கொரோனா நிவாரண நிதி: நடிகர்கள் தங்களால் முடிந்த பண உதவியை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.
இதில் கூட அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களின் சட்டையிட்டு மல்லுகட்டி வருகின்றனர்.
உன் தலைவர் வெத்து, என் தல கெத்து.. தல, தலைவர் ரெண்டு பேரவிட தளபதி தான் டாப்பு என ரசிகர்கள் வீட்டில் பொழுது போகவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் ஒன்று கூடி நாறடித்துவிடுகின்றனர்.
இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருபடி மேலே போய் விஜய் ரசிகரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் நடிகர் விஜய்யின் ரசிகர். இவருடைய ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு விஜய் ரசிகர்.
இருவரும் நல்ல நண்பர்கள். தீவிர ரஜினி-விஜய் ரசிகர்களும் கூட. ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்து உள்ளனர்.
போதை தலைக்கேறும் வரை குடித்து விட்டு இருவரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களைப் பற்றி உயர்வாகப் பேசி உள்ளனர்.
இந்த பேச்சு ஒரு கட்டத்தில் போட்டியாக மாறி விஜய் நல்லவரா? ரஜினி நல்லவரா? யார் அதிக உதவிகள் செய்து உள்ளனர் என வார்த்தை போராக மாறிவிட்டது.
இதில் ஒருவரை ஒருவர் மற்ற நடிகரைப் பற்றி தரக்குறைவாக பேசி சண்டையிட்டு உள்ளனர். இதில் வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
ரஜினி ரசிகர் யுவராஜ், விஜய் ரசிகர் தினேஷ் பாபுவை தள்ளிவிட்டு உள்ளார். இதில் நிலை தடுமாறி தினேஷ் பாபுவின் தலை கல்லில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
ரஜினி ரசிகர் யுவராஜ்-யை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கள்ளசாராயம் ஏதும் உட்கொண்டு சட்டையிட்டனரா? அவர்களுக்கு மதுபானம் எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர் ஒருவர் தளபதியார் செய்த உதவிகளை சொல்லிக் கொண்டிருந்த பொழுது ரஜினி ரசிகர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். pic.twitter.com/7hVrBMzQXj
— Thalapathy🇦🇷Sarathkumar (@Sarathk18161012) April 24, 2020