Andrea Lockdown Shorfilm; கொரோனா லாக்டவுன் குறும்படத்தில் ஆண்ட்ரியா: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! கொரோனா லாக்டவுன் என்ற குறும்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். அதற்கான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுனில் ஆண்ட்ரியா ஒரு குறுப்படத்தில் நடித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் பிரபலங்கள் பலரும் எப்போதும் பிஸியான முறையில் தங்கள் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
ஆம், வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது, ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடுவது, ஓவியம் வரைவது, உடற்பயிற்சி என்று எப்போதும் பிஸியாகவே இருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா தனது வீட்டிலேயே ஐபோனில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். அதற்கு லாக்டவுன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் குறும்படத்தை ஆதவ் கண்ணதாசன் இயக்கியுள்ளார். இந்த நிலையில், அந்த லாக்டவுன் குறும்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த லாக்டவுன் காலத்தில் நாட்டி என்னவெல்லாம் நடந்தது, பிரபலங்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக இந்த குறும்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
லாக்டவுன் குறும்பட போஸ்டரை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்த லாக்டவுன் காரணமாக தான் சமைக்க கற்றுக்கொண்டதாகவும், நிம்மதியாக தூங்க முடிகிறது என்றும், மேடை ஏறி பாடுவதற்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று சாந்தமாக இருக்க வேண்டிய நாள். சுமாரான நாளாக இருக்கும். வேலையில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். லாபகரமான நாளாக இருக்கும். மன அழுத்தம் வர வாய்ப்புண்டு.
இன்று நிதானமாக செயலாற்ற வேண்டிய நாளாகும். உணர்ச்சி வசபடுதலை தவிர்க்கவும். தொழில் முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பண வரவு பெரிதாக இருக்காது.
இன்று அனைவரிடமும் நல்லாதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். சந்தோஷமாக இருப்பீர்கள். பணிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப சூழல் சிறப்பாக காணப்படும். கூடுதல் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.
இன்றைய தினம் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய ஏற்ற தினமாகும். உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு. உறவுகளால் நன்மைகள் வந்து சேரும். குடும்ப பொருளாதாரம் மேம்பாடு அடையக்கூடிய நாளாக இருக்கும்
இன்று மனது குழப்பமான சூழலில் இருக்கும். சவால்களை சந்திக்க நேரிடும். முயற்சிகள் இருந்தால் நாள் முடிவில் நல்ல பலன்களை பெறலாம். வீட்டில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. புத பகவானை வழிபடுங்கள்.
இன்றைய தினம் சுகமான நாளாக இருக்கும். உங்களின் வெற்றியை கொண்டாட வேண்டிய நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலைகள் விரைவாக முடிந்து லாபம் பெற்று தரும். அற்புதமான பலன்கள் இருக்கும்.
இன்று பெருமை படும் செயல்களை செய்வீர்கள். காதலுக்கு உகந்த நாளாக இருக்கும். பெரிய அளவிலான லாபம் கிடைக்கும். குழந்தைகள் கல்வி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறந்த நாளாக இருக்கும்
இன்று அதிகமான போட்டிகள் காணப்படும் நாளாக இருக்கும். வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவையாகும். குடும்பத்தில் சிறு மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தேவையான தனவரவு குறைவாக இருக்கும்.
இன்று துவங்கும் காரியங்கள் வெற்றியாக முடியும். எதிர்பாராத அனைத்து நன்மைகளும் வந்து சேரும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படக்கூடிய நாளக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும் நாளாக இருக்கும்
இன்றைய தினம் சுப செலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். தொழிலில் லாபம் மேம்படும். வீட்டில் அன்பும் அரவணைப்பும் காணப்படும். சுப காரியங்கள் துவங்கலாம். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
29/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
இன்று வளர்பிறை சஷ்டி – Today Shasti Special Article: முருக பக்தர்களுடன் துணையிருப்பார் பாம்பன் சுவாமிகள்! முருக பக்தரை பாம்பன் சுவாமிகள் சூட்சும வடிவில் காத்த உண்மை சம்பவம்.
தமிழ் கடவுள், அழகன், குகன், கார்த்திகேயன் என்று பல திருப்பெயர்களில் துதிக்க படுபவன் முருகன். முருகனின் கருணைக்கு எல்லையே இல்லை. அதனால் தான் அவனை சரணாகதி அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான்கள் பலருண்டு.
அருணகிரிநாதர், வள்ளலார், கச்சியப்ப சிவாசாரியார் என பல மகான்கள் முருகனிடம் ஐக்கியமாகி மக்களுக்கு இன்றளவும் தாங்கள் பெற்ற அருளாற்றலை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் பிறந்து. குன்று தோறும் இருக்கும் குமர கடவுளின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தி சைவ நெறியை நிலை நாட்டிய மகான் தான் “பாம்பன் சுவாமிகள்“.
யார் இந்த பாம்பன் சுவாமிகள்?
பாம்பன் சுவாமிகள் மே மாதம் 30ஆம் தேதி, 1929 அன்று குமரனுடன் கலந்தார். இவரது ஜீவ சமாதி சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ளது.
சண்முக கவசம், பஞ்சாமிர்த வர்ணம், குமார் ஸ்தவம் என மொத்தம் 6666 பாடல்களை முருக கடவுளிற்கு பாடியுள்ளார். முருகன் அருளால் பல்வேறு தொண்டுகளையும், சேவைகளையும் புரிந்துள்ளார்.
இவர் வாழ்ந்த காலம் முதல் இன்று வரை முருக பக்தர்களை சூட்சும ரூபத்தில் காத்து வருகிறார் என்பது அனுபவ பூர்வ உண்மை. பலரது வாழ்நாளில் சுவாமிகள் சூட்சும வடிவில் வந்து அருள்புரிந்துள்ளார்.
அப்படி அவரை உணர்ந்த பக்தர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வை நம்முடன் பகிர்ந்து உள்ளார் அதனை காண்போம்.
முருக பக்தர்களை காப்பார் பாம்பன் சுவாமிகள்!
“நான் முருகன் கோவிலில் சிறு தொண்டுகள் புரிந்து வருபவன். பணி நிமித்தமாக 2014-ஆம் ஆண்டு சென்னைக்கு செல்லும் நிலையால் சேலத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டி இருந்தது.
நான் பணியில் இருந்த அலுவலகம் அருகில் தான் திருவான்மியூர். பல முறை பாம்பன் சுவாமிகளின் சமாதியை கடந்து சென்றுள்ளேன்.
ஆனால் அவரை பற்றி அப்பொழுது பெரிதும் அறியாததால் ஏதோ ஒரு சாமியார் சமாதி என்று எண்ணி ஒரு நாள் கூட உள்ளே சென்றது இல்லை.
இப்படியே நாட்கள் கழிந்தது. ஒரு நாள் பணி நிமித்தமாக திருவான்மியூர் செல்ல வேண்டி இருந்தது வழக்கம் போல் சுவாமிகள் கோவிலை கண்டும் காணாமல் போய் கொண்டு இருந்தோம் நானும் என் நண்பனும்.
பணி முடிந்து திரும்பி வரும் போது எதிர்பாராத விதமாக பயங்கர மழை. தற்போது சுவாமிகள் இருக்கும் இடத்திற்கு இரண்டு வீதிகள் தள்ளி ஓரிடத்தில் மழைக்கு ஒதிங்கினோம்.
பேய் மழை என சொல்லும் அளவிற்கு மழை அதிகரித்து தெரு முழுதும் தண்ணீர் ஆர்பரித்து ஓடியது.
சென்னை மழை
அனைவருக்கும் தெரியும் சென்னை மழை என்றால் எப்படி நீர் ஓடுமென்று. ஒரு மணி நேரமாக நகர இயலாமல் தவித்தோம். ஓடும் தண்ணீரின் அளவும் ஏறி கொண்டே போனது.
அப்பொழுது எங்கிருந்தோ ஒரு கார் வந்து நாங்கள் இருக்கும் இடத்தில் வந்து நின்றது. கார் ஓட்டி வந்தவர் யாரென்றும் தெரியாது. காரில் ஏறுமாரு வந்தவர் கூறினார்.
எங்களுக்கு ஆச்சரியம் சென்னையில் கேட்டாலே உதவி செய்ய எவரும் வரமாட்டனர். கேட்காமல் உதவுகிறாரே என்று. எங்கள் மனதில் சிறு தயக்கமும் இருந்தது. இருந்தாலும் வடிந்து ஓடும் நீரின் அளவும் வேகமும் அதிகரித்ததால் காரில் ஏறி கொண்டோம்.
உள்ளே போனதும் இன்னொரு ஆச்சரியம் காரணம் காரில் உள்ளே எப்பொழுதும் கண்டும் காணாமல் போகும் அதே சாமியார் படம். ஆம், பாம்பன் சுவாமிகள் திருப்படம் தான் அது.
கார் ஓட்டி வந்தவர் நாங்கள் எங்கு செல்ல வேண்டும் என கேட்டு காரை ஓட்ட துவக்கினார். நாங்கள் பயணித்த சிறு நிமிடங்களில் நாங்கள் நின்று கொண்டு இருந்த இடத்தில் ஒரு ஆளை இழுத்து செல்லும் அளவு தண்ணீர் பாய்ந்து ஓடியது.
இந்நேரம் அங்கு இருந்திருந்தால் எங்கள் நிலை எண்ணவாகி இருக்குமென்று யோசித்தேன். அப்பொழுது கூட சுவாமிகளின் கருணை என நான் உணரவில்லை.
பத்திரமாக இருப்பிடம் கொண்டு சேர்த்தார். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி அந்த கார் உரிமையாளர் உதவினார்.
பின் சில நாட்களில் செய்திதாளில் சுவாமிகளை பற்றி கட்டுரை கண்டேன் “முருக பக்தரை காப்பார் பாம்பன் சுவாமிகள்” என்று. பக்தர்கள் ஆபத்தில் அவர் காத்த நிகழ்வுகளை படித்து அதிர்ந்தேன்.
அப்போது தான் புரிந்தது எமது முருகபக்திக்கு சுவாமிகளே உயிர் காக்க செய்த உதவியென்று. கண்ணீர் மல்க அவருக்கு நன்றி செலுத்தினேன்.
அவரின் புகைப்படம் அன்றே காரில் எனக்கு இதை உணர்த்தியது அதை நாம் தான் புரிந்து கொள்ளவில்லை என்று உணர்ந்தேன்.
யாரென்று அறியாத எனக்கு அதன் பிறகு தான் அவரை பற்றி படிக்க இயன்றது. அனைவரும் கூறுவது முருக பக்தருக்கு சூட்சும வடிவில் வந்து சுவாமிகள் உதவுவார் என்பது உண்மை.
இது எதேர்ச்சியாக நடந்த விடயம் என நினைக்கலாம். ஆனால் ஆபத்தில் இருந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே அவர் கருணையை உணர முடியும்.
அன்று முதல் சுவாமிகளின் பக்தன் ஆனேன்” என்று அந்த முருக பக்தர் நிகழ்வினை கண்ணீர் மல்க கூறி முடித்தார்.
ஆம், நாம் வாழும் தமிழகத்தில் இது போலவே சித்தர்களும் மகான்களும் பல்வேறு விதமாக மக்களை நல்வழி படுத்தவும், ஆபத்தில் சூட்சும ரூபத்தில் உதவியும் வருகின்றனர். அதை உணந்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
சித்திரை வளர்பிறை சஷ்டியான இன்று எல்லாம் வல்ல முருகனையும், கருணை கடலான பாம்பன் சுவாமிகளையும் இந்த பிணிகள் நிறைந்த காலத்தில் இருந்து உலகை காக்க பிராத்திப்போம்.
சீனாவின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவிக்கையில் கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க முடியாது, இந்த வைரஸ் ப்ளு(Flu) காய்ச்சலை போல மீண்டும் கொரோனா வரும் வாய்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்தனர்.
ஸார்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கொரோனா வைரஸ்
17 வருடங்களுக்கு முன் வந்த சார்ஸ்(SARS) வைரஸ் போல் இது இல்லை எனவும், இது எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் பரவுவதாலும், கண்டுபிடிக்க கடினமாக உள்ளதாலும் இதன் பரவல் மீண்டும் வரக்கூடும் என மருத்துவ விஞ்ஞானிகள் குழு பீஜிங்கில் திங்கட்கிழமை நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது.
சார்ஸ்(SARS) வைரஸ் பரவினால் பாதிக்கப்பட்டவர் உடல்நிலை மோசமாகும், அவ்வாறு பாதிக்கப்பட்டவரை தனிமை படுத்தினால் சார்ஸ் பரவாமல் எளிதாக தடுக்க முடியும். ஆனால், அதற்க்கு எதிர்மாறாக கொரோனா தற்போது கட்டுபடுத்தப்பட்ட பின்னரும் சீனாவில் ஏராளமானோர் எந்த அறிகுறியும் இல்லாமல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதனின் உடலில் எந்த அறிகுறியும் இல்லாமல் வாழும் வைரஸ்
“இந்த வைரஸ் பரவலானது மனிதர்களின் உடலுக்குள் அதிக நாட்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்து, காலம்பார்த்து பரவும் வல்லமை உடையது,” என ஜின் குயி, எனும் சீன மருத்துவ அறிவியல் கழக(Chinese Academy of Medical Sciences)மூத்த விஞ்ஞானி தெரிவித்தார்.
உலக அளவில் 30 இலட்சம் பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது மற்றும் 210,000க்கும் அதிகமானோர் இதனால் உயிரை இழந்துள்ளது குறிப்பிடதக்கது.
கோடை வெப்பத்திலும் வாழும் வைரஸ் கொரோனா
“வைரஸ்ஸை வெப்பநிலை பாதிக்கும் என்றாலும் 56 டிகிரி செல்ஸியஸில் 30 நிமிடங்கள் இருந்தால் அது சாத்தியம், ஆனால் அந்த அளவு வெப்பநிலை பொதுவாக காண்பது அரிது”, என பெக்கிங்க் பல்கலைகழகத்தின் (Peking University) நோய் பரவல் துறையின்(Head of the infectious diseases department) தலைவர் வாங் குய்கியாங்க்(Wang Guiqiang) தெரிவித்தார்.
“அதனால், கோடை காலத்திலும் நோய் தாக்குதலின் பாதிப்பு இருக்கும்”
எனவும் தெரிவித்தார்.
Vijay Dual Role; என்னது மாஸ்டர் படத்தில் விஜய் டூயல் ரோலா? மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.
விஜய் மாஸ்டர் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.
முதல் முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் காம்பினேஷனில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.
இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், ஆண்ட்ரியா, சாந்தணு, நாசர், ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷான், பிரிகிதா, ரம்யா சுப்பிரமணியன், அர்ஜூன் தாஸ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சத்யன் சூரியன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கடந்த 9 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா காரணமாக திரையரங்குகளும் மூடப்பட்டன. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகையால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில், பேசிய விஜய் சேதுபதி இதில், நானும் ஒரு ஹீரோ தான்.
எனக்கு அவர் வில்லன் என்றால், அப்போ நானும் ஹீரோ தானே. இது ஹீரோ சப்ஜெக்ட் என்றார்.
அப்போது, விஜய் சேதுபதியும், விஜய்யும் நண்பர்களாக இருந்த நிலையில், அவர்களுக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையில் மோதல் உருவாகும் படி கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
அதோடு, விஜய் சேதுபதிக்கு சகோதரியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், மாஸ்டர் படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதுவரை தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
அண்மை காலமாக விஜய் இரட்டை வேடங்கள் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மெர்சலில் மூன்று வேடங்கள், பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த இரு படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போன்று மாஸ்டர் படத்திலும் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது படம் வெளியானால் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசிங்டன்: வுகான் நகரத்தில் இருந்து உலகம் முழுவதும் வைரஸை சீனா அலட்சியத்தால் பரப்பி உள்ளது, இதனால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு சீனாவிடம் நஷ்டஈடு கேட்போம் என திங்கட்கிழமை டிரம்ப் தெரிவித்தார்.
நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை
” நாங்கள் சீனாவால் சந்தோசமாக இல்லை”, என வெள்ளை மாளிகையில் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ” நாங்கள் இந்த மொத்த சூழ்நிலையினால் சந்தோசமாக இல்லை, ஏனென்றால் இதை ஆரம்பத்திலேயே சீனா தடுத்து இருக்கலாம்,
அப்படி ஆரம்ப நிலையிலேயே இந்த வைரஸை உடனடியாக பரவாமல் தடுத்திருந்தால் இது உலகம் முழுதும் பரவி இருக்காது”, என அவர் தெரிவித்தார்.
“நாங்கள் இந்த வைரஸ் பரவலை குறித்து தீவிர விசாரனை செய்து வருகிறோம்”,எனவும் அவர் தெரிவித்தார்.
ஜெர்மனி சீனாவிடம் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு 165 பில்லியன் டாலர்களை சீரமைப்பு பணிகளுக்கும் பொருளாதார இழப்புகளுக்கும் நஷ்டஈடாக கேட்டு உள்ளது.
இழப்பு அதிகம்
நாங்களும் இது போன்று வைரஸ் உண்டாக்கிய பாதிப்புகளுக்கு சீனாவிடம் நஷ்டஈடு கேட்போம், அது ஜெர்மனி கேட்ட தொகையை விட அதிக இருக்கும், எனவும்
இன்னும் நாங்கள் நஷ்டம் எவ்வளவு என்று கணக்கு செய்யவில்லை, மேலும் இங்கு 55,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்து உள்ளனர், 1 கோடிக்கும் மேலானோர் வேலை இழந்து உள்ளனர் மற்றும் பொருளாதார இழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது”, என டிரம்ப் தெரிவித்தார்.
திருச்சி: திருவரங்கம், பிரபல ரவுடி மூன்று பேரால், மகள் கண் முன் தலை வெட்டப்பட்டு கொலை செய்ப்பட்டான். கொலையாளிகள் காவல் நிலையத்தில் ரவுடியின் தலையுடன் சென்று சரண் அடைந்தனர்.
கொலை செயப்பட்டவன் சந்திர மோகன் என்கிற தலைவெட்டி சந்துரு, வயது 38 திருவரங்கத்தில் உள்ள டிரைனேஜ் தெருவில் வசித்து வந்தவர், என்பதும் இவர் பல கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் மகளுடன் தேவி தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தார் ரவுடி சந்துரு. அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சந்துருவை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களைகொண்டு தாக்கினர். சந்துருவின் மகளை ஒன்றும் செய்யாமல் விட்டனர்.
பிறகு சந்துருவின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துகொண்டு திருவரங்கம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தனர்.
அந்த கொலைகாரர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கு இருந்த ரவுடி சந்துருவின் மீதி உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த கொலைக்கான காரணத்தை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும் என காவல் துறை தெரிவித்தது.
2ஜி இணைய சேவை மே 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. 3ஜி, 4ஜி சேவைகள் தற்போதைக்கு கிடையாது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மே 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திங்கள்கிழமை அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புதிய பயங்கரவாத அமைப்புகளைத் தொடங்குவதன் மூலம் பயங்கரவாத வன்முறையில் ஈடுபடுவதற்கு முயற்சிகளை பாகிஸ்தான் செய்து வருகிறது.
மேலும், பயங்கரவாத அணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கும், ஊடுருவல் முயற்சிகளுக்கும் பாகிஸ்தான் முயல்கிறது. இவற்றை செயல்படுத்த இந்த அமைப்புகள் அதிவேக இணையத்தை பெரிதும் சார்ந்துள்ளன.
எனவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என உள்துறை முதன்மை செயலாளர் ஷலீன் கப்ரா அவரது ஆணையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இணைய சேவைகளை தவறாகப் பயன்படுத்துவது, வன்முறை நடவடிக்கைகளுக்கும் பொது ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் வழிவகுக்கும்.
மேலும் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிசெய்து இணைய அணுகலுக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலேயே இது வரை அத்தகைய செயல்கள் காட்டுக்குள் உள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இதனால் குடிமக்கள் மோசமாக பாதிக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் இணையம் தடைசெய்யப்பட்டது.
இதனால் யூனியன் பிரதேசம் முழுவதும் ஒரு கட்டமாக மீட்டெடுக்கப்பட்டது. இருப்பினும், அதிவேக மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Suriya Press Release; ஜோதிகா கருத்து: வைரலாகும் சூர்யா வெளியிட்ட அறிக்கை! விருது வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையாகவும், விவாதமாகவும் மாறி வரும் நிலையில், நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை வெளியிட்ட்டுள்ளார்.
ஜோதிகா தெரிவித்த கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும், அதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் கூறி சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விருது விழாவிற்கு சென்றிருந்த நடிகை ஜோதிகா, கோயிலுக்காக நிறைய செலவு செய்கிறீர்கள், அதிகளவில் பராமரிக்கிறீர்கள்.
அதே அளவில் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும். அதற்காக நாம் நிதியுதவி அளித்து உரிய முறையில், பராமரிப்போம் என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையாகவும், விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து தற்போது சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்.
ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடங்கங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.
கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.
இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை.
நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரியவாய்ப்பில்லை.
பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் வரவேற்கின்றனர்.
அறிஞர்கள், ஆன்மீக பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.
மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே நாங்கள் எங்களது பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்.
தவறான நோக்கத்தோடு சிலர் தரக்குறைவாக பேசும்போதெல்லாம் நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள்.
நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy Vijay College Picture; வைரலாகும் விஜய்யின் லயோலா கல்லூரி புகைப்படம்! விஜய்யுடன் கல்லூரியில் படிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் கல்லூரி புகைப்படத்தை அவரது நண்பர் சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருக்கிறார்.
பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
கடந்த 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்யின் கல்லூரி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது எடுத்த படம் அது. அதில், விஜய், கோட், சூட் அணிருந்திருப்பது போன்று இருக்கிறது.
நடிகர் சஞ்சீவ் தான் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். Major Throwback! College days.. Gang of friends forever என சஞ்சீவ் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சஞ்சீவ் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு பல படங்களில் விஜய்யுடன் இணைந்து சஞ்சீவ் நடித்திருந்தார்.