Home Blog Page 112

வெறும் லுங்கியோடு லண்டனில் டான்ஸ்: போலீசை கண்டு மிரண்ட சாண்டி!

0
Sandy Dance Video

Sandy Dance Video; வெறும் லுங்கியோடு லண்டனில் டான்ஸ்: போலீசை கண்டு மிரண்ட சாண்டி! லண்டன் சென்றிருந்த சாண்டி அங்கு நடு ரோட்டில் வெறும் லுங்கி மற்றும் பனியனோடு டான்ஸ் ஆடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

லண்டனில் நடு ரோட்டில் டான்ஸ் ஆடிய சாண்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகர்கள், நடிகைகள் வீட்டில் இருந்துகொண்டு சமையல், உடற்பயிற்சி, வீட்டு வேலை பார்ப்பது, டான்ஸ் ஆடுவது, டிக் டாக் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.

மேலும், ஒவ்வொரு நாளும் தங்களுக்கு பிடித்தவற்றை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சாண்டி லண்டனில் இருந்து கொண்டு லுங்கியில் நடு ரோட்டில் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். போலீசை கண்டதும் மிரண்டு அப்படியே மெதுவாக அங்கிருந்து நடப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. ஆனால், சாண்டி எப்போது லண்டன் சென்றார்? இதுநாள் வரை சென்னையில் இருந்துகொண்டு மனைவியுடன் டான்ஸ் ஆடுவது போன்று வீடியோவை வெளியிட்டு வந்தார். மேலும் லாக்டவுன் நேரத்தில் யாருமே வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது.

அப்படியிருக்கும் போது சாண்டி எப்படி லண்டன் சென்றார் என்ற கேள்வி எழுகிறது.

3

தமிழ்நாடு அரசு ஊரடங்கை முழுவதும் தளர்த்துவதாக இல்லை

0
தமிழ்நாடு அரசு ஊரடங்கை முழுவதும் தளர்த்துவதாக இல்லை

சென்னை: கொரோனாவால் தினமும் பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறையாததால், தமிழ்நாடு அரசு ஊரடங்கை இப்போது முழுவதும் தளர்த்துவதாக இல்லை என தெரிகிறது.

திங்கட்கிழமை பிரதமர் மோடியுடன் காணொளிக்காட்சி மூலம் தொடர்பில் பேசிய மாநில முதல் அமைச்சர்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இல்லை என தெரிகிறது. ஆனால் தமிழக அரசு தற்போது ஊரடங்கை தளர்த்துவதாக இல்லை அதற்கு பதிலாக ஊரடங்கை பகுதியாக குறைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

படிப் படியாகவே தளர்த்தும்

மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “மத்திய அரசு ஊரடங்கை நீடித்தால் , மாநில அரசும் அதை பின்பற்றி ஆகவேண்டும் என்பது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் விதி ஆகும். அதுபோல் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தினால் , மாநில அரசு தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முடிவு செய்யும். மேலும் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தினாலும் தமிழக அரசு முழுவதுமாக ஊரடங்கை தளர்த்தாமல் படிப் படியாகவே தளர்த்தும்.”

உதவி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்

தமிழக முதல்வர் பிரதமருடன் மார்ச் 20 முதல் தொடர்பில் உள்ளார், மேலும் காணொளிக்காட்சி முடிவில் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு மருத்துவ சாதனங்கள் வாங்க கூடுதல் நிதி வேண்டும் எனவும், அதிக வேலையாட்களை கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு தேவையான பிசிஆர் சோதனை கருவிகள் அதிக அளவில் வேண்டும் எனவும் கடிதம் எழுதினார்.

குணமடைபவர்களின் சதவிகிதம் ஊக்கத்தை தருகிறது

மேலும், தமிழகத்தின் தரமான மருத்துவ சிகிச்சையின் காரணமாக இறப்பு விகிதம் 1.2% ஆக உள்ளதெனவும், 1020 பேர் குணமாகி வீடுதிரும்பிஉள்ளனர்.
” இதனால் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை 54% ஆக உள்ளது ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது”, என முதல்வர் தெரிவித்தார்.

3

விஜய் டிவி புகழ் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே பர்த்டே டுடே!

0
Priyanka Deshpande

Priyanka Deshpande; விஜய் டிவி புகழ் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே பர்த்டே டுடே! விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி விஜே பிரியங்கா இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விஜே பிரியங்கா தேஷ்பாண்டே இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி பிறந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அதன் பிறகு கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தார்.

சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்த பிரியங்கா மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்துள்ளார். எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். ஆனால், மீடியா துறையில் போராடி வந்த பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில ஆண்டுகள் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில், சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்துள்ளார்.

மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில விழா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

சுட்டி டிவியிலும், நிகழ்ச்சி தொகுத்து வழங்கியுள்ளார். இவரது பிடித்த ஷோவான மாமி டே அவுட் என்ற நிகழ்ச்சி கருதப்படுகிறது. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்தார்.

சினிமா காரம் காஃபி என்ற நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கினார். ஏர்டெல் சூப்ப சிங்கர் ஜூனியர் சீசன் 4, ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 5, கிங்ஸ் ஆப் டான்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் முக்கிய தொகுப்பாளினிகளில் பிரியங்கா தேஷ்பாண்டே முக்கியமானவராக கருதப்படுகிறார்.

இந்த நிலையில் இன்று தனது 30 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு ரசிகர்களும் வாழத்து தெரிவித்து வருகின்றனர்.

3

லக்னோவில் மே 30 வரை 144 தடை நீட்டிப்பு ; இறைச்சி, மதுபான கடைகளுக்கும் தடை.

0

லக்னோ: தற்போது நடைபெற்று வரும் புனித ரமலான் மாதத்தையும், ஈத், படாமங்கல் மற்றும் புத்த பூர்ணிமாவின் வரவிருக்கும் பண்டிகைகளையும் மனதில் கொண்டு, லக்னோ காவல்துறை 144 தடை உத்தரவின் கால அளவை மே 30 வரை நீட்டித்தது.

மே 30 வரை விழாக்கள் மற்றும் மதக் கூட்டங்களும் அனுமதிக்கப்படாது, மேலும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பிரசாதம் விநியோகம் தடை செய்யப்படும்

லக்னோவின் கூட்டு போலீஸ் கமிஷனர் நவீன் அரோரா, திங்களன்று மாநில தலைநகரில் மத, அரசியல் மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு தடை விதிப்பதாகவும், இறைச்சி மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

புதிய உத்தரவுகளின்படி, மே 30 வரை விழாக்களில் எந்த மத நிகழ்ச்சிகளும், கூட்டங்களும் அனுமதிக்கப்படாது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பிரசாதம் விநியோகத்திற்கு தடை விதிக்கப்படும்.

ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு இடத்தில் கூடி எந்த வகையான ஊர்வலங்களையும் முன்னெடுக்க முடியாது, என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊர்வலங்களுடன் கூடிய அனைத்து பொது இடங்களும் குறிப்பிட்ட வரம்பிற்குள் ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். மேலும் ஒலிபெருக்கிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனுமதிக்கப்படாது.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாவட்ட ஆணையாளர் / இணை ஆணையரிடமிருந்து (சட்டம் ஒழுங்கு) அனுமதி பெறப்பட வேண்டும்.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் கிருபான் தவிர கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களை ஏந்திச் செல்ல படைகளைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விலங்குகளின் படுகொலை, இறைச்சி மற்றும் மதுபான விற்பனையும் இந்த காலகட்டத்தில் அனுமதிக்கப்படாது. எந்தவொரு வர்த்தக கண்காட்சிகள் மற்றும் பேரணிகளும் தடை செய்யப்படும்.

வாய்வழி, எழுதப்பட்ட, அச்சு, மின்னணு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளைப் பரப்புவது அல்லது பிற சமூகங்களின் மத உணர்வுகளைத் தூண்டுவது போன்றவை கண்டிப்பாகக் கண்காணிக்கப்படும்.

மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. மக்கள் தங்கள் கூரைகளில் கற்கள், குச்சிகள், சோடா பாட்டில்கள் போன்றவற்றை வைத்திருக்கக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.

மாவட்டத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் தடுக்கும் வகையில் அனைவருக்கும் கடுமையான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் குழு நிர்வாகிகளும் எச்சரிக்கையாக இருக்கவும், ஆட்சேபனைக்குரிய அல்லது அழற்சியுள்ள எதையும் இடுகையிடும் உறுப்பினர்களைப் பற்றி போலீசாருக்கு அறிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்,

3

தலையணை விலகியதால் அசிங்கப்பட்ட தமன்னா; இது தேவையா?

0
தமன்னா

Tamannaah Pillow Challenge; ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த தமன்னா, தலையணை நழுவியதால் அசிங்கப்பட்டார் என மேலும் ஒரு புகைப்படம் வைரல்.

லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் தமன்னா உடலில் ஆடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

Tamannaah Pillow Challenge: ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த தமன்னாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் ஒவ்வொரு நாளும் விதவிதமான சேலஞ்ச் செய்து வருகின்றனர்.

மேலும், வீட்டு வேலைகள் செய்வது, தோட்ட வேலை செய்வது, சமையல் செய்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாகவே இருக்கின்றனர்.

அந்த வகையில், தமன்னா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், #feelingfancybutnowheretogo #weekendvibes #quarantinePillowchallenge #Pillowchallenge என்ற ஹேஷ்டேக்குகள் பதிவிட்டு, உடலில் துணி இல்லாமல் தலையணை மட்டும் வைத்து அந்த புகைப்படம் எடுத்துள்ளார்.

தமன்னாவும் பில்லோ சேலஞ்ச் செய்யும் புகைப்படம் வெளியானது. அதன்பிறகு அவர் திரும்பும்போது தலையணை நழுவும் புகைப்படமும் வாட்ஸ்ஆப்பில் வைரலாகி வருகிறது.

இது மறைமுகமாக தமன்னாவே வெளியிட்டு இருக்கலாம் அல்லது புகைப்படக்குழு வெளியிட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

3

Soorarai Pottru Update; அஜித்துக்கு பர்த்டே ட்ரீட் மிஸ்ஸிங்

0

Soorarai Pottru Update; அஜித்துக்கு ட்ரீட்  சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தை அஜித் பிறந்தநாளுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

காப்பான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் விதமாக சூரரைப் போற்று உருவாக்கப்பட்டுள்ளது.

Soorarai Pottru Update

சுதா கொங்கரா சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சூரயாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், விவேக் பிரசன்னா.

காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் குனீத் மோங்கா இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த மாதத்தின் 2ஆவது வாரத்தில் சூரரைப் போற்று படத்தின் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. இதையடுத்து, வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தேதியில்தான் விஜய்யின் மாஸ்டர் படமும் திரைக்கு வருகிறது.

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் சூரரைப் போற்று சிறந்த படமாக கருதப்படுகிறது. ஏனென்றால், முதல் முறையாக இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டு கன்னட மொழியில் வெளியாக இருக்கிறது. மேலும், ஹிந்தியிலும் சூரரைப் போற்று ரீமேக் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது.

அஜித் பிறந்தநாள் சூரரைப் போற்று ரிலீஸ்

இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி சூரரைப் போற்று படம் திரைக்கு வரயிருப்பதாக கூறப்படுகிறது. தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அதனை சிறப்பிக்கும் வகையிலும் அஜித்திக்கு ட்ரீட் கொடுக்கும் வகையிலும், சூர்யாவின் சூரரைப் போற்று வரும் மே 1 ஆம் தேதி வெளியிட முடிவு செய்தனர்.

ஆனால் லாக்டவுன் காரணமாக தற்பொழுது முடியாமல் போய் விட்டது. இதனால் அஜித் ட்ரீட் மிஸ்ஸிங் ஆகிவிட்டது.

அருவா அப்டேட்

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா மீண்டும் இயக்குநர் ஹரி உடன் 6 ஆவது முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு அருவா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதையடுத்து, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அருவா படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார். அனல் அரசு சண்டைக்காட்சிகள் அமைக்கிறார்.

இரு சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளைச் சுற்றிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

3

எவன் எதிர்த்தாலும் படம் ஆன்லைனில் வெளியாகும் – உச்சகட்ட கோபத்தில் சூர்யா

0

எவன் எதிர்த்தாலும் படம் ஆன்லைனில் வெளியாகும் – உச்சகட்ட கோபத்தில் சூர்யா. பொன்மகள் வந்தாள் படத்தை நிச்சயம் சூர்யா வெளியிட முடிவு செய்து உள்ளனர்.

கமல் முதன்முதலில் விஸ்வரூபம் படத்தை டிடிஎச் மூலம் வெளியிடத் திட்டம் இட்டார். ஆனால் அப்படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

தற்பொழுது திரைப்படங்கள் நெட்பிலிக்ஸ், அமேசான் போன்ற டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியாகி வருகின்றது. இது மக்களிடமும் பெரிய ஆதரவை பெற்று வருகிறது.

இதை அறிந்த சூர்யா டிஜிட்டல் பிளாட்பார்மில் பொன்மகள் வந்தாள் படத்தை வெளியிட முடிவு செய்தார். தியேட்டர் உரிமையாளர்கள் உடனே சூர்யா படத்தை தியேட்டரில் வெளியிட தடை என அறிவித்தனர்.

அதேநேரம் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் பிளாட்பார்மை ஆதரித்து வரவேற்றனர். சூர்யா யார் தடுத்தாலும், எவன் எதிரில் வந்தாலும் படத்தை டிஜிட்டலில் வெளியிடுவது என முடிவு செய்து உள்ளனர்.

தற்பொழுது தமிழ் சினிமாவின் ஒரு தரப்பு டிஜிட்டலுக்கு ஆதரவாகவும், மறுதரப்பு எதிராகவும் சட்டையிட்டு கொண்டு உள்ளது.

3

ஏர்டெல் நோக்கியா கூட்டணி; 7636 கோடி செலவில் புதிய திட்டம்

0
ஏர்டெல் நோக்கியா

ஏர்டெல் நோக்கியா கூட்டணி; 7636 கோடி செலவில் புதிய திட்டம். ஜியோ-பேஸ்புக் கூட்டணிக்கு போட்டியாக இருக்குமோ? Airtel Nokia made a new agreement with one billion US dollar.

இந்தியா முழுவதும் புதிதாக 3 லட்சம் வானொலி தொலைதொடர்பு கருவிகள் வருகிற 2022க்குள் நிறுவ முடிவு  செய்துள்ளது நோக்கியா நிறுவனம்.

இதன் மூலம் இந்தியாவின் பிரபலமான ஏர்டெல் தொலைதொடர்பு சேவையின் ஆற்றலையும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வரவும் இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நோக்கியா நிறுவன சி‌இ‌ஓ ராஜிவ் சூரி கூறியதாவது, இந்தியாவில் எதிர்கால தொழில்நுட்பத்தில் எங்கள் பெயரை நிலைநாட்ட இந்த ஒப்பந்தம் ஒரு தொடக்கமாக அமையலாம்.

130 கோடி மக்கள் தொகையுடன் இருக்கும் இந்தியா உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு சந்தையாகும். 5 வருடத்தில் 92 கோடி பயனாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

3

இந்தியாவில் கொரானாவிற்கு 58 பேர் உயிரிழப்பு

0

புதுடில்லி: வைரஸ் தொற்றுக்கு திங்கட்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது, இந்த உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 30,000 ஐ நெருங்குகிறது.

மத்தியப்பிரதேசத்தில் இந்தூரில் நேற்று இரவு நேரத்தில் மேலும் 1,709 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்த நோய் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 29,571 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் முறையே அதிக எண்ணிக்கையில், 522 மற்றும் 247 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இந்தூரில் 196 புதிய தொற்றுகள் பதிவானதால், மொத்த எண்னிக்கை 1,372 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 இறப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

மும்பையில் பதிவான 369 புதிய வழக்குகளைச் சேர்த்தது, கோவிட் வழக்குகளில் டெல்லி 3,000 ஐ தாண்டியது இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை எண்னிக்கையை விடக் 293 குறைவு.

இதுவரை நோய்த்தொற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்த இரண்டு மாநிலங்களான பீகார் மற்றும் ஜார்க்கண்ட் முறையே, 68 மற்றும் 20 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளன

3

சாதனை படைத்த மாஸ்டர்: ஹலோவில் 1 பில்லியன் வியூஸ்!

0
Master Thalapathy Vijay

Thalapathy Vijay; சாதனை படைத்த மாஸ்டர்: ஹலோவில் 1 பில்லியன் வியூஸ்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், மாஸ்டர் ஆல்பம் ஹலோவில் ஒரு பில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஆல்பம் ஹலோவில் ஒரு பில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்த 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியாகவில்லை.

ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என்று செய்தி வெளியானது.

அதோடு, மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் பட ஆல்பம் ஹலோவில் சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் 15 ஆம் தேதி மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்து பாடல்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து, படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் படம் ஹலோவில் ஒரு பில்லியன் வியூஸ் பெற்று கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக, Master1BillionOnHelo என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3