாராக இருக்கிறது. இந்த நிலையில் புனேயில் இருக்கும் செரும் நிறுவனம் பிரிட்டன் நாட்டுடன் சேர்ந்து மருந்து தயாரித்து வருகிறது.
இந்த ஆய்வின் தலைவர் பூனம் வாலா இதைப்பற்றி கூறுகையில், நாங்கள் தயாரித்த தடுப்பூசி மனிதர்களிடம் செலுதப்பட்டு ஆய்வு நடதப்பட்டு வருகிறது.
வருகிற செப்டெம்பர் இறுதியில் வெளியிடுவோம் என நம்புகிறோம். இதன் விலை தோராயமாக ரூ.1000 இருக்கும்.
Varalaxmi Sarathkumar; கொரோனா ஊரடங்கு நேரத்தில் பெண்கள் பலரும் கொடுமைகளை அனுபவித்து வருவதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
பெண்கள் கொடுமைகளை சந்தித்து வருவதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்டவுன் காரணமாக சாதாரண ஜனங்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருக்கும் பிரபலங்கள், சமையல் செய்வது, ஓவியம் வரைவது, வீட்டை சுத்தம் செய்வது, உடற்பயிற்சி, தோட்ட வேலை செய்வது, யோகா, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் பெண்கள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வீட்டில் இருக்கும் பெண்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இது பெண்களுக்காக ஒரு முக்கியமான விஷயம். பல பெண்கள் இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்தில் குடும்ப கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிலிருந்து தப்பிக்க முடியாமல் மாட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு உதவி எண் உள்ளது.
1800 102 7282 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் கண்டிப்பாக உதவி கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் இந்த நம்பரை கொடுத்து உதவி செய்யுங்கள்.
இந்த விஷயம் வயது, செல்வாக்கு, படித்தவர், படிக்காதவர் என்பது பார்த்து வரக் கூடிய விஷயமல்ல. இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
எந்தப் பெண்களுக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே உடனடியாக இந்த எண்ணை அனைவருக்கும் பகிருங்கள் என்று நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
ஏற்கனவே பெண்களுக்காக சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Oviya; களவானி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஓவியா இன்று தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஓவியா பிறந்தநாள் Happy Birthday Oviya இன்று.
கேரளா மாநிலம் திருச்சூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி பிறந்தவர் நடிகை ஓவியா.
மாடல் மற்றும் நடிகை. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
Kangaroo என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன் பிறகு தமிழில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் உடன் இணைந்து களவானி படத்தில் நடித்தார்.
பள்ளி மாணவியாக நடித்த ஓவியாவிற்கு இந்தப் படம் தமிழில் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதோடு, புதுமுக நடிகை போன்று இல்லாமல், அனுபவம் வாய்ந்த நடிகை போன்று தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
அடுத்து மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், முனி காஞ்சனா 3, களவானி 2, 90 எம்.எல். ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, ராஜ பீமா என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது இடையில் ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
கவர்ச்சி மற்றும் நேர்மை குணத்தால் ரசிகர்களின் அன்பைப் பெற்றார். ஓவியா ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்களுக்கு உண்மையாக இருந்தார்.
இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு விதவிதமாக ஹேர்ஸ்டைலை மாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ்வை சுற்றி சுற்றி வந்து காதலித்தார். ஆரவ்வும், ஓவியா மீது பாசமாகத்தான் இருந்தார். அவரும் காதலித்தார்.
மருத்துவ முத்தம் கூட கொடுத்தார். ஆனால், கடைசியில் அப்படி எதுவும் இல்லை என்று கூறிவிட்டார்.
எப்போதும் ஓவியா ஓவியா என்று கூறும் அளவிற்கு புகழின் உச்சம் பெற்றார். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.
தற்போது ஓவியா பற்றி ரசிகர்கள் இன்னமும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். ஓவியா நடிப்பில் வந்த படங்கள் ஹிட் கொடுக்கவில்லை. அடுத்தடுத்த படங்களின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஓவியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஓவியா பிறந்தநாளை முன்னிட்டு #HappyBirthdayOviya என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
விளம்பரம் இல்லாத மக்கள் சேவையில் கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் செய்துள்ள செயல் மக்கள் மத்தியில் அவரது மதிப்பை மேலும் உயர்த்தி உள்ளது.
கேரளா: கேரள அரசாங்கம் சார்பில் அண்மையில் கேரள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டுள்ளது. அதில் 19 பொருட்கள் இருந்தன.
இந்த பொருட்கள் ஒரு வெள்ளை பையில் வைத்து ஒரு தொகுப்பாக அனைவருக்கும் தனித்தனியே வழங்கப்பட்டன. அதில் சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை, டீ தூள் உள்ளிட்டவையும் அடங்கும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எந்த பொருளிலும் அரசாங்க முத்திரையோ, முதல்வர் பெயரோ ஏதும் பொறிக்கப்படவில்லை. அனைத்து பொருட்களும் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ள மக்களுக்கு தரமான பொருட்களை அரசே இலவசமாக வழங்கினாலும், அதில் முதல்வர் படமோ அரசின் எம்பலமோ இடம்பெற வில்லை.
தொகுப்பு இருந்த கைப்பையும் வெள்ளை நிறத்தில் எந்த எழுத்துக்களும் பொறிக்கப்படாத துணிப்பை தான். பொருட்களிலும் அந்தந்த பிராண்ட் பெயர்கள் மட்டுமே இருந்தது.
அரசால் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துமே அரசின் முத்திரை, ஆளும் முதல்வரின் முகம் அல்லது கட்சி நிறுவனரின் முகம் அல்லது முடிந்தால் அனைத்துமே கூட பொறிக்கப்பட்டு ஆளும் கட்சியின் நிறத்தில் தான் வழங்கப்படும்.
அது அரசால் மக்களுக்கு வழங்கப்பட்டது என தெரிவதற்கான அரசியல் ஆதாயமாகவே பார்க்கப்படுகிறது. மக்களுக்கு உதவியோ, இலவசமோ எதுவானாலும் அரசின் பெருமை கட்டாயம் அந்த பொருள் பேசும்.
இலவசம், நிவாரணம், உதவி இப்படி பெயர்கள் எதுவானாலும் அதை மக்களுக்கு கொடுக்கும்போது, பொருளைவிட பொருளின் மேலுள்ள அடையாள விளம்பரமே பளிச்சென்று தெரியும்.
நம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாம் எதையும் இலவசமாக கொடுக்கவில்லை. மாறாக இவையெல்லாம் அவர்களின் உரிமை என்பதை உணர்ந்த அரசால் மட்டுமே விளம்பரம் தேடாமல் சேவை செய்ய முடியும்.
ஆனால் கேரளாவில் ஆளும் பிரனாயி விஜயன் அரசு மக்கள் நலனை சார்ந்த அரசு என்று இதன் மூலம் நிரூபித்துள்ளது. மற்ற அரசுகளுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டுதலாக அமையட்டும்.
மக்கள் இதை பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மக்களின் நலனே ஒரு அரசை சாதிக்க செய்யும் என்பதை உணர்ந்து பணியாற்றும் கேரள முதல்வருக்கு பாராட்டுக்கள்.
இர்ஃபான் கான் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார் என்பதை அவரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். விரைவில் அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புது தில்லி: பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானுக்கு நியூரோ எண்டோகிரைன் கட்டி இருப்பது 2018-ம் ஆண்டு கண்டறியப்பட்ட நிலையில், அவர் மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகரின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, “பெருங்குடல் தொற்று காரணமாக இர்ஃபான்கான் மும்பையின் கோகிலாபெனில் அனுமதிக்கப்பட்டார் என்பது உண்மைதான்.
அவர் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார். அவரது வலிமையும் தைரியமும் அவருக்கு இதுவரை போராடவும் உதவியது.
நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அவரது மிகுந்த மன உறுதி மற்றும் அவரது அனைத்து நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகளால், அவர் விரைவில் குணமடைவார்” என்று அவர் கூறினார்.
53 வயதான நடிகரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது, இதன் விளைவாக அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இவருடன் அவரது மனைவி சுதாபா மற்றும் மகன்களும் உள்ளனர்.
இர்பான்கானின் தாய் சயீதா பேகம் தனது 95 வயதில் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை காலை இறந்தார். மும்பையில் இருந்த இர்ஃபான், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளால் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.
வீடியோ கான்பரன்சிங் மூலம் தனது மறைந்த தாய்க்கு இறுதி மரியாதை செலுத்தினார் என்பதை ANI செய்தி நிறுவனம் தனது செய்தியில் வெளியிட்டிருந்தது.
நடிகருக்கு மார்ச் 2018-இல் நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது தெரிய வந்தது. ஒரு சில நாட்களுக்கு பின்னர், அவர் தனது சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.
பிப்ரவரி 2019-இல் இந்தியா திரும்பிய அவர் தனது சுருக்கமான பயணத்தின் போது ஆங்ரேஸி மீடியத்தை படமாக்கினார் . சில மாதங்களுக்குப் பிறகு, சிகிச்சையைத் தொடர லண்டனுக்கு சென்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பினார். கரீனா கபூர் மற்றும் ராதிகா மதன் இணைந்து நடித்த ஆங்ரேஸி மீடியம் , நியூரோ எண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் இர்பான் கானின் முதல் படம்.
அதற்கு முன், துல்கர் சல்மான் மற்றும் மிதிலா பால்கர் இணைந்து நடித்து 2018-ஆம் ஆண்டு வெளிவந்த கார்வான் படத்தில் அவர் நடித்திருந்தார்.
இர்ஃபான்கான் திரைப்பட வரலாற்றில் மக்பூல், ஹாசில், பான் சிங் தோமர், ஹைதர் , பின்கு, தல்வார் மற்றும் அகாடெமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சலாம் பாம்பே ஆகிய படங்கள் முக்கியமானவை.
சர்வதேச திரைப்படங்களாக தி நேம்சேக், லைஃப் ஆஃப் பை, இன்ஃபெர்னோ, ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் தி வாரியர் போன்றவற்றிலும் அவர் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
இந்தியா வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஆர்டர் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்றினை விரைவில் கண்டறிய உதவும் கருவிகளை இந்தியா சீன நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் செய்திருந்தது.
இந்தியா : அண்மையில் கொரோனா தொற்றின் பரவுதல் மற்ற உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் அதன் தாக்கத்தை நடத்தி வருகிறது. இதனால் தொற்றினை கண்டறியும் சோதனை கருவிகளின் தேவை உள்ளது.
இதனால் துரித சோதனை கருவிகளை இந்தியா சீனாவிடம் வாங்கி இருந்தது. இதனிடையே சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு ஐ.சி.எம்.ஆர் திங்களன்று மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டது.
இரண்டு சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட COVID-19 ரேபிட் டெஸ்ட் கருவிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான இந்தியாவின் முடிவு குறித்து சீனா “ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது” என்று சீனா இன்று கூறியது.
ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு, பணம் செலுத்தப்படாததால், இந்தியாவுக்கு தவறான டெஸ்ட் கிட்களை வழங்கிய சீன நிறுவனங்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்க போவதில்லை என்று அரசு அறிவித்திருந்தது
“மதிப்பீட்டு முடிவுகள் மற்றும் ICMR எடுத்த முடிவுகளை நாங்கள் மதிக்கின்றோம். ஏற்றுமதி செய்யப்பட்ட மருத்துவ பொருட்களின் தரத்திற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது” என்று சீன தூதரக பேச்சாளர் கூறினார்.
இரண்டு சீன நிறுவனங்களான குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸன் கண்டறிதல் ஆகியவற்றால் செய்யப்பட்ட சோதனை கருவிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) “குறைவான செயல்திறன்” கொண்டவை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கிட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தும்படி, அவற்றை சப்ளையர்களுக்கு திருப்பி அனுப்புமாறு உயர் மருத்துவ அமைப்பு மாநிலங்களுக்கு கூறியது.
ஒரு அறிக்கையில், சீன தூதரக பேச்சாளர் “சில நபர்கள் சீன தயாரிப்புகளை தவறு என்று முத்திரை குத்துவது நியாயமற்றது மற்றும் பொறுப்பற்றது” என்று கூறியதுடன், இதை கூறியவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இந்த மாத தொடக்கத்தில், இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து சுமார் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன
ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்த பின்னர் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் வசிக்கும் ஒவ்வொருவரும் அல்லது அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உள்ள பகுதிகளுக்கு சோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
சீனாவில் தயாரிக்கப்பட்ட சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா பதிலளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு பெய்ஜிங் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், மக்களைப் பாதுகாப்பதற்கான சவாலை சமாளிக்க புது தில்லியுடன் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.
ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் புதிய சோதனை கருவிகளைப் பற்றி புகார் அளித்தன, அவற்றில் 5.4 சதவீதம் துல்லியம் மட்டுமே இருப்பதாகக் கூறினர்.
அரசாங்கத்தின் கொள்முதல் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
Vadivelu Lathi Charge; கடவுள் சோதிக்கிறான்: அனைவரும் பாஸாக வேண்டும்: வடிவேலு வீடியோ! கடவுள் அனைவரையும் சோதிப்பதாகவும், இந்த சோதனையில், பாஸ் ஆக வேண்டும் என்றும் வடிவேலு கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்தும், போலீசாரின் தடியடி குறித்தும் வடிவேலு அடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 2000 அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 14 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு கொரோனா தாக்கம் காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் தொடர்ந்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காமெடி நடிகர் வடிவேலு புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னமோ நடக்கிறது. கடவுள் இறங்கிவிட்டார்.
கடவுள் எல்லாரையும் சோதிக்கிறார். இந்தச் சோதனையில் அனைவரும் பாஸ் ஆக வேண்டும். கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கிறது.
இந்த சோதனை மூலமாக நமக்கு பரீட்சை வைத்திருக்கிறான். அந்த பரீட்சையில், ஒட்டுமொத்த மனித இனமும் ஒன்று சேர வேண்டும். போலீஸ் யாரையும் வேண்டுமென்றே அடிப்பதில்லை.
சரியான காரணத்தைச் சொன்னால் வெளியே விடுகிறார்கள். அவர்கள் நமக்காக உயிரைப் பணயம் வைத்து சாலைகளில் நின்றுகொண்டு உதவி செய்கிறார்கள்.
கலவரம் நடந்தால்தான் லத்தி சார்ஜ் பண்ணனும். ஆனால் இப்போது உயிரைக் காப்பாற்றுவதற்கு லத்திசார்ஜ் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது. பாதுகாப்பாக இருங்கள். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.