Home சினிமா கோலிவுட் ஹலோவில் டிரெண்டாகும் AdvanceHBDHarishKalyan ஹேஷ்டேக்!

ஹலோவில் டிரெண்டாகும் AdvanceHBDHarishKalyan ஹேஷ்டேக்!

262
0
AdvanceHBDHarishKalyan

Harish Kalyan; ஹலோவில் டிரெண்டாகும் AdvanceHBDHarishKalyan ஹேஷ்டேக்! நடிகர் ஹரிஷ் கல்யாண் நாளை தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், AdvanceHBDHarishKalyan என்ற ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளுக்கு முன்னதாக AdvanceHBDHarishKalyan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நாளை தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் விட்டு வெளியில், வந்த பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த படம் பியார் பிரேமா காதல். இந்தப் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்திருந்தார். காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம் இளம் பருவத்தினரை வெகுவாகவே கவர்ந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற மற்றொரு காதல் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருந்தார்.

இவர்களது கெமிஸ்டரி படம் முழுவதும் பார்வையாளர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. அந்தளவிற்கு அவர்களது நடிப்பும், காதலும் இருந்தது.

தொடர்ந்து தாராள பிரபு நடித்தார். இந்த 3 படங்களுக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். தற்போது, கசட தபற, பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நாளை தனது 30ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

இதன் காரணமாக HarishKalyanBdayCDP என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தொடர்ந்து, AdvanceHBDHarishKalyan என்ற ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

மேலும், ஹரிஷ் கல்யாணின் ஆசை என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில், ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஆசையை கவிதையாக எழுதியுள்ளார்.

இப்போது இருக்கிற இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னால், இருக்க பிடிக்கவில்லை. எனக்க பறக்க வேண்டும். அந்த நட்சத்திரங்களை தொட வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார்.

நான் உயரமாக பறந்து நட்சத்திரங்களை தொட வேண்டும்

ஆத்மாத்மாக பாடவேண்டும்

உங்களது முகத்தில் புன்னகையை பார்க்க வேண்டும்

இயற்கையை கட்டியணைத்து அழ வேண்டும்

ஒரு பழத்தை எடுக்க வேண்டும்

அதனை சேமிக்க வேண்டும்

ஓ கடவுளே

என் இதயங்களை அவிழ்த்துவிட்டு, என்னை விடுவிக்க வேண்டும்

இந்த குழப்பத்தை நான் வெறுக்கிறேன்

நீங்கள் என்னை கேட்கிறீர்களா? என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here