Home சினிமா கோலிவுட் மீண்டும் சிம்பு – சுரேஷ் காமாட்சி இடையில் பஞ்சாயத்தா?

மீண்டும் சிம்பு – சுரேஷ் காமாட்சி இடையில் பஞ்சாயத்தா?

268
0
Simbu Maanaadu

Maanaadu; மீண்டும் சிம்பு – சுரேஷ் காமாட்சி இடையில் பஞ்சாயத்தா? சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. தொடர்ந்து ஹைதராபாத்தில் கடந்த வாரம் முழுவதும் படப்பிடிப்பு நடந்தது.

உலகத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பது கொரோனா வைரஸ். இதன் காரணமாக, தென்னிந்தியா முழுவதும் படப்பிடிப்பும், படங்கள் திரையிடப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சிம்புவின் மாநாடு படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்படியிருக்கும் போது மீண்டும் சிம்புவிற்கும், சுரேஷ் காமாட்சிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

மேலும், இருவரையும் கலாய்த்து நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டனர். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் எங்களது சகோதர்கள் உயிரிழந்தவர்கள்.

அவர்களது இழப்பையே எங்களால் இன்னமும் தாங்கிகொள்ள இயலவில்லை. இந்த கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்?

அரசியல் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா வைரஸ்: யாரும் பயப்பட வேண்டாம்: பிரபலங்கள் கருத்து!
Next articleஇவரையும் விட்டு வைக்கவில்லை; கொரோனா கைவரிசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here