Home சினிமா கோலிவுட் காமெடி நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்: நடிகை பிரகதி!

காமெடி நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்: நடிகை பிரகதி!

332
0
Pragathi

Pragathi; காமெடி நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்: நடிகை பிரகதி! படப்பிடிப்பின் போது காமெடி நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று நடிகை பிரகதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வந்த வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரகதி.

கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பெரிய மருது, சும்மா இருங்க மச்சான், பாண்டியனின் ராஜ்யத்தில், வாழ்க ஜனநாகம், தாரை தப்பட்டை, கெத்து, எத்தன், என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழை விட தெலுங்கு சினிமாவில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். கிட்டத்ட்ட 90க்கும் அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனைக் கிளி தொடரில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது மகனுடன் இணைந்து வேஷ்டி சட்டையில் இருந்தபடி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் பிரகதி தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

மூத்த காமெடி நடிகர் ஒருவர் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்தார். ஆம், படப்பிடிப்பு தளத்தில் இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருந்த போது, அவரது பேச்சும், செயலும் தவறான முறையில் இருந்தது.

ஒரு அளவுக்கு மேல் என்னால் தாங்க முடியாத நிலையிலும், அனைவரது முன்னிலையிலும் அவரை நான் காயப்படுத்த விரும்பவில்லை.

மாறாக எனது கேரவனுக்கு வரவழைத்து பேசினேன். என்னிடம் தவறான முறையில் அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? என்று கேட்டேன்.

அவர் இல்லை என்றார். நீங்கள் செய்தது தவறு, ஏற்றுக்கொள்ள முடியாதது என்றேன்.

படப்பிடிப்பிலேயே உங்களை திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் இமேஜ் ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு தனியாக அழைத்து சொல்கிறேன் என்றேன்.

அதன்பிறகு அவர் என்னிடம் மோசமாக நடந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி: அனுஷ்கா!
Next articleவிரலை கட் பண்ணிவிட்டு வலியால் துடித்த சன்னி லியோன்: வைரலாகும் வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here