ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம்; அமிதாப் பட்சன் உருக்கத்துடன் பதிவு, பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் 67ஆம் வயதில் புற்றுநோய் காரணமாக உயிரழந்தார்.
ரிஷி கபூர் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் அவரை மும்பையிலுள்ள எச்என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக அவரின் சகோதரன் ரந்திர் தெரிவித்தார்.
ரிஷி கபூர் 2018ஆம் ஆண்டு புற்று நோய் பாதிப்பு காரணமாக அமெரிக்க சென்று சிகிச்சை பெற்று வந்தார். திடீரென்று நேற்று உடல் நிலை மோசமாகியுள்ளது.
இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உயிரழந்து விட்டதாக மிகுந்த வருத்தத்துடன் அமிதாப் பட்சன் ட்வீட் செய்துள்ளார்.
https://twitter.com/SrBachchan/status/1255709029336322048?s=20
நேற்று தான் பாலிவுட் தலைசிறந்த நடிகர் இர்ஃபான் கான் இறந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மற்றொரு நடிகர் இறந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.