Home நிகழ்வுகள் இந்தியா டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி

257
0
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொரோனா நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது இவருக்கு இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையாகும்.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவருக்கு நோய் தொற்று இல்லை என முடிவுகள் வந்த நிலையில் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.

முதல்முறை மேற்கொள்ளப்பட்ட முடிவுகளில் negative என வந்தாலும் இவருக்கு தொடர்ந்து கொரோனா அறிகுறிகள் இருந்து வந்துள்ளது. இதனால் மீண்டும் பரிசோதனை செய்துகொண்டார்.

இரண்டாம் முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சத்யேந்திர ஜெய்ன் திங்களன்று இரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செவ்வாயன்று அவர் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் “கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளேன்”

என்று குறிப்பிட்டிருந்தார். ஞாயிறன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சத்யேந்திர ஜெய்னும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Previous articleதமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 50,000 த்தை கடந்தது
Next articleகவுதம் மேனனின் வேட்டையாடு விளையாடு 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here