Home சினிமா கோலிவுட் உலக நடன தினம்: அசத்தல் டான்ஸ் வீடியோ வெளியிட்ட கிகி!

உலக நடன தினம்: அசத்தல் டான்ஸ் வீடியோ வெளியிட்ட கிகி!

746
0
KiKi Dance Video

KiKi Dance Video; உலக நடன தினம்: அசத்தல் டான்ஸ் வீடியோ வெளியிட்ட கிகி! உலக நடன தினத்தை முன்னிட்டு சாந்தனுவின் மனைவி கிகி அசத்தலான டான்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கிகி டான்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் World Dance Day.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் மே 3 ஆம் தேதி லாக்டவுன் முடிவடையும் நிலையில், மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் முதல் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தான் நேரம் செலவிட்டு வருகின்றனர்.

தங்களது அன்றாட பணிகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தி பகிர்ந்து வருகின்றனர்.

சமையல் செய்வது, தோட்ட வேலை பார்ப்பது, விவசாயம் செய்வது, யோகா, உடற்பயிற்சி, வீட்டு வேலை பார்ப்பது, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி ஆகியோர் டிக் டாக் செய்து பல வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இன்று உலக நடன தினம் என்பதால், அசத்தலாக ஒரு டான்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிகி வெளியிட்டுள்ளார்.

ஹிந்தி பாடல் ஒன்றிற்கு டான்ஸ் ஆடுவது போன்று காட்டப்பட்டுள்ளது. அதில், இன்று சர்வதேச நடன தினம் என்று பதிவிட்டுள்ளார்.

இன்று உலக நடன தினம் என்பதால் ஹலோவில், Best Dance Video என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதன் மூலம், நடன வீடியோ மற்றும் நடிகர், நடிகைகளின் டான்ஸ் வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here