Home சினிமா கோலிவுட் ப்ளூ சட்டை மாறன் மீது வழக்கு; கைது நடவடிக்கை பாயுமா?

ப்ளூ சட்டை மாறன் மீது வழக்கு; கைது நடவடிக்கை பாயுமா?

550
0
ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன் மீது வழக்கு; கைது நடவடிக்கை பாயுமா?

ஏன் விமர்சனம் செய்கிறேன்?

120 ரூபாய் படம் பார்த்துவிட்டு நான் எப்படி வேண்டுமோ விமர்சனம் செய்வேன். அதற்கு எனக்குத் தகுதி உள்ளது. இதுதான் புளூ சட்டை இளமாறனின் நீண்ட காலப் பதில்.

இயக்குனர் சாய் ரமணி சில வருடங்களுக்குமுன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை இயக்கினார். இப்படத்தை மாறன் கொடூரமாக விமர்சனம் செய்தார்.

விவேகம் படத்தை மரண கொடூரமாக விமர்சனம் செய்தார். இதனால் சாய் ரமணி,  மாறன் மீது புகார் கொடுத்தார்.

இருப்பினும், தொடர்ந்து விமர்சனம் செய்துகொண்டே தான் உள்ளார். காளி படம் மிகக்கேவலமாக உள்ளது எனக்கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த கிருத்திகா உதயநிதி, மாறனை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்தார். ஆனால் மாறன் மறுத்துவிட்டார்.

மாறனை பற்றி கிருத்திகா விமர்சனம் செய்தது, அதை தமிழ்டாக்கீஸ் யூடியூப் சேனலிலேயே போடுமாறு கேட்டுக்கொண்டார்.

சார்லி சாப்ளின் 2

சமீபத்தில் வெளியான இப்படத்தை தரக்குறைவாக மாறன் விமர்சனம் செய்துள்ளார் என படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா கமிசனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

மாறன் பொதுவாகவே அனைவரையும் மரியாதை இன்றி பேசுகிறார். பணம் சம்பாதிப்பதற்காக மிரட்டி விமர்சனம் செய்து விளம்பரம் வாங்குகிறார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவா கோரிக்கை விடுத்துள்ளார். இனியாவது அவர் கைது செய்யப்படுவாரா? அல்லது இந்த புகாரும் கிடப்பில் போடப்படுமா?

Previous articleவாட்ஸ்ஆஃப் பீட்டா: அசரவைக்கும் 5 புதிய அப்டேட்
Next articleடீசி படங்களை தூசியாக்கி வசூலை அள்ளிய அக்குவாமென்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here