Home சினிமா கோலிவுட் ராட்சசி ஜோதிகா: இயக்குனர் ராஜ் சொல்வது என்ன?

ராட்சசி ஜோதிகா: இயக்குனர் ராஜ் சொல்வது என்ன?

674
0
ராட்சசி ஜோதிகா

ராட்சசி ஜோதிகா: இயக்குனர் ராஜ் சொல்வது என்ன?

சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் சக்கைபோடு போட்டது. இதைத் தொடர்ந்து ராட்சசி என்ற தலைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அழகிய ராட்சசியாக ஒரு நேரத்தில் வலம் வந்தவர் ஜோதிகா. சந்திரமுகி படத்திற்கு பிறகு ஜோதிகாவைப் பார்த்து பயப்படாத குழந்தைகளே இல்லை.

தற்பொழுது நடிகை ஜோதிகா புதுமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். பூர்ணிமா பாக்யராஜ், சத்யராஜ், ஹரிஷ் பெரடி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துவருகின்றனர்.

இப்படத்தில்  ஜோதிகா ஆசிரியையாக நடித்துள்ளார். அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்துவது. மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவது போன்ற விஷயங்களைப் பற்றி இப்படம் பேசுகின்றது.

இந்தப் படத்திற்கு ‘ராட்சசி’ எனத் தலைப்பு வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆசிரியையாக நடித்த ஜோதிகாவுக்கு இந்த தலைப்பு ஒத்து வருமா?

ராட்சசி எனத் தலைப்பிடும் அளவிற்கு படத்தில் அப்படி என்ன உள்ளது? இயக்குனர் ராஜ் சொல்லவரும் கருத்து என்ன? என இப்பொழுதே இந்தப்படத்திற்கான ஆவலை எகிற வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here