Thalapathy Vijay; விஜய் பர்த்டே ஸ்பெஷல்: குழந்தைக்கு வெற்றிமாறன் – னு பேர் வச்ச ரசிகர்! விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீவிர ரசிகர் ஒருவர் தனது ஆண் குழந்தைக்கு வெற்றிமாறன் என்று பெயர் சூட்டியுள்ளார்.
விஜய்யின் பிறந்தநாளில் தனது ஆண் குழந்தைக்கு வெற்றிமாறன் என்று பெயர் சூட்டி அவரது ரசிகர் ஒருவர் தனது அன்பை வெளிக்காட்டியுள்ளார்.
தளபதி விஜய் நேற்று தனது 46 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்தும், கேக் வெட்டியும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தும் வந்தனர்.
அந்த வகையில், தற்போது தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஹரிஹரன் என்பவர் தனது ஆண் குழந்தைக்கு விஜய் நடித்த மெர்சல் படத்தின் கதாபாத்திரமான வெற்றிமாறன் என்ற பெயரை சூட்டி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் விஜய், வெற்றிமாறன், மாறன் மற்றும் வெற்றி ஆகிய 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் கதாபாத்திரம் மீது ஈர்ப்பு கொண்ட கீர்த்தி – ஹரிஹரன் தம்பதியினர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தங்களது குழந்தைக்கு வெற்றிமாறன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
மேலும், தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டு, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.