Home Blog Page 113

தளபதி விஜய்யை சீண்டிப் பார்த்த கருணாகரன்!

0
Thalapathy Vijay Donation

Thalapathy Vijay; கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தளபதி விஜய் நிதியுதவி அளித்ததை நடிகர் கருணாகரன் விமர்சனம் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

நடிகர் கருணாகரன் விஜய்யைப் போன்று சம்பளம் கொடுத்தால் நாங்களும் நிதியுதவி செய்வோம் என்று விமர்சித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், சினிமா பிரபலங்கள் பலரும் பொருளுதவு, நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் தளபதி விஜய் ரூ.1.3 கோடி நிதியுதவி அளித்தார். தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சமும், கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.

மேலும், கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.5000 செலுத்தினார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.

விஜய் நிதியுதவி அளித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விஜய்க்கு நன்றி தெரிவித்தார். மேலும், நடிகர்கள், நடிகைகள் தாமாக முன்வந்து விஜய்யைப் போன்று உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், இதனை விமர்சிக்கும் வகையில், நடிகர் கருணாகரன் பெயரில் டுவிட்டரில், Same Salary Please என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விஜய்க்கு கொடுக்கும் சம்பளத் தொகையைப் போன்று சம்பளம் கொடுத்தால் தானும் உதவி செய்வேன் என்பது போன்று கருணாகரன் விமர்சனம் செய்ததாக தகவல் பரவியது.

இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து நடிகர் கருணாகரன் அப்படி ஏதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் சோஷியல் மீடியாவில் வரக்கூடிய எல்லாவற்றையும் நம்பிட்டு வர்றாங்க. நான் சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறி ரொம்ப நாளாகிவிட்டது.

விஜய் சார் குறித்து கருத்து தெரிவித்ததற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ எனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு மூலமாக இதைச் செய்துவிட்டார்கள்.

விஜய் சார் மீது அதிக அன்பும், மரியாதையும் கொண்டவன் நான். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவி செய்திருப்பது என்பது பெரியது என்றார்.

3

அஷ்வின் மூக்கை உடைத்த பும்ரா; லாக்டவுன் பரிதாபம்

0

அஷ்வின் மூக்கை உடைத்த பும்ரா. லாக்டவுன் நேரத்தில் போட்டியில் இல்லை பரிதாபமாக டிவிட்டர்-இன்ஸ்டாவில் ஒருவரை மாற்றி ஒருவர் புகார் சொல்லி விளையாடி வருகின்றனர்.

விராட் கோலி தனது மனைவியுடன் இன்ஸ்டாவில் முழ்கிடக்கிறார். அடிக்கடி இன்ஸ்டாவில் மனைவியுடன் வார்த்தை விளையாட்டு விளையாடி வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமான ஐபிஎல் என்ற ஒரு போட்டியையே ரசிகர்கள் மறந்துவிட்டனர். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் கிரிக்கெட் போட்டியையே மறந்துவிடுவார்கள் போல.

குடிமகன்கள் மதுபானத்தையே மறந்துவிட்டனர். இதில் கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கா என்ன? இதனால் ரசிகர்களை ஆக்டிவாக வைக்க வீரர்கள் சோசியல் மீடியா வாயிலாக ஏதாவது ஒரு சர்ச்சை போஸ்ட்யை பதிவு செய்கின்றனர்.

அதில் இன்று சிக்கியது ரவிசந்திரன் அஸ்வின். அஸ்வின் சிஎஸ்கே தன்னை ஓரம் கட்டியதை பற்றி செவிட்டில் அறைந்தது போன்று இருந்தது என்று கூறினார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே பும்ரா அஸ்வின் மூக்கை உடைக்கும் விதமாக டிவிட்டரில் யுவராஜ் சிங் கேட்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.

யுவராஜ் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிடம் மூன்று கேள்விகள் கேட்டார்.

  1. சச்சினா? கோலியாக? யார் சிறந்தவர்கள்?
  2. பிடித்த மிடில் ஆர்டர் யுவராஜா, தோனியா?
  3. சிறந்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜனா? அஸ்வினா?

இப்படி மூன்று கேள்விகள் கேட்க, பும்ரா முதல் இரண்டு கேள்விக்கு லாவகமாக பதில் கூறினார். நான் சர்வதேச போட்டிக்கு வந்து 4 வருடம் மட்டுமே ஆகிறது. சச்சின்-கோலி இருவரையும் ஒப்பிடும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை எனக் கூறினார்.

இரண்டாவது யுவராஜா? தோனியா? எனக் கேட்டபோது, இருவரில் யார் சிறந்தவர் எனக் கேட்பது பெற்றோரில் அம்மா சிறந்தவரா? அப்பா சிறந்தவரா? எனக் கேட்பது போல் உள்ளது. இருவருமே சிறந்தவர்கள் என்பது தான் என் பதில் எனக் கூறி முடித்தார்.

மூன்றாவது சிறந்த ஸ்பின்னர் யார் எனக் கேட்டதற்கு மட்டும் இருவரும் சிறந்தவர்கள் என பும்ரா கூறவில்லை. அஷ்வினுடன் ஆடியுள்ளேன்! ஹர்பஜனுடன் ஆடவில்லை இதன் அடிப்படையில் ஹர்பஜன் தான் சிறந்தவர் என நான் கூறுவேன் என பதிலளித்தார்.

ரவிச்சந்திர அஸ்வின் வந்த பிறகு ஹர்பஜன் பந்து வீச்சு சரியில்லை என ஓரம் கட்டப்பட்டவர். அதன்பிறகு அஸ்வின் செயல்பாடு யாருக்கும் பிடிக்காமல் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.

சிஎஸ்கேவில் கூட அஸ்வினை கழற்றிவிட்டு ஹர்பஜனை சேர்த்துக்கொண்டனர். இந்நிலையில் பும்ராவும் தனக்கு அஸ்வினை பிடிக்காது என சூட்சமாக பதில் கூறி அஸ்வின் மூக்கை உடைத்து உள்ளார்.

இன்னும் சில மாதங்கள் ஊரடங்கு நீடித்தால் ட்விட்டர், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் குழாயடி சண்டை களமாக மாறிவிடும் போல.

3

பினராயி விஜயன் பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கணித்தது ஏன்?

0
பினராயி விஜயன்

பினராயி விஜயன் பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கணித்தது ஏன்?நேற்று பிரதமர் நடத்திய நடந்த முதல்வர் ஆலோசனை வீடியோ கான்பரன்ஸ் கேரளா முதல்வர் பங்கேற்கவில்லை.

மே 3ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தியும் 27000 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

நேற்று பிரதமருடன் நடந்த வீடியோ கான்பரன்ஸில் எதிர்கட்சி தலைவர்களான மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டனர். பினராயி விஜயன் மட்டும் பங்கேறகவில்லை.

அதாவது நடந்த கூட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களை பற்றி பேசவிருப்பதால் தெற்கு மாநிலங்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயமில்லை. இதனால் அவர் கலந்துகொள்ளவில்லை.

இதில் தவறு ஏதும் இல்லை எனவும் கேரளா சார்பில் எழுத்து மூலமாக மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளதாவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

3

பார்திவ் படேல்; 9 விரலில் தான் கீப்பிங் செய்தான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

0
பார்திவ் படேல்

பார்திவ் படேல்; 9 விரலில் தான் கீப்பிங் செய்தான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தியா அணிக்காக 9 விரலில் தான் விக்கெட் கீப்பிங் செய்தேன் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்துள்ள பார்திவ் படேல், இந்தியாவின் முன்னாள் கேப்டன் கீப்பர் எம்‌எஸ் தோனிக்கு முன் இருந்தே விளையாடி வருகிறார்.

போதிய வாய்ப்பு கிடைக்காததால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவருக்கென ஒரு பெயரை சம்பாரித்து வைத்துள்ளார்.

இந்திய அணி விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் 35. கடந்த 2002ல் அறிமுகம் ஆன இவர், 25 டெஸ்ட், 38 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார்.

மற்றபடி உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வரும் இவர் 193 முதல் தர போட்டிகளில் (486 ‘கேட்ச்’, 77 ‘ஸ்டம்பிங்’) பங்கேற்றார். இவரது தலைமையில் குஜராத் அணி 2016-17ல் ரஞ்சி கோப்பை வென்றது.

அவரின் விரல் குறித்து பார்திவ் படேல் கூறுகையில், சிறு வயதில் கதவு இடுக்கில் சுண்டி விரல் சிக்கி துண்டாகி விட்டதாகவும் அது தன்னுடைய கீப்பிங் பணியை பெறிதளவு பாதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

கிளவுசில் சிறியதாக உள்ள சுண்டு விரல் உள்ளே நுழையாது. இதனால் ‘டேப்’ வைத்து கடைசி விரலில் நன்றாக ஒட்டிக் கொள்வேன் எனவும் கூறினார்.

10 விரல்களுடன் இருந்திருந்தால் எப்படி கீப்பிங் செய்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் 9 விரல்களுடன் இத்தனை ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடியது பெருமையாக உள்ளது.

3

செவ்வாய் கிரகம் செல்ல வைக்கும் ‘பாங்கு பானம்’ லிட்டர் ரூ.300 விற்பனை செய்த இளைஞர்கள் கைது

0
செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம் செல்ல வைக்கும் ‘பாங்கு பானம்’ லிட்டர் ரூ.300 விற்பனை செய்த இளைஞர்கள் கைது, மாற்று போதைக்காக கஞ்சாவில் இருந்து பாங்கு பானம் தயாரித்து விற்ற ராமேஸ்வரம் இளைஞர்கள்.

கொரோனா பரவலின் காரணமாக நாடே ஊரடங்கில் இருப்பதால் அனைத்து மதுக்கடைகளும் தற்காலிகமாக அடைக்கப்பட்டன.

இதனால் மது பற்றாக்குறை ஏற்பட்டு அது கிடைக்காமல் குடிமகன்கள் திணறி வருகின்றனர். திருட்டு தானமாக விற்கும் மதுக்களும் விலை ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த நேரத்தில் பல்வேறு நபர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி போலீஸிடம் சிக்கி வருகின்றனர். கேரட் பீர், திராட்சை ரசம் என வித விதமாக தயாரிக்கின்றனர்.

ராமேஸ்வரம் பகுதியில் கஞ்சா மற்றும் பழங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ‘பாங்கு’ எனும் போதை பானம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்குத் தகவல் கிடைத்தது.

ஆய்வாளர் சசிக்குமார் தலைமையில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் 20 லிட்டர் சரக்குடன் இரண்டு இளைஞர்கள் மாட்டிக்கொண்டனர்.

ராமேஸ்வரம் நடுத்தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார், சுந்தரமூர்த்தி ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்த போது போதை பானம் தயாரித்து மதுபானப் பிரியர்களிடம் ஒரு லிட்டர் ரூ.300-க்கு விற்று வந்ததை ஒப்புக்கொண்டனர்.

3

World Day for Safety and Health Work Day 2020 Theme

0
World Day for Safety

World Day for Safety and Health Work Day 2020 Theme, உலக வேலை செய்வோருக்கான பாதுகாப்பு தினம். International Commemoration Day for Dead and Injured Workers

அதாவது நாம் தினமும் செய்து வரும் வேலைகளில் எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்துக்களையும் அதனால் ஏற்படும் உயிர் சேதங்களையும் ஏற்படாமல் பாதுக்காக்க வேண்டும்.

அதற்கு வேண்டிய முயற்சிகள் மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கைகள் ஆகியவை பற்றி விழிப்புணர்வும் கொடுப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.

கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச கூலியாளர்கள் சங்கத்தின் பேரில் கொண்டுவரப்பட்ட ஒரு விழிப்புணர்வு நாளே இது.

மேலும் 1996ஆம் ஆண்டிலிருந்து வேலையின் பொது நடந்த விபத்தினால் இறந்தவர்களுக்காக International Commemoration Day for Dead and Injured Workers என்ற நாள் கொண்டாடப்படுகிறது.

3

கேன்சர், கொரோனா இரண்டையும் வீழ்த்தி மரணத்தின் விழிம்பில் இருந்து தப்பிய சிறுமி

0
ஷிவானி
file image

துபாய்: புற்றுநோயிலிருந்து தப்பிய ஷிவானி,  கடந்த ஏப்ரல் 1 ம் தேதி அல் புட்டெய்ம் ஹெல்த் ஹப்பில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

துபாயில் நான்கு வயது இந்திய குழந்தை ஷிவானி,  கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவியுடன் மீண்ட நிலையில், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தபோதிலும், கடந்த வாரம் கொரானாவிலிருந்தும் மீண்டுள்ளார்.

ஷிவானி, ஐக்கிய அரபு நாடுகளில் கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்ட இளம் வயதினரின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்று ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அல் பியூட்டைம் ஹெல்த் ஹப் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அவரின் தாயார் ஒரு முன்னிலை சுகாதார ஊழியராக இருந்த நிலையில் அவர் மூலமாக ஷிவானி நோய் தொற்றிற்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் தந்தைக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்குமே நோய் தொற்றின் அறிகுறிகள் இல்லாமலே நோய் தாக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஷிவானிக்கு ஏற்கனவே சிறுநீரக கேன்சர்  (ganglioneuroblastoma) இருந்து அதிலிருந்து அவர் மீண்டுள்ளதால் அவருக்கு சிறப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

“ஷிவானிக்கு கடந்த ஆண்டு கீமோதெரபி சிகிச்சை செய்யப்பட்டது. எனவே, அவரது நோயெதிர்ப்பு சக்தி இன்னும் பலவீனமாகவே இருந்தது. கொரோனா நோயின் கடுமையான தாக்குதல் அதிக ஆபத்து என்பதால் மருத்துவர்கள் கவலை கொண்டிருந்தனர்.

எனவே, நாங்கள் அவளை நெருக்கமான கண்காணிப்பில் வைத்திருந்தோம். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு தொற்றுநோய் எந்த சிக்கல்களையும் உருவாக்கவில்லை,.” என்று மருத்துவமனை இயக்குனரும் ஷிவானிக்கு சிகிச்சை அளித்த குடும்ப மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் தோல்பிகர் அல் பாஜ் கூறினார்.

20 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் நோய் தொற்று முடிவுகள் இருமுறை நெகடிவ் என வந்த பின்னரே அவர் வீட்டிற்க்கு அனுப்பப்பட்டார்.

இருப்பினும் இன்னும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிவானியின் தாயாருக்கும் சிகிச்சை முடிந்த நிலையில் அவரும் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

UAE-ல் கோரோனாவிலிருந்து மீண்டவர்களில் மிகவும் சிறிய வயது உள்ளவர் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது.

3

சமந்தா பர்த்டே ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்குகள்!

0
Samantha Birthday Today

Samantha Akkineni; சமந்தா ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்குகள்! சமந்தா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், டுவிட்டரில், #HappyBirthdaySamantha, #SamanthaAkkineni, #HBDsamantha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

சமந்தா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சிம்பு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு அதர்வா முரளி நடிப்பில் வந்த பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து, விஜய், சூர்யா, ஜீவா ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

விஜய் உடன் இணைந்து கத்தி, தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள சமந்தா திருமணத்திற்குப் பிறகும் நடித்து வருகிறார்.

தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இந்த நிலையில், இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை சமந்தா கொண்டாடுகிறார். இதன் காரணமாக, டுவிட்டரில், #HappyBirthdaySamantha, #SamanthaAkkineni, #HBDsamantha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

பியூட்டி குயீன் சமந்தா பர்த்டே டுடே!

0
Samantha Birthday Today

Samantha; பியூட்டி குயீன் சமந்தா பர்த்டே டுடே! நடிகை சமந்தா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமந்தா பிறந்தநாள் இன்று…

சமந்தா பிறந்து வளர்ந்தது எல்லாம் பல்லாவரம், சென்னை. அப்பா தெலுங்கு, அம்மா ஆலப்புழா, கேரளா. படித்தது எல்லாமே சென்னையில் தான். இப்படி, கலப்பு மொழியைச் சேர்ந்த குடும்பத்தில் சமந்தா பிறந்து வளர்ந்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.

ஆனால், இந்தப் படம் அவருக்கு சிறப்புத் தோற்றம். அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.

நான் ஈ படம் தான் தமிழில் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. ஒல்லியான தோற்றம் ஹோம்லி லுக்கில் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதோடு, உணர்ச்சி மற்றும் உணர்வுகளை கச்சிதமாக இடத்திற்கு ஏற்ப வெளிப்படுத்தக் கூடியவர்.

தொடர்ந்து ஜீவா உடன் இணைந்து நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்தார். இந்தப் படம் சிறந்த நடிகைக்காக பிலிம்பேர் விருதை பெற்றுக் கொடுத்தது.

இதையடுத்து, சூர்யாவுடன் இணைந்து அஞ்சான், விஜய் உடன் இணைந்து கத்தி, தெறி, மெர்சல் என்று வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட போதிலும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பாக நடித்து வருகிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சினிமாவில் காலூன்றி வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடித்து வருகிறார். விஜய் மற்றும் சமந்தா காம்பினேஷன் சினிமாவில் ஹிட் படமாக அமைகிறது. கத்தி, தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற படங்களாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், சமந்தா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நண்பர்கள், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் சமந்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

எப்போதும் பெண்கள் சமையல் தான் செய்ய வேண்டுமா? கொந்தளித்த மாளவிகா மோகனன்!

0
Malavika Mohanan

Malavika Mohanan; எப்போதும் பெண்கள் சமையல் தான் செய்ய வேண்டுமா? கொந்தளித்த மாளவிகா மோகனன்! விஜய் ரசிகர் ஒருவர் வெளியிட்ட கார்ட்டூன் பற்றி நடிகை மாளவிகா மோகனன் கோபமாக கருத்து தெரிவித்து அதன் பிறகு அதனை நீக்கிவிட்டார்.

விஜய் ரசிகர் வெளியிட்ட கார்ட்டூன் குறித்து நடிகை மாளவிகா மோகனன் கோபமாக டுவீட் செய்துள்ளார். அதன் பிறகு மற்றொரு டுவிட்டரில், வேறொரு கார்ட்டூன் பதிவிட அதனை ரசித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர். இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், ஸ்ரீமன், சஞ்சய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

மாஸ்டர் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Master Cartoon

இந்த நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் படக்குழு குறித்து கார்ட்டூன் வரைந்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், லேப்டாப், மியூசிக், விளையாடுவது, சமையல் செய்வது போன்று கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. இதைப் பார்த்த மாளவிகா மோகனன் கோபமடைந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனன் சமைத்துக்கொண்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது தான் அதற்கு காரணம்.

இது குறித்து டுவிட்டரில், இந்த ஒரு மூவி வீட்டில் கூட பெண்கள் சமைக்கும் வேலை தான் செய்ய வேண்டுமா? இப்படி பெண்கள் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என சொல்லும் முறை எப்போது சாகும்? என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Thalapathy Vijay Master Cartoon

ஆனால், சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்த டுவீட்டை நீக்கிவிட்டார். பதிலுக்கு ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனன் புத்தகம் படிப்பது போன்று கார்ட்டூன் வரைந்து பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த மாளவிகா மோகனன் ஐ லவ் திஸ் வெர்ஷன். எனக்கு வாசிப்பது புடிக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

3