Home சினிமா கோலிவுட் Draupathi: தல நல்லா இருக்காரா? ஷாலினியிடம் கேட்ட ரசிகர்

Draupathi: தல நல்லா இருக்காரா? ஷாலினியிடம் கேட்ட ரசிகர்

728
0
Draupathi ஷாலினி திரௌபதி

Draupathi: தல நல்லா இருக்காரா அக்கா என்று ரசிகர் ஒருவர் ஷாலினி அஜித்திடம் கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் ஆகியோரது நடிப்பில் நேற்று திரைக்கு வந்த திரௌபதி படத்தை நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி குடும்பத்தோடு சென்று பார்த்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவருக்கு ரசிகர்கள் இல்லாத ஊரே இருக்காது. அந்தளவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார்.

அஜித் என்றால் தன்னம்பிக்கை, தைரியம், விடா முயற்சி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அமர்க்களம் படத்தின் மூலம் ஷாலினியும், அஜித்தும் ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆத்விக் என்ற மகனும், அனோஷ்கா என்ற மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி சினிமாவை விட்டு விலகியுள்ளார்.

தற்போது தல அஜித் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று வரிசையாக பல ஹிட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட வலிமை படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில், ஷாலினி குடும்பத்தோடு, சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கிற்கு நேரில் சென்று நேற்று வெளியான திரௌபதி படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

ஷாலினி அஜித்

இதன் காரணமாக ஷாலினி அஜித் #ShaliniAjith என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

சுவிச்சர்லாந்து ரேசில் அஜித் காயம் பட்டதாக தகவல்கள் வெளியாகியது. எனவே, திரையரங்கிறகு வந்த ஷாலினியிடம், தல நல்லா இருக்காரா அக்கா? அவருக்கு எதுவும் ஆகலேல?

இவ்வாறு ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு சிரித்துக்கொண்டே நல்லா இருக்கார் என்று பதிலளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Draupathi Twitter

திரௌபதி

இயக்குநர் மோகன் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் ஆகியோரது நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம் திரௌபதி.

சிலம்பம் ஆசிரியராக இருக்கும் ரிச்சர்டும், திரௌபதியும், தங்களது கிராமத்திற்குள் போர் போட்டு குடிப்பதற்கு தண்ணீர் விநியோகம் செய்து வரும் அரசியல்வாதியை எதிர்க்கிறார்கள்.

இதனால், பாதிக்கப்பட்ட அந்த அரசியல்வாதி, திரௌபதி மற்றும் அவரது சகோதரி ஆகியோரை கொலை செய்து, ரிச்சர்ட் மீது பழி சுமத்துகிறார்.

இதையடுத்து சிறைக்கு சென்று திரும்பிய ரிச்சர்ட் சம்பந்தப்பட்டவர்களை குறி வைத்து அவர்களை தீர்த்து கட்டுகிறார்.

அவர் யார் யாரை கொலை செய்தார்? எதற்காக கொலை செய்தார் என்பதற்கான காரணத்தை சித்தரிக்கும் கருவோடு வந்திருக்கும் படமே திரௌபதி.

படத்தில், ஆணவக் கொலை, சாதி அரசியல் போன்றவை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரௌபதி முழு விமர்சனத்தை படிக்க கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here