Home சினிமா கோலிவுட் கருப்பன் நடிகை தன்யா ரவிச்சந்திரன் பர்த்டே டுடே!

கருப்பன் நடிகை தன்யா ரவிச்சந்திரன் பர்த்டே டுடே!

0
498
Tanya Ravichandran

கருப்பன் நடிகை தன்யா ரவிச்சந்திரன் பர்த்டே டுடே! பலே வெள்ளையத் தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தன்யா ரவிச்சந்திரன் இன்று தனது 24 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தன்யா ரவிச்சந்திரன் பிறந்தநாள் இன்று.

சசிகுமார், கோவை சரளா நடிப்பில் வந்த பலே வெள்ளையத் தேவா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பலே வெள்ளையத்தேவா.

இப்படத்தைத் தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தாத்தா மலேசியன் நடிகர். அம்மா, லாவண்யா ஸ்ரீராம் ஒரு கிளாசிகல் டான்சர். ஆகையால், அவர் மூலமாக பரதநாட்டியம் கற்றுக் கொண்டார்.

இளங்கலை வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற இவர், மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருந்த புதிய படத்தின் ஆடிஷனுக்கு சென்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆடிஷனுக்கு சென்ற தன்யா படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது மிஷ்கின், அபிராமி என்ற அவரது பெயரை தன்யா என்று மாற்றிக்கொள்ளும்படி கூறினார்.

அவர் கூறியதைத் தொடர்ந்து, அபிராமி தனது பெயரை தன்யா என்று மாற்றிக்கொண்டார்.

ஆனால், மிஷ்கின் இயக்கத்தில் தன்யா நடிக்க இருந்த படம் துப்பறிவாளன் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்குப் பிறகு தொடங்க இருந்தது.

மிஷ்கின் படத்தில் நடிக்க இருந்த தன்யா, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வந்த பிருந்தாவன் படத்தில் நடித்தார். இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

ஆனால், இதற்கு முன்னதாக சசிகுமார், கோவை சரளா ஆகியோரது நடிப்பில் வந்த பலே வெள்ளையத்தேவா படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்த நிலையில், இன்று தனது, 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here