Home சினிமா கோலிவுட் மார்ச் 13ல் வெளியாகும் படங்களின் பட்டியல்!

மார்ச் 13ல் வெளியாகும் படங்களின் பட்டியல்!

574
0
March 13 Tamil Movie Release

Tamil Movie Release; இந்த வாரம் வால்டர், தாராள பிரபு, அசுரகுரு ஆகிய படங்கள் உள்பட 7 படங்கள் வெளியாகிறது.

March 13 Tamil Movie Release; மார்ச் 13 ஆம் தேதி தாராள பிரபு, அசுரகுரு, வால்டர், கயிறு, எனக்கு ஒன்னு தெரிஞ்சு ஆகணும், தஞ்சமடா நீ எனக்கு, ரகசிய போலீஸ் ஆகிய படங்கள் வெளியாகிறது.

ஒவ்வொரு வாரமும் தமிழ் சினிமாவில் குறைந்தது 5 படங்கள் திரைக்கு வருவது வழக்கம். இதில், சிறிய பட்ஜெட் படங்கள், மாஸ் ஹீரோவின் படங்கள் ஆகியவை அடங்கும்.

ஆனால், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி ஆகியோரது படங்கள் முக்கிய தினங்களில் வெளியாவது வழக்கம். ஆதலால், இந்தப் படங்கள் அதிக வசூல் குவித்துவிடும்.

ஒரே நாளில் 5க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவதால், அந்தப் படங்களின் வசூல் பாதிக்கப்படும். அப்படியில்லை என்றால், படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

இப்படி, பல பிரச்சனைகளை தாண்டி நாளை மார்ச் 13 ஆம் தேதி அசுரகுரு, தாராள பிரபு, எனக்கு ஒன்னு தெரிஞ்சு ஆகணும், கயிறு, தஞ்சமடா நீ எனக்கு, வால்டர், ரகசிய போலீஸ் (ரீ – ரிலீஸ்) ஆகிய படங்கள் திரைக்கு வருகிறது.

அசுரகுரு

தமிழகத்தில் நிகழ்ந்த ரயில் கொள்ளை சம்பவத்தை மையப்படுத்தி அசுரகுரு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், விக்ரம் பிரபு, யோகி பாபு, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜதீப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரயில் கொள்ளையை மையப்படுத்திய படம் என்பதால், இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வால்டர்

குழந்தைகள் கடத்தப்படும் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சிபி சத்யராஜ், ஷிரின் காஞ்வாலா, சமுத்திரக்கனி, நட்டி என்ற நடராஜ், சனம் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

அன்பரசன் வால்டர் படத்தை இயக்கியுள்ளார். சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

தாராள பிரபு

விந்து தானம் செய்யபடுவதையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக், தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். கிருஷ்ண மாரிமுத்து தாராள பிரபு படத்தை இயக்கியுள்ளார்.

விக்ரம் பிரபி, சிபிராஜ், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்கு மட்டும் இன்றைய நாளில் போட்டி ஏற்பட்டுள்ளது.

மற்ற படங்கள் அப்படி ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் இல்லை என்பதால், ரசிகர்கள் இந்தப் படங்களுக்கு மட்டும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கயிறு, எனக்கு ஒன்னு தெரிஞ்சு ஆகணும், ரகசிய போலீஸ், தஞ்சமடா நீ எனக்கு ஆகிய படங்களின் கதை நன்றாக இருந்தால் இந்தப் படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://platform.twitter.com/widgets.js

தொடர்ந்து வரும் 20 ஆம் தேதி அல்டி, காக்டைல், கேர் ஆப் காதல், கன்னி ராசி, காவல் துறை உங்கள் நண்பன், மரிஜூனா, பல்லு படாம பாத்துக்க, புறநகர் ஆகிய 8 தமிழ் படங்கள் திரைக்கு வருகிறது.

https://platform.twitter.com/widgets.js

SOURCER SIVAKUMAR
Previous article13/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleWorld Sleep Day 2020 Theme; உலக தூக்க தினம் 2020 தீம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here