Home சினிமா கோலிவுட் என்னது ஆர்யா அப்பாவாகப்போகிறாரா?

என்னது ஆர்யா அப்பாவாகப்போகிறாரா?

326
0
என்னது ஆர்யா அப்பாவாகப்போகிறாரா?

என்னது ஆர்யா அப்பாவாகப்போகிறாரா?  நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா இருவரும் 2019 மார்ச்சில் திருமணம் செய்துகொண்டனர்.

தெலுங்கில் அகில் திரைப்படத்தில் அறிமுகமானவர் சாயிஷா, இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் வனமகன் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.

கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற இவரும் ஆர்யாவும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சமூகவலைத்தளங்களில் பிஸியாகவே இருக்கும் சாயீஷா உணவு சமைப்பது, யோகா செய்வது, நடனம் ஆடுவது ஆகியவற்றை சமூகவலைத்தளத்தில் பகிர்வார். ஆர்யாவுடன் எடுத்த புகைப்படங்களையும் தொடர்ந்து பகிர்வதை வழக்கமாகவே கொண்டு இருக்கிறார்.

எப்போதும் டைட்டாக உடை அணிந்து இருக்கும் சாயீஷா, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் லூசான சுடிதார் அணித்திருந்தார். பார்ப்பதற்கு சற்று எடை கூடியதுபோல் தெரிந்தார்.

இதனால் ஆர்யா சாயிஷாவிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் அவர்களது ரசிகர்கள் சாயிஷா கர்பமாக உள்ளார் என நினைத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்துள்ளனர்.

ஆனால் சாயிஷாவின் அம்மா இதனை மறுத்துள்ளார். சாயிஷா தற்போது கர்பமாக இல்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஎதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் :மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ
Next articleசாயிஷா கர்ப்பமா? அப்பா – அம்மாவான ஆர்யா சாயிஷா ஜோடி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here