Home சினிமா கோலிவுட் உலக அழகி பட்டம் பெற்றதோடு தரையில் அமர்ந்து சாப்பிடும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி பட்டம் பெற்றதோடு தரையில் அமர்ந்து சாப்பிடும் ஐஸ்வர்யா ராய்!

317
0
Miss World 1994 Title Winner Aishwarya Rai

Miss World 1994 Title Winner Aishwarya Rai; உலக அழகி பட்டம் பெற்றதோடு தரையில் அமர்ந்து சாப்பிடும் ஐஸ்வர்யா ராய்: வைரலாகும் புகைப்படம்! பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்ற கையோடு தரையில் அமர்ந்து சாப்பிடும் அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்றதோடு தரையில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

மணி ரத்னம் இயக்கத்தில் வந்த இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இப்படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 என்ற ரோபோ படத்திலும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

தற்போது மீண்டும் இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், ஹிந்தி, பெங்காலி, இங்கிலீஸ் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர், நடிகர் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதயா என்ற மகள் இருக்கிறாள்.

கடந்த 1973 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பிறந்த ஐஸ்வர்யா ராய், தனது 21 ஆவது வயதில் 1994 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி தென் ஆப்ரிக்காவில் நடந்த 44ஆவது உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.

உலகம் முழுவதிலும் இருந்து தன்னுடன் போட்டியிட்ட 87 போட்டியாளர்களையும் கடந்து ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக முடி சூட்டப்பட்டார்.

ஆம், கடந்த 1993 ஆம் ஆண்டு உலக அழகியாக இருந்த ஜமைக்காவைச் சேர்ந்த 21 வயது கட்டிடக்கலை மாணவி லிசா ஹன்னா, ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகி என்ற பட்டத்தை வழங்கி முடி சூடினார்.

உலக அழகி பட்டம் பெற்ற கையோடு சக பெண்மணியாக தரையில் அமர்ந்து ஐஸ்வர்யா ராய் உணவருந்தியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலையில் உலக அழகி என்ற கிரீடத்துடன் உணவு அருந்தும் புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous article23/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleமாஸ்க் அணிந்தபடி மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று வந்த தல: வைரலாகும் புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here