Home Latest News Tamil ஸ்விட்சர்லாந்தில் ரேஸ் – மாஸ் காட்டும் வலிமை அஜித்

ஸ்விட்சர்லாந்தில் ரேஸ் – மாஸ் காட்டும் வலிமை அஜித்

722
0
ஸ்விட்சர்லாந்தில் ரேஸ் - மாஸ் காட்டும் வலிமை அஜீத் Valimai Ajith Race Scene

ஸ்விட்சர்லாந்தில் ரேஸ் காட்சி (Valimai Ajith Race Scene): அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தில், இரண்டு பயங்கரமான ரேஸ் காட்சிகள் ஸ்விட்சர்லாண்டில் படமாக்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே அஜீத்திற்கு பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுத் தந்தது.

வலிமை அஜித் (Valimai Ajith Movie Update)

அதற்கு அடுத்ததாக தற்போது நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்த போனி கபூரின் தயாரிப்பில் அதே இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் ஏ.கே 60 திரைப்படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டு அதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் பலதரப்பட்ட சிறப்பான ஆக்ஸன் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும் அவை பிரம்மிக்கும்படியாகவும் படமாக்கப்பட இருக்கிறது என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்தத் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போட்டு சிறப்பாக நடைபெற்றது.

தற்போது சென்னையில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சர்லாந்தில் ரேஸ் (Valimai Ajith Race Scene)

இந்தத் திரைப்படத்தில் அஜீத் இரண்டு விதமான ரேஸ்களில் ஈடுபடுமாறு காட்சிகள் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதற்காக இந்தப் படக்குழுவினர் அனைவரும் மொத்தமாக வரும் ஏப்ரல் மாதம் ஸ்விச்சர்லாந்து செல்ல இருப்பதாகத் தெரிகிறது.

எப்படிப்பார்த்தாலும், அஜீத்தின் ரசிகர்களுக்கு மாபெரும் ரேஸ் விருந்து இந்தத் திரைப்படத்தில் காத்திருக்கிறது.

தியேட்டர்களில் இந்தக் காட்சிகளின் போது ரசிகர்களின் ஆரவாரம் வானை மிஞ்சும் அளவிற்கு இருக்கப்போகிறது. திரைப்படம் பெரும்பாலும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் அவருக்கு லீட் ரோலாக நடித்த ஹீமா குரேஸி, அஜீத்துடன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிகிறது.

இந்த அதிரடியான புது அப்டேட் அஜீத் ரசிகர்களை குதூகலமடையச் செய்துள்ளது. அதிலும் அஜீத் இதில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பது முன்னேரே உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

அஜீத்தின் சூப்பரான மாஸான போலீஸ் லுக்குடன் (Ajith Police Look) கூடிய ஃபர்ஸ்ட் லுக்  (Valimai First Look) எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Previous article550 கோடி மணி நேரம் விழுங்கிய டிக்டாக்: ஆப் அன்னி
Next articleஉலக புற்றுநோய் தினம் 2020: புற்றுநோய் புள்ளிவிவரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here