Home சினிமா கோலிவுட் மாஸ்டர் படத்தில் அனிதா பற்றிய சென்டிமென்ட் காட்சியா?

மாஸ்டர் படத்தில் அனிதா பற்றிய சென்டிமென்ட் காட்சியா?

430
0
Anitha Scene in Master Movie

Neet Anitha; அனிதாவைப் பற்றிய சென்டிமென்ட் காட்சிகள் மாஸ்டர் படத்தில் இருக்கிறது என்று தகவல் வெளியாகி வருகிறது.

Master Anitha Sentiment Scene; மாஸ்டர் படத்தில் அனிதாவைப் பற்றிய சென்டிமென்ட் காட்சி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master). கல்வித்துறையில் நடக்கும் ஊழலை மையப்படுத்தி மாஸ்டர் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நேற்று மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி கம்மிங் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆனால், பாடலில் அப்படி ஒன்றும் பாடல் வரிகள் இல்லை. சும்மா தீம் மியூசிக்கை வைத்தே பாடலாக்கப்பட்டுள்ளது என்று பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் அனிதாவைப் பற்றிய சென்டிமென்ட் காட்சிகள் இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவம் படிக்க வேண்டும் என்பதை ஆசையாகக் கொண்டிருந்தார்.

ஆனால், மத்திய அரசோ நீட் தேர்வில் (NEET Exam) அடிப்படையில் மருத்துவர் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துவிட்டது. எனினும், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் முடிவும் மத்திய அரசுக்கு சாதகமாகிவிட்டது. இதன் காரணமாக அனிதா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்போது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போது அனிதாவை மையப்படுத்திய சென்டிமென்ட் காட்சிகள் மாஸ்டர் (Anitha Sentiment Scene) படத்தில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

பெரும்பாலும் விஜய் நடிக்கும் படங்களில் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில், அனிதாவோ மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று தோல்வியுற்றார்.

ஆதலால், கண்டிப்பாக மாஸ்டர் படத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், அனிதாவைப் பற்றிய சென்டிமென் ட் காட்சிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அனிதாவைத் தொடர்ந்து பிரதீபா, ரிதுஸ்ரீ, வைஷியா மற்றும் மோனிஷா ஆகிய மாணவிகளும் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் லிரிக் வீடியோ (Vaathi Coming Lyric Video) வெளியானதைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) நடக்க இருக்கிறது.

இதனை சன் தொலைக்காட்சி (Sun TV Live Master Audio Launch) நேரலை செய்கிறது. ஆனால், தற்போது வரை மாஸ்டர் இசை வெளியீடு எங்கு நடக்கிறது என்பது குறித்து அறிவிப்பு வரவில்லை.

தற்போது விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அவர் சென்னை திரும்பிய பிறகு மாஸ்டர் இசை வெளியீடு எங்கு நடக்கிறது என்பது குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleவிஜய் ஹசாரே பிறந்த தினம் இன்று; வரலாற்றில் இன்று மார்ச் 11
Next articleமஞ்சிமா மோகனுக்கு இன்று பிறந்தநாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here