Keerthy Suresh; டுவிட்டரில் டிரெண்டாகும் KeerthyBDayGalaIn100D ஹேஷ்டேக்! நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், KeerthyBDayGalaIn100D என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
டுவிட்டரில், KeerthyBDayGalaIn100D என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஹீரோயினை மையப்படுத்திய பென்குயின் படத்தில் நடித்திருந்தார். அண்மையில், இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர, மிஸ் இந்தியா, குட் லக் சகி, ராங்க் தே ஆகிய தெலுங்கு படங்களிலும், மரக்கார் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
குறுகிய காலத்திலேயே தனது நடிப்புத் திறமையால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில், டுவிட்டரில், KeerthyBDayGalaIn100D என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
மேலும், கீர்த்தி சுரேஷ்க்கு ரசிகர்கள் Advance Happy Birthday தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.