Rise of Vijay: எதிர்க்கும் பாஜக; ஆதரித்த திமுக. ஐடி ரெய்டு நடந்த பின்பு விஜய் தைரியமாக ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் செல்பி எடுத்து தன்னுடைய முழு பலத்தை காட்டியுள்ளார்.
விஜய் ஐடி ரெய்டின் பின்னணி
இந்த ஐடி ரெய்டு நேரடியாகவே விஜய்யை குறிவைத்தே நடத்தப்பட்டது. அதே வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அன்பு செழியன், கல்பாத்தியில் இருந்து ஆரம்பித்தனர்.
விஜய் சமீபக காலமாக தன்னுடைய படங்களில் நேரடியாகவே பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சனம் செய்கின்றார்.
இந்த முறையும் படம் வெளியாகும் வரை தாமதப்படுத்தினால், பாஜகவை பற்றி விமர்சித்து வலுவான கட்சிகள் வைத்துவிடுவார்கள்.
எனவே, படம் வெளியாகும் முன்பே விஜய்யை அட்டாக் செய்து மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்பதுவே இந்த ரெய்டின் நோக்கம்.
பாஜகவின் தப்புக்கணக்கு
பாஜக போட்ட இந்த கணக்கு தப்பாகி போனது. திடீர் ரெய்டு என்றதுமே விஜய் சற்று பதற்றம் ஆகியே இருந்தார்.
தன்னை காரில் வைத்து அழைத்துச் சென்றதைப் பார்த்து மேலும் பதற்றமடைந்தார். ஆனால், விஜய் பதற்றமடைந்த அளவிற்கு எந்த ஒரு பொருளும் சிக்கவில்லை.
ரெய்டு முடிந்தவுடன் நேராக அனுமதிக்கப்பட்ட நாளுக்குள் படத்தை முடிக்க வேண்டும் என மீண்டும் நெய்வேலி பறந்தார் விஜய்.
இதற்கு இடையில் பல கட்சிகளின் சப்போர்ட் விஜய்க்கு வந்து குவிந்தது. முக்கியமாக திமுக கட்சி விஜய்க்கு முழு ஆதரவு கொடுத்தது.
பராளுமன்றத்தில் எதிரொலி
விஜய் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தியதை பற்றி தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதத்தை முன்வைத்தார்.
விஜய் வீட்டில் ரெய்டி நடத்தியவர்கள், 100 கோடி சம்பளம் வாங்கும் ரஜினி வீட்டுப்பக்கம் ஏன் இதுவரை ரெய்டு நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதன் மூலமே புரிந்து இருக்கும் விஜய்க்கு அதரவு கொடுத்து ரஜினிக்கு எதிர்ப்பை காட்டியுள்ளது திமுக.
Rise of Vijay – விஜய்யின் அரசியல் எழுச்சி
பாஜக அரசு, விஜய்யை சீண்டியது யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையே? விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மிகவும் மகிழ்ச்சி.
ஏனெனில் அவர் தான் விஜய் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இருந்தே முடிவு செய்துவிட்டார். தன் மகனை ஒரு அரசியல் தலைவராக்குவது என்று.
மக்கள் இயக்கம் துவங்கி விஜய்யின் அரசியல் பாதைக்கு அன்றே அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் அவருடைய அப்பா தான்.
இன்று பாஜக சீண்டிய உடன் ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் விஜய் செல்பி எடுத்துக்கொண்டது எஸ்.ஏ.சி. மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமும் விஜய் மேல் பார்வையைத் திருப்பி உள்ளது.
விஜய்யின் அரசியல் வருகைக்கு முதல் படி என்றால் அது இந்த ஐடி ரெய்டு தான் காரணம். எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பிக்க காரணமே ஐடி ரெய்டு என்பது குறிப்பிடத்தக்கது.
கண்மூடித்தனமான ரசிகர் படை
இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்த காலகட்டத்திலும் விஜய் மீது வெறித்தனமான அன்பை வைத்துள்ள ரசிகர் படை என்பது அவருக்கு இருக்கும் செல்வாக்கை நிச்சயம் காட்டுகிறது.
இதற்கு மேலும் அவரை சீண்டுவது என்றால் வரும் தேர்தலில் விஜய் வாய்ஸ் ஒலிக்கும் அல்லது விஜய்யே கூட காட்சி துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.