Home சினிமா இந்திய சினிமா Vakeel saab: நேர்கொண்ட பார்வை அஜித்-யை மிஞ்சிய பவன் கல்யாண்

Vakeel saab: நேர்கொண்ட பார்வை அஜித்-யை மிஞ்சிய பவன் கல்யாண்

455
0
நேர்கொண்ட பார்வை அஜித் Vakeel saab பவன் கல்யாண் பெண்கள் இல்லை மார்ச் 8 மகளிர் தினம்

Vakeel saab: நேர்கொண்ட பார்வை அஜித்-யை மிஞ்சிய பவன் கல்யாண். ஒரு ஓரமாக கூட பெண்கள் இல்லை. முழு போஸ்டரிலும் Pawan Kalyan மட்டுமே ஆக்கிரமித்துள்ளார்.

பவன் கல்யாண் யார்?

பவன் கல்யாண் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சிவியின் தம்பி. இவர் படங்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறையே வெளியாகும்.

இவர் படம் ரிலீஸ் என்றாலே ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மாஸ் தான். மாஸ் என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே இவர் படங்களில் இருக்கும்.

தமிழில் வெளியான பத்ரி, குஷி ஆகிய ரீமேக் படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகராக உருவெடுத்தார்.

Pink Remake of Vakeel saab

அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன் தமிழ் ரீமேக் நேர்கொண்ட பார்வை.

அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித் நடித்தார். நேர்கொண்ட பார்வை அஜித், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிங்க் படத்தின் பர்ஸ்ட் லுக் போன்றே வடிவமைத்து இருந்தனர்.

ஆனால், அஜித் ரசிகர்களுக்கு என்றே ஒரு முரட்டு சண்டைக்காட்சி படத்தில் இடம் பெற்றது. இது நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது.

தெலுங்கின் வக்கீல் சாப் படம் ஒரு படி மேலே சென்று பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பவன் கல்யாண் (Pawan Kalyan) மட்டுமே உள்ளது போன்று வடிவமைத்து வெளியிட்டு உள்ளனர்.

போஸ்டரிலேயே பவன் கல்யாணை மட்டும் காட்டியுள்ளனர் என்றால், படத்தில் எத்தனை பைட்டிங் காட்சிகள் இருக்கப்போகிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மார்ச் 8 மகளிர் தினம்

மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் கதையின் முக்கிய பாத்திரங்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இல்லை.

இது பவன்கல்யாணின் பெண் ரசிகர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருந்திற்காவது மூன்று கதாநாயகிகளையும் ஒரு ஓரத்தில் வைத்து இருந்து இருக்கலாம்.

அதே நேரம் Pawan Kalyan கெட்டப், பேட்ட படத்தின் ரஜினி சாயலில் இருப்பதாகவும் தமிழ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ரஜினி+அஜித் கலந்த கலவையாக இப்படத்தில் நிச்சயம் நடித்திருப்பார் எனக் கூறிகின்றனர்.

Previous articleசச்சின் பன்சால்; வரதட்சணை வழக்கு தொடுத்த பிலிப்கார்ட் நிறுவனர் மனைவி
Next articleதமிழகத்தில் கொரோனா; திருச்சியில் நான்கு பேர் சிறப்பு வார்டில் அனுமதி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here