சவர்க்காரா? சர்காரா? நேரு சிலைவடிவில் அரங்கேறியது – கர்மா 3
வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பதே கர்மாவின் சூத்திரம்.
2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது, சுதந்திரப்போராட்ட தியாகியும் எழுத்தாளருமான விநாயக் தாமோதர் சவர்க்கார் நினைவாக, அந்தமான் ஜெயிலில் இருக்கும் நினைவுச்சின்னங்கள் அனைத்தும் எவ்வித காரணமுமின்றி சங்கர் ஐய்யர் என்பவர் அகற்றிவிட்டார்.
இந்தியாவிற்கு உழைத்த மாமனிதரின் நினைவுச்சின்னங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது மிகவும் வருத்தமான நிகழ்வாக அமைந்தது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சிலை கும்பமேளா திருவிழாவிற்காக அலகாபாத் நகர் சாலையின் நடுவில் இருந்து அகற்றப்பட்டது.
உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் எவ்வித உள்நோக்கமும் கொண்டும் இதை அகற்றவில்லை.
கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு வசதியாகவும் சாலையை மேலும் அகலப்படுத்தவு இந்த முடிவை எடுத்தார்.
ஆனால், இந்த சம்பத்தால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த இடத்தில் கலகத்தை ஏற்படுத்தினர்.
அன்று காரணமின்றி, விநாயக் தாமோதர் சவர்க்கார் அவரின் நினைவுச்சின்னங்களை அகற்றிய காங்கிரசாருக்கு, இன்று தானாகவே நேருவின் சிலையை அகற்றவைத்து கர்மா விளையாடிவிட்டது.