விக்ரம் நடித்துக் கொண்டு இருக்கும் படம்தான் கோப்ரா. கோப்ரா ஃபஸ்ட் லுக் ரிலீசானது. பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் ஏழு வேடத்தில் உள்ளார்.
டிமான்டி காலனி இமைக்காநொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
அந்நியன் படத்தில் விக்ரம் மூன்று கெட்டப்பில் நடித்து அசத்தியிருந்தார். அது வெற்றியும் பெற்றது. அதற்கு முன்னால் சேது, காசி போன்ற படங்களில் தன்னை வருத்திக்கொண்டு நடித்தார்.
சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த இரண்டாவது படம்தான் 2015 ஆம் ஆண்டு வெளியான ஐ திரைப்படத்தில் விக்ரம் தன்னை முழுமையாக சங்கரிடம் ஒப்படைத்து நடித்தார்.
முதுகு கோணலாகவும் ஜிம் பாடி பாடிபில்டராக நடித்திருந்தார். ராஜபாட்டை என்ற படத்தில் ஒரு பாட்டில் அதிக கெட்டப்பில் வந்திருப்பார் விக்ரம்
டைரக்டர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகர் தன் உடம்பை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லமை மிக்கவர். ஆனால் கதை தேர்வில் தான் எங்கோ கோட்டை விடுகிறார்.
கடைசியாக விக்ரமுக்கு படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக வந்த 10 எண்றதுக்குள்ள, ஸ்கெட்ச், இருமுகன், கடாரம் கொண்டான், சாமி ஸ்கொயர் போன்ற படங்கள் சுமாராகவே ஓடியது.
தமிழ் நாட்டில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது அவரைப் பிடிக்காதவர்கள் இருக்க வாய்ப்பே இல்லை.
இந்த நிலையில் பிப்ரவரி 28-ஆம் தேதி மாலை கோப்ரா பர்ஸ்ட் லுக் வெளியானது. பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் பல கெட்டப்பில் தோன்றி அசத்தியிருந்தார்.
ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தவுடனே ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. விக்ரம் வழக்கம் போல தன் உடம்பை வருத்திக் கொண்டு இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிகிறது.
பார்த்த உடனே விக்ரம் தானா என்பது கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவுக்கு ரசிகர்களை பயமுறுத்திருக்கிறது இந்த கோப்ரா.
டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் படங்கள் நல்ல கதையம்சத்துடன் இயக்கியிருந்தார் அஜய் ஞானமுத்து. ஆகையால் இப்படமும் நல்ல கதையோட இருக்கும் என்பது சந்தேகமே இல்லை.