அனுபமா பரமேஸ்வரன் – பும்ரா: கோவாவில் ரகசியத் திருமணம்?

0
160

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா இருவருக்கும் கோவாவில் ரகசியத் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேமம் படம் மூலம் புகழ்பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அதர்வாவுடன் ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அனுபமா குறித்து மீண்டும் வதந்திகள் பரவியுள்ளது. பும்ரா தனக்கு நல்ல நண்பர், காதல் எல்லாம் ஒன்றும் இல்லை என ஏற்கனவே அனுபமா மறுத்திருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா விடுவிக்கப்பட்டு உள்ளார். பும்ரா, நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கோவாவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதால் போட்டியிலிருந்து விலகியதாக வதந்திகள் பரவியது.

இதற்கு வசதியாக அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் விடுமுறையில் உள்ளதாக ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் குஜராத்தில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டில் தங்கியுள்ளார்.

அந்த இடம் பும்ராவின் அஹமதாபாத் வீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது. இதன் காரணமாகவே இருவரும் மீண்டும் கிசுகிசுவில் சிக்கியுள்ளனர். இந்த முறை ரகசியக் கல்யாணம் வரை கிசிகிசுக்கள் கிளம்பிவிட்டன.

The post அனுபமா பரமேஸ்வரன் – பும்ரா: கோவாவில் ரகசியத் திருமணம்? appeared first on MrPuyal Cinema.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.