Home சினிமா இந்திய சினிமா கவுதம் மேனனின் வேட்டையாடு விளையாடு 2

கவுதம் மேனனின் வேட்டையாடு விளையாடு 2

456
0
கவுதம் மேனனின் வேட்டையாடு விளையாடு 2

கவுதம் மேனனின் வேட்டையாடு விளையாடு 2,விரைவில் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2006-ல் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கமாலினி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் இசையும் பெரிய அளவில் எதிரியை கண்டது.

தற்போது கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான 120 பக்க கதை ரெடி ஆகி விட்டதாக இயக்குனர் கௌதம்மேனன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது கமல்ஹாசன் ‘இந்தியன்-2’ மற்றும் ‘தலைவன் இருக்கின்றான்’ ஆகிய இரண்டு படங்களையும் முடித்து கொடுப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்கிடையில் கமர்சியல் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகம் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கமல்ஹாசனின் படங்களில் இருக்கும்.

அந்த வகையில் இந்தியன் 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் சிலர் கமலஹாசன் அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதில்லை எனவும்,

இன்னும் சிறிது காலத்திற்கு நடிப்பில் கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தலைவன் இருக்கின்றான், இந்தியன்2 படங்களை முடித்த கையேடு கண்டிப்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு-2 வில் நடிக்க உள்ளாராம்.

இருந்தாலும் படங்கள் ரிலீஸ் ஆனபிறகு தான் வேட்டையாடு விளையாடு 2 வில் நடிப்பார் என்பதால் கெளதம் மேனன் சற்று கவலையில் இருப்பதாக தெரிகிறது.

Previous articleடெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி
Next articleஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான அடிஷி மர்லேலா விற்கு கொரோனா தொற்று : டெல்லி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here