Home சினிமா கோலிவுட் மகள், மகன், மனைவியோடு இருக்கும் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம்!

மகள், மகன், மனைவியோடு இருக்கும் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம்!

500
0
Ajith Family Photo

Ajith Family Photo; அஜித் தனது மகள், மகன், மனைவி என்று குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகள், மகன், மனைவி என்று அஜித் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

எப்போதும் அஜித்தை பொது நிகழ்ச்சிகளில் காணமுடியாது. அவரே வெளியில் சென்றால் தான் அவரை காணமுடியும். இது தல ரசிகர்களுக்கு எப்போதும் வருத்தம் தரக்கூடிய ஒரு விஷயம்தான்.

மீடியாக்களுக்கும், பட புரோமோஷன்களுக்கும் சுத்தமா இல்லவே இல்லை. இந்த நிலையில்தான் மகள், மகன், மனைவி என்று அஜித் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அது வேறு எந்த புகைப்படமும் இல்லை. அண்மையில், ஆத்விக் தனது 6ஆவது (Aadvik Birthday) பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து தனியார் ஹோட்டல் ஒன்றில் கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில், மகள் அனோஷ்கா, மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோருடன் அஜித் கலந்து கொண்டார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில், அஜித்தின் நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது கேக்ட் வெட்டும் வீடியோ, புகைப்படம் வைரலானது. இந்த நிலையில்தான் அங்கு அஜித் தனது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், மனைவி ஷாலினி (Ajith Family Photo) ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அந்தப் புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் வலிமை (Valimai) படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் சென்னை படப்பிடிப்பு புகைப்படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. அதில், அஜித் பைக் ரேஸ் செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து, வலிமை படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்பெயின் நாட்டில் எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடு படப்பிடிப்பை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார் என்றும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வரயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஎரிந்து சாம்பலாகிய 50,000 வாக்கு இயந்திரங்கள் என்ன இப்படி ஆகிபோச்சு
Next articleமுகுல் வாஸ்னிக்; 60ஆம் கல்யாணம் இல்லை 60வயதில் தான் கல்யாணமே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here