அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிரைலர் வெளியானது
இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
2.26 நிமிடங்கள் கொண்ட டிரைலரில் தற்போது ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் கேப்டன் மார்வலின் பங்கு இந்த படத்தில் இருக்கும் என்பது டிரைலர் பார்க்கும் போதே தெரிகிறது.
இந்த டிரைலருக்கு முன் டிஸ்னி இரண்டு சிறிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு இருந்தது.
மேலும் இதனுடன் ஒரு மோஷன் பிக்சரையும் வெளியிட்டுள்ளது. இதில் கேப்டன் மார்வேல் இடம் பெற்றுள்ளார்.
அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்காவின் கடந்த காலத்தை நினைவு படுத்தும் விதமாகவும், அயர்ன் மேன் வீடு திரும்புவது போல காட்சிகளும் உள்ளன.
எண்ட் கேமில் அனைத்து சூப்பர் ஹீரோக்களும் வருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. டிரைலரில் வரும் ‘whatever it takes’ டயலாக் தமிழ் பட வசனங்கள் போல மரண மாஸ் ஆக இருக்கிறது.
தற்போது திரை அரங்குளில் வசூலை அள்ளி குவிக்கும் கேப்டன் மார்வேல் ஓடி முடிப்பதற்குள் ஏப்ரல் 26ஆம் தேதி எண்ட் கேம் திரைப்படம் ரிலீஸ் ஆகி விடும்.