Home நிகழ்வுகள் உலகம் நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்

580
0
நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு

நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்

பங்களாதேஷ் வீரர்கள் நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் என்ற இடத்தில் மசூதியில் தொழுகச் செல்லும் பொழுது நடந்த துப்பாக்கிச் சூட்டைப் பார்த்து தலைதெறித்து ஓடினர்.

இந்த நிகழ்வு நடக்கும் பொழுது பெரும்பாலான வீரர்கள் கிறிஸ்ட்சர்ச் மசூதியில் தான் இருந்தனர் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு தலைவர் ஜலால் யூனுஸ் கூறியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அடியும் படவில்லை. இருந்தாலும் வீரர்கள் அனைவரும் மன உளைச்சலில் இருக்கின்றனர் எனவும் யுனுஸ் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் தொடக்க வீரர் தமீம் இக்பால் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம், பயங்கரமான ஒரு அனுபவம் இது. எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியின் கேப்டன் முஸ்தஃபிகர் ரஹிம் ‘அந்த அல்லா தான் எங்களை காப்பாற்றினார். இதுபோல் நிகழ்வுகள் மீண்டும் பார்க்க நாங்கள் விரும்பவில்லை என ட்வீட் செய்துள்ளார்.

அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக ஹோட்டலுக்கு திரும்பியதை உறுதிப்படுத்தி பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு ட்வீட் செய்துள்ளது.

எதற்காக திடீரென துப்பாக்கிச் சூடு நடந்ததென்று தெரியவில்லை. இரண்டு மசூதிகளில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஓரிரு உயிர்கள் போய்விட்டது.

இதில் சந்தேகத்திற்கு இடமாக நான்கு பேரை கைது செய்துள்ள நியூசிலாந்து போலீஸ் அதில் ஒரு பெண் பயங்கரவாதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு பேரில் ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது. ஆனால் அங்கு உண்மையான நிலவரம் இதுவரை என்னவென்று சரியாகத் தெரியவில்லை.

அனைத்துத் தகவல்களும் சி‌என்‌என்(CNN) பத்திரிக்கையின் கருத்துகளைப் பொறுத்து எழுதப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here