Home Blog Page 114

28/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

28/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் மேன்மையை தரும் தினமாக இருக்கும். மனதில் உறுதி இருக்கும். குடும்பத்துடன் அன்போடு இருப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற தகுந்த பலன்கள் கிடைக்கும். நல்ல நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று உங்களுக்கு புகழ் தானாக வந்து சேரும். தங்களின் குணத்தால் காரியங்கள் கைகூடும். கணவன் மனைவி அன்பு பெருகும். அற்புதமான பலன்களை பெறலாம்

மிதுன ராசிபலன்

இன்று தங்களின் தன்னம்பிக்கையால் சாதனைகள் புரிவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் அன்பும் கிடைக்கும் நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்று மிகவும் ஆதரவு நிறைந்த நாளாக அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம். தனவரவு அதிகமாக இருக்கும். உற்றார் உறவினர்களினால் மகிழ்ச்சி ஏற்படும். மொத்ததில் பொன்னான நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வீட்டில் சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. பேச்சில் மட்டும் சற்று கவனம் தேவையாகும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். அற்புதமான பலன்களை வாரி வழங்கும்.

துலாம் ராசிபலன்

இன்று பொறாமை குணத்தை கைவிட வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். வீட்டில் நகைச்சுவை உணர்வு அவசியம் வேண்டிய நாள். வீீட்டில் பணம் வீணாக செலவாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்று விவேகமாக செயல்பட வேண்டும். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் அன்பும் கிடைக்கும் நாளாக இருக்கும். குழந்தைகள் கல்வி மேம்படும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் பணிவாக நடந்து கொள்ள வேண்டிய நாள். புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். அற்புதமான பலன்களை வாரி வழங்கும். குடும்ப சண்டைகள் தீரும்.

மகரம் ராசிபலன் 

இன்று ஆரோக்கியம் நலமுடன் இருக்கும் நாளாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் எளிதாக முடிப்பீர்கள். தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். உடல் ஆற்றல் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்க வேண்டும்

கும்ப ராசிபலன்

இன்று உற்சாகமாக இருக்கும் நாளாகும். பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணிக்கான பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்று சோர்வுடன் இருக்கும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. ஓய்வு அவசியம் தேவைப்படும்.

28/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

ஆதி சங்கரர்: ஜெகத் குரு ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் ஜெயந்தி விழா 2020!

0

ஆதி சங்கரர் ஜெயந்தி-Adi Sankara Jayanthi 2020: ஆதி சங்கரரின் பிறப்பு, ஆதி சங்கர பகவத் பாதரின் அத்வைதம் தத்துவம், ஜகத்குரு அமைத்த பீடங்கள், ஆதி சங்கரரின் இந்து மத சீர்த்திருத்தங்கள்.

நமது பாரத தேசத்தில் வாழும் மக்களை சீர்திருத்தம் செய்வதற்கு இம்மண்ணில் எண்ணற்ற மகான்களும, யோகிகளும், சித்த புருஷர்களும் வாழ்ந்து மறைந்துள்ளனர்.

உண்மையில் அவர்கள் யாரும் மறையவில்லை அவர்கள் அனைவரும் நித்திய சிரஞ்சீவிகளாக நம்மை காத்தும், நெறிபடுத்தியும் வருகின்றனர்.
அப்படிப்பட்ட மகான்களில் ஜகத்குரு எனப் போற்றப்படும் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதார் மிகவும் முக்கியமானவர் ஆவார்.

ஆதி சங்கரரின் பிறப்பு

ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் குறித்து இன்றளவும் பல விவாதங்கள் நடந்து வருகின்றது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் என்று கூறுவதையே பலரும் ஏற்கின்றனர்.

இன்றைய கேரள மாநிலம் “காலடி” எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர். எட்டு வயதில் சந்நியாசம் பெற்று துறவறம் சென்றார்.

இவரது காலத்தில் இந்து மதம் “துவைதம்” தத்துவத்தை நம்பியும், பௌத்த மற்றும் சமண மதத்திற்கு மாற்றபட்டும் வந்தது.

துவைதம் என்பது இரண்டு நிலை. ஆன்மாவும், பரமாத்மாவும் வேறு வேறு. இறைவனும் இந்த பிரபஞ்சமும் வேறானவை என்கிற கருத்தை கொண்டது.

இதனை மாற்றவும் பரபிரம்ம தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவும் பாரதத்தின் அனைத்து இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.

ஆதி சங்கரரின் அத்வைத தத்துவம்

அத்வைதம் என்றால் இரண்டற்ற நிலை என்பது பொருளாகும். அதாவது ஜீவன் வேறு இறைவன் வேறல்ல இரண்டுமே ஒன்று தான். “அஹம் பிரம்மாஸ்மி” நாமே பரபிரம்மம் என்ற உயர்ந்த தத்துவத்தை உலகிற்கு உணர்த்தினார்.

பல்வேறு விவாதங்கள் மற்றும் மத குருமார்களின் கருத்துகள் என அனைத்து வாதங்களிலும் வெற்றி கொண்டு அத்வைத தத்துவத்தை உலகறியச் செய்தார்.

அத்வைதம் நான்கு கொள்கைகளை அடிப்படையாக கொண்டது.

• பிரம்மம் ஒன்றே எப்போதும் நிலைத்திருக்கும். அந்த பரமாத்மாவை தவிர வேறு எதுவும் இல்லை.

• பிரம்மதிற்கு உருவம் கிடையாது. அது நிர்க்குணபிரம்மம் ஆகும். நாம் மனதால் நினைக்கும் குணங்களை கொண்டு உருவகப்படுத்தும் கடவுள் ஸகுணப் பிரம்மம் ஆகும்.

• அனைத்து உயிர்களிடமும் இருக்கும் ஜீவாத்மா மற்றும் மெய்பொருளாக விளங்கும் பரமாத்மா இரண்டும் ஒன்றே ஆகும்.

• உலகம் முழுதும் உண்மையற்ற மாயையாகும் நிலையற்றது. இது மாறி கொண்டே இருக்கும் “பரபிரம்மம்” ஒன்றே நிலையானது.

இவ்வாறு மத்வரின் துவைதமும், புத்தரின் பௌத்தமும் இணைந்த ஒன்றே அத்வைதம் ஆகும். இதையே பின்நாளில் இராமானுசர் விசிஷ்டாத்வைதம் என தெளிவாக கூறினார்.

ஜகத்குரு அமைத்த பீடங்கள்

இந்து மதமானது சைவம், வைணம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் என பிரிந்து இருந்தது. இதை அனைத்தையும் ஒன்று சேர்த்து சநாதன தர்மத்தை நிலைநாட்ட பாரதம் முழுதும் திக்விஜயம் செய்தார்.

கபாலிக சமயத்தை தடுத்து ஆட்கொண்டார். கோவில்களில் உயிர்பலியை தடுத்தார். ஜீவகாருண்யத்தை எடுத்துரைத்தார்.

சிருங்கேரி சாரதா பீடம், கோவர்தன பீடம், துவாரகை காளிகா பீடம், ஜோஷி மடம், காஞ்சி காமகோடி பீடம் முதலியற்றை உருவாக்கி அவரின் சிஷ்யர்களை அதற்கு பீடாதிபதிகளாக நிர்மாணம் செய்தார்.

அதன் மூலம் அத்வைத கொள்கைகளை பீடாதிபதிகள் இன்றளவும் பரப்பி வருகின்றனர்.

பகவத் பாதரின் படைப்புகள்

இந்து சமயத்தின் அடிப்படையான பத்து உபநிடதங்களின் விளக்க உரை, பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை விளக்க உரை.

சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி, கனக தாரா ஸ்தோத்திரம், விவேக சூடாமணி, ஆத்ம போதம், உபதேச சாஹ்ரி, பஜ கோவிந்தம், சிவானந்த சாங்கியம், சுப்ரஹ்மண்ய புஜங்கம், உபதேச சாஹஸ்ரி, விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கவுரை, மனீஷா பஞ்சகம், நிர்வாணஷ்டகம் என பல நூல்களை நமக்கு அளித்துள்ளார்.

கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழையின் வீட்டில் கனக நெல்லிக்காய் மழை பொழியச் செய்தது, நர்மதையை தனது கமண்டலத்தில் அடக்கியது, கூடு விட்டு கூடு பாய்வது, காமாட்சி அம்மனின் கோபம் தவிர்க்க ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை, பல அம்பிகை கோவில்களில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து அம்பிகையின் அருள் பெற்றது என பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

இமயம் முதல் குமரி வரை அனைத்து கோவில்களுக்கும் தல யாத்திரை மேற்கொண்டு மக்களின் அக்ஞானத்தை போக்கினார். தனது 32-ஆம் வயதில் கேதார்நாத்தில் பரபிரம்மத்துடன் இரண்டற கலந்தார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி 2020

ஆதிசங்கரர் ஜெயந்தியானது வைசாக மாதம் சுக்ல பட்ச பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி செவ்வாய் கிழமை வளர்பிறை பஞ்சமி திதியான இன்று “சங்கர ஜெயந்தி” விழா கொண்டாடப்படுகிறது.

இன்றளவும் தெய்வங்களை பிரித்து போட்டி, விவாதங்கள், பிரச்சனைகளை உண்டு பண்ணி அதில் குளிர்காயும் பல போலி குருமார்களிடம் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

அனைவரும் இந்நாளில் அத்வைத கொள்கைகளை சிறந்த குரு மூலம் கற்று தெளிவு பெற்று மாயையை துறந்து பரமாத்மாவுடன் இணைவோம். ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர! என மனதார ஜகத்குருவின் நாமம் சொல்லி நற்கதி அடைவோம்.

“ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்”

3

சீட்டு கட்டு விளையாடியதால் விபரீதம் 40 பேருக்கு கொரோனா; ஆந்திர பிரதேசம்

0
சீட்டு கட்டு

விஜயவாடா: லாரி ஓட்டுநர் ஒருவர் நேரத்தை கடத்த நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் சீட்டு கட்டு விளையாடியதால், அதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த 24 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்ப்பட்டது, இதை கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.

வேறு சில பேர் குழுவாக அமர்ந்து நேரத்தை கடத்துவதர்காக வேறு ஒரு லாரி ஓட்டுனருடன் அமர்ந்து சீட்டு விளையாடினர் இதனால் விஜயவாடாவின் மற்றொரு பகுதியிலும் 15 பேருக்கு வைரஸ் பரவ காரணமாக அமைந்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் சேர்த்து மொத்தமாக 40 பேருக்கு கடந்த இரு நாட்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது, என அவர் தெரிவித்தார்.

கிருஷ்ணா லங்கா எனும் இடத்தில் ஒரு லாரி ஓட்டுநர் நேரத்தை கடத்துவதற்காக நண்பர்களுடனும், அக்கம் பக்கத்தினருடனும் சீட்டு கட்டு விளையாடி உள்ளார் மேலும் அங்கிருந்த பெண்கள் தாயம் விளையாடி உள்ளனர்.

இதனால், கொரோனா வைரஸ் 24 நபர்களுக்கும் பரவியது, என அவர் கூறினார்.

இதைபோலவே கார்மிகா நகர் என்னும் இடத்திலும் ஒரு லாரி ஓட்டுநரால் 15 பேருக்கு கொரோனா பரவல் நடந்துள்ளது.

விஜயவாடா தற்போது முக்கிய கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக உள்ளது இங்கு மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பாதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியின் ஒரு பகுதியாகிய விஜயவாடாவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25ந்து புதிய கொரோனா பாதிப்பாளர்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் கொரோனா பரவலை தடுக்க கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க மக்களை அறிவுறுத்தினார்.

3

தல ரசிகருக்கு உதவிய தளபதியின் நிதியுதவி: விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்!

0
Thala And Thalapthy Fans

Thalapathy Vijay; விஜய் நிதியுதவியாக கொடுத்த ரூ.5000 பணத்தை அவரது ரசிகர் ஒருவர் அஜித் ரசிகருக்கு கொடுத்து உதவியது தளபதி விஜய்க்கு பெருமை சேர்த்துள்ளது.

தல ரசிகருக்கு உதவிய விஜய் ரசிகர் தளபதிக்கு பெருமை சேர்த்துள்ளது.

விஜய்யும், அஜித்தும் காலங்காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் தங்களை எதிரிகளாக நினைத்தது இல்லை.

ஆனால், அவரது ரசிகர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக பார்க்கின்றனர். அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், விஜய் படம் வெளிவந்தால் அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும் நடந்து வருகிறது.

உண்மையில், விஜய், அஜித் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். அண்மையில், நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித்தைப் போன்று உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக கோட் சூட்டில் வந்ததாக விஜய் கூறினார்.

எப்போதும், இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி புகழ்ந்து கொண்டாலும், அஜித் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கலாய்ப்பதும், விஜய் பிறந்தநாளுக்கு மோசமான டுவிட்டர் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்குவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், உண்மையில், ஒரு அதிசயம் நடந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், விஜய் ரூ.1.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

அதோடு, கஷ்டப்படும் ரசிகர்களுக்கு தளபதி விஜய் ரூ.5 ஆயிரம் நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கில் போட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்ற விஜய் ரசிகருக்கும் அந்த நிதியுதவி கிடைத்துள்ளது.

ஆனால், அவர் அந்த ரூ.5 ஆயிரம் பணத்தை தனது நண்பரான அஜித் ரசிகர் மாற்றுத்திறனாளியான சசிகுமாருக்கு கொடுத்துள்ளார்.

நாகராஜ் மாற்றுத்திறனாளி சசிகுமாருக்கு உதவிய போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது விஜய் ரசிகருக்கு மட்டும் அல்ல, விஜய்க்கும் பெருமையைச் சேர்த்துள்ளது.

எப்போது அடித்துக் கொள்ளும் ரசிகர்களுக்கு மத்தியில் நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று பெருமையோடு மார்தட்டிக்கொள்ளும் நண்பர்களாக விஜய் – அஜித் ரசிகர்களான நாகராஜ் மற்றும் சசிகுமார் ஆகியோர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கண்ணாடி சட்டைக்குள் ஹன்சிகா; இதுக்குமேல என்ன தெரியணும்?

0

லாக்டவுன் வந்தாலும் வந்தது செலிபிரிட்டிகள் தாராள மனசு கொண்டவர்கள் என மணிக்கு ஒரு முறை நிருபித்துக்கொண்டு உள்ளனர்.

தாராள மனசு என்றவுடன் லாக்டவுன் சமயத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவது என்று தவறாக நினைக்க வேண்டாம். இது வேற மனசு.

வீட்டில் சும்மா இருக்க முடியாமல், ஹன்சிகா போன்ற நடிகைகள் யுடியூப் சேனல் துவங்குவது, இன்ச்டாவில் போட்டோஸ் போடுவது என பிசியாகவே உள்ளனர்.

படத்தில் கூட இறுக்கி மூடி நடிக்கும் நடிகைகள் கூட தற்பொழுது இன்ஸ்டாவில் பார்த்துக்கோ என கவர்ச்சியில் தாராளம் கட்டுகின்றனர்.

தற்பொழுது ஹன்சிகா மோத்வானி கண்ணாடி சட்டை ஒன்றை போட்டுக்கொண்டு எல்லாம் தெரியும் படி  தாராளம் காட்டு போஸ் கொடுத்துள்ளார்.

லாக்டவுனின் ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என யாரும் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காவே நடிகைகள் இப்படி போஸ் கொடுத்து தங்கள் மீது கவனத்தை திசை திருப்ப செய்கின்றனர் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்படி போட்டோ போடுவதால் ஊரடங்கில் இருக்கும் ரசிகர்கள் ஹன்சிகா இன்ஸ்டா ஐடி எது என தேடி பாலோ செய்வார்கள் என்பதும் அடங்கும்.

3

பீச் ஓரம்: நயன்-விக்கி’ய வீடியோ எடுத்தது யாருப்பா? – nayanthara unseen video

0

nayanthara unseen video: நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவன் சீரியஸாக நயனிடம் சீன் சொல்கிறார். ஆனால் நயன் விக்னேஷ் சொல்லும் சீனை கேட்டவுடன் சிரிக்கிறார்.

கேமாரா ஜூம் அவுட் ஆக அந்த காட்சி கருப்பு திரைக்குள் செட் செய்து எடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

சினிமாவில் ஒரு காட்சியைப் பார்பதற்கும், நேரில் படப்பிடிப்பு காட்சியைப் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தாயசம் உள்ளது எனப்பாருங்கள்.

 

3

மோப்ப நாய்கள் கொரோனாவை கண்டுபிடிக்குமா?

0
மோப்ப நாய்கள் கொரோனாவை

இலண்டன்: சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் கொரோனாவை கண்டுபிடிக்குமா என சோதனை முயற்சி. தி ச்சேரிட்டி மெடிகல் டிடெக்சன் டாக்ஸ்( The Charity Medical Detection Dogs) என்ற அமைப்பு ஏற்கனவே மலேரியா, கேன்சர் மற்றும் மூளை தேய்மானம் போன்ற நோய்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறது.

இந்த அமைப்பு இப்போது கொரோனா பரவலை தடுக்க துர்காம் பல்கலைகழகம் மற்றும் இலண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் ட்ராபிகல் மெடிசீன்(LSHTM) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிளாரி கெஸ்ட் தெரிவிக்கும் பொழுது “எச்சரிக்கையாக வைரஸின் வாசனையை பிடிப்பது எப்படி என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்” என தெரிவித்தார்

வேகமானது மற்றும் எளிதானது

மற்ற நோய்களை போலவே இதையும் மோப்ப நாய்கள் கொரோனாவை கண்டுபிடிக்க முடிந்தால், அறிகுறிகள் இல்லாதவர்களிடமும் இந்த முறையை பயண்படுத்தி எளிதாக கொரோனாவை கண்டுபிடிக்கலாம்.

இவ்வாறு பரிசோதனை செய்வது வேகமானது மட்டுமல்லாமல் செலவு இல்லாததும் ஆகும்.

‘ஒவ்வொரு நோய்க்கும் ஒரு வாசனை இருக்கும்’ என இந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆறு வாரங்களுக்கு பயிற்சி கொடுத்தால் இவ்வாறு நோய்களை கண்டுபிடிக்கும் வகையில் நாய்களை தயார்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முறையில் விமான நிலையத்திலிருந்து வருபவர்களுக்கு கொரோனா உள்ளதா என எளிதாக கண்டுபிடிக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த முறையில் நாய்களைக் கொண்டு கொரோனாவை கண்டுபிடிப்பதனால், பிற்காலத்தில் இந்த நோய் பரவலை எளிதாக கட்டுபடுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3

கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15000: ஏழை மக்களுக்கு கொடுத்த அமீர் கான்?

0
aamir khan

கோதுமைக்குள் ரூ.15000: ஏழை மக்களுக்கு கொடுத்த அமீர் கான்? டெல்லியில், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் கோதுமை பாக்கெட்டுக்குள் மறைத்து ரூ.15 ஆயிரம் பணத்தை அமீர் கான் அனைவருக்கும் கொடுத்ததாக தகவல் பரவி வருகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு கோதுமை பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து ரூ.15 ஆயிரம் பணத்தை நடிகர் அமீர் கான் வழங்கியதாக தகவல் வெளியாகி வருகிறது.

நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மட்டும் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோ பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர் அமீர் கான் பிரதமர் மோடியின் கேர்ஸ் நிதி, மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதியில் தனது பங்களிப்பை முன்னரே வழங்கியுள்ளார்.

மேலும் தனது வரவிருக்கும் திரைப்படமான லால் சிங் சத்தாவின் தினசரி கூலி தொழிலாளர்களுக்கும் நிதியுதவி அளித்து ஆதரித்தார்.

இந்த நிலையில், தற்போது ஊடகங்களில் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், அவர் கோதுமை பாக்கெட்டுடன் சேர்த்து ரூ.15 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.

கடந்த 23 ஆம் தேதி, டெல்லியில், உள்ள ஏழை, எளிய் மக்களின் வாழுமிடத்திற்கு சென்று இரவு நேரத்தில் லாரியில் ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகளை தேவைப்படுவோருக்கு கொடுத்துள்ளனர்.

அந்த கோதுமை மாவு பாக்கெட்டுகளை பெற்று வீட்டிற்கு சென்று அதனை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அதில், ரூ.15 ஆயிரம் ரூபாய் பணமிருந்துள்ளது.

நடிகர் அமீர் கான் தான் சத்தமே இல்லாமல், ஏழை, எளிய மக்களுக்கு இவ்வாறு உதவி செய்துள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.

ஆனால், உண்மையில், ஜமான் என்ற இளைஞனின் டிக் டாக் வீடியோவிலிருந்து இந்த சர்ச்சை வந்ததாக தெரியவந்துள்ளது.

அந்த வீடியோவில், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஒரு சேரியில் நின்றுகொண்டிருக்கும் லாரிக்கு அருகில் ஒருவர் சென்றுள்ளார். கோதுமை மாவு ஒரு கிலோ வழங்கப்படும் என்று அவருக்கு கூறப்பட்டிருக்கிறது.

இரவில் ஒரு கிலோ கோதுமைக்கு யார் வரிசையில் நிற்பார்கள்? என அவரும் அவருக்குப் பின்வந்த பலரும் அங்கிருந்து நகர்ந்திருக்கிறார்கள்.

மிகவும் மோசமான பொருளாதார குடும்ப சூழலில் உள்ள ஆண்கள் மட்டும் மாவு பாக்கெட்டுகளை வாங்கி வீட்டுக்குச் சென்று உள்ளே திறந்து பார்த்திருக்கிறார்கள்.

அதில் ரூ.15,000 இருந்திருக்கிறது. மிகவும் தகுதியானவர்களுக்கு சரியான உதவி வழங்கப்பட்டது.

அவரது உதவிக்காக நான் அவரை பாராட்டுகிறேன்,” என்று ஜமான் வீடியோவில் கூறினார். ஆனால் அது யார் என்று வீடியோவில் அவர் குறிப்பிடவில்லை. இருப்பினும், இது அமீர் கானின் விநியோகம் தான் என்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

ஆனால், அமீர் கான் தரப்பு அப்படி ஏதும் கோதுமை பாக்கெட்டை விநியோகிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

3

உடைந்த கண்ணாடி: சன்னி லியோன் வரைந்த ஓவியம்!

0
Sunny Leone Art

Sunny Leone; உடைந்த கண்ணாடி: சன்னி லியோன் வரைந்த ஓவியம்! லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் சன்னி லியோன் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சன்னி லியோன் வரைந்த ஓவியம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாதாரண ஜனங்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே இருக்கின்றனர்.

வீட்டில் இருக்கும் பிரபலங்கள், சமையல் செய்வது, வீட்டு வேலை செய்வது, தோட்டவேலை பார்ப்பது, ஓவியம் வரைவது, உடற்பயிற்சி செய்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என்று எப்போதுமே பிஸியாகவே இருக்கின்றனர்.

அந்த வகையில், வீட்டில் இருக்கும் சன்னி லியோன் ஓவியம் வரைந்துள்ளார். உடைந்த கண்ணாடி போன்று அவர் வரைந்திருக்கும் ஓவியத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சன்னி லியோன் வரைந்த ஓவியம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sunny Leone Art

3

கொரோனா பாதித்தவர்களை கொரோனா மீண்டும் தாக்கக்கூடும்: உலக சுகாதார அமைப்பு

0
கொரோனா மீண்டும் தாக்கக்கூடும்

கொரோனா பாதித்தவர்களை கொரோனா மீண்டும் தாக்கக்கூடும். எனவே, கொரோனா நோயாளிகள் குணமடைந்த பின்பு வேலைக்கு செல்வது என்பது பேராபத்தை உண்டாக்கும். என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

“கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அந்த நோயை தாங்கும் எதிர்ப்பாற்றல் உள்ளது என்பது நிரூபனம் செய்யப்படவில்லை,  எனவே இந்நோய் அவர்களை மீண்டும் தாக்கலாம்”, என உலக ஐக்கிய நாடுகளின் அமைப்பு ஏப்ரலில் தெரிவித்தது.

எதிர்ப்பாற்றல் கடவுச்சீட்டு என்பது ஆபத்தான திட்டம்

சில அரசுகள் கொரோனாவால் பாதித்து மீண்டவர்களை “எதிர்ப்பாற்றல் கடவுச்சீட்டு”(Immunity Passport) அல்லது “ஆபத்து அற்றவர்கள் சான்று” (Risk-free certificate)கொடுக்கலாம், அதனால் அவர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என பரிந்துரைத்ததை அடுத்து உலக சுகாதார அமைப்பு இந்த தகவலை வெளியிட்டு உள்ளது.

அவ்வாறு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் வேலைக்காகவோ அல்லது வெளியிடங்களில் சுற்றினாலோ பரவலை மேலும் அதிகமாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியது.

தடுப்பூசி தேவை

கொரோனாவிற்க்கான தடுப்பூசி தேவை உலக அளவில் தேவைப்படுவதை அடுத்து, அவ்வாறு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் உலகில் உள்ள அனைவருக்கும் அது பரவலாக கிடைக்க உலக சுகாதார அமைப்பு ஒரு குழுவை அமைத்துள்ளது இதில் பிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மக்ரொன், ஐரோப்பிய ஆனைய அதிபர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் உறுப்பினர்களாக செயல் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

3