Home Latest News Tamil Google Doodle: பிலிப்பைனின் பாரம்பரிய நடனம்; பிரான்சிஸ்கா ரெயிஸ் அகினா

Google Doodle: பிலிப்பைனின் பாரம்பரிய நடனம்; பிரான்சிஸ்கா ரெயிஸ் அகினா

409
0
Google Doodle
Google Doodle: பிலிப்பைனின் பாரம்பரிய நடனம்; பிரான்சிஸ்கா ரெயிஸ் அகினா (Francisca Reyes-Aquino).
பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கா ரெயிஸ் அகினா என்ற பெண்மணி பிலிப்பைன் நாட்டின் பாரம்பரிய நடனம், பாடல் மற்றும் விளையாட்டுகளை மீட்டெடுக்க அயராது உழைத்தவர்.
இவர் பிலிப்பைன் நாட்டின் போல்க் நடனக் கலைஞர் ஆவர். மேலும் பிலிப்பைன் நடனங்களின் தாய் என்று பிரான்சிஸ்கா ரெயிஸ் அகினா அழைக்கப்படுகிறார்.
1899-ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த இவர் பிலிப்பைன் பாரம்பரியங்களை மீட்டெடுக்க 7000-ற்கும் அதிகமான தீவுகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார விளையாட்டு, நடனம்,  பாடல்கள் போன்ற அனைத்தையும் பற்றி அறிந்தார்.
யுனிவர்சிட்டி ஆஃப் பிலிப்பைனில் பட்டப்படிப்பை முடித்த இவர் தான் பாதுகாத்த அனைத்தையும் பயனுள்ளதாக மாற்ற அடுத்த தலைமுறைக்கு அதை சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
1954-ஆம் ஆண்டு ரிபப்ளிக் அவார்ட் ஆஃப் மெரிட் விருதும் 1973-ஆம் ஆண்டு நேஷனல் ஆர்டிஸ்ட் என்ற விருதும் வழங்கப்பட்டது.
இவரது 120ஆவது பிறந்த நாளான இன்று கூகிள் டூடுல் (Google Doodle) டிசைனில் காரிநோச, சிங்கில், பண்டாங்கோ, ஷா இலா மற்றும் பிரபலமான டிநிக்லிங்க் நடனங்கள் இடம் பெற்றுள்ளது.
Previous articleபெண்கள் தினத்திற்காக சமயல் அறைக்குள் நுழைந்த சச்சின்
Next articleஇரட்டையர்கள்: ஐடெண்டிகள்-பிரடெர்னல் ட்வின்ஸ்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here