Home நிகழ்வுகள் இந்தியா நம்பர் வாங்க பணத்தால் போலீசாரை வாயடைக்க வைத்த தொழிலதிபர்

நம்பர் வாங்க பணத்தால் போலீசாரை வாயடைக்க வைத்த தொழிலதிபர்

315
0

நம்பர் வாங்க பணத்தால் போலீசாரை வாயடைக்க வைத்த தொழிலதிபர்

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலகோபால். இவர் ஒரு கார் பிரியர்.

புதிய மாடல் கார் வாங்குவது மட்டுமல்ல அதற்கு நம்பர் வாங்குவதிலும் நம்பர் ஒன்னாக இருக்கக்கூடியவர்.

போர்ஸ்சி 718 பாக்ஸ்டர் நீல நிற ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தார்.

இந்தக் காரின் விலை 85 லட்சம் ரூபாய் மட்டுமே. அதை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.

மேலும் இதற்கு பேன்சி நம்பர் வாங்குவதற்காக தனியாக 31 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

திருவனந்தபுர போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் பேன்சி எண்ணிற்கான ஏலம் நடைபெற்றது.

KL-01 CK-1 என்ற எண்ணிற்கு ஆரம்ப விலை 500 என நிர்ணயித்து ஏலம் துவங்கியது. பலரும் இந்த நம்பரை வாங்குவதற்கு போட்டிபோட்டனர்.

ஆனால் பாலகோபால் விடுவதாய் இல்லை. சளைக்காமல் ஏலத்தின் விலையை ஏற்றிக்கொண்டே போனார்.

25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மூன்று பேர் போட்டி போட்டனர். உடனே 31 லட்சம் என தடலாடியாக ஏலம் கேட்டார் பாலகோபால்.

மற்றவர்கள் அத்துடன் ஒதுங்கிக்கொண்டனர். கேரள வரலாற்றிலேயே இவ்வளவு தொகை கொடுத்து நம்பர் ப்ளேட் வாங்குவது இதுவே முதல்முறை என போலீசாரே வாயடைத்துப்போய் விட்டனர்.

இதற்கு முன்னரே, 2017-ல் KL-01 CB-01 என்ற எண்ணை ரூ.19 லட்சம் செலவு செய்து வாங்கினார். நம்பர் ஒன் எண் என்றால் இவர் விட்டுக்கொடுக்க மாட்டார் போல.

Previous articleநடிகை நதியாவின் மகளா இப்படி உள்ளார்? – வீடியோ
Next articleசவர்க்காரா? சர்காரா? நேரு சிலைவடிவில் அரங்கேறியது – கர்மா 3
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here