வால் ஸ்டிரீட் வெளியிடுள்ள அறிக்கையின்படி இந்த புதிய சட்டம் செயல்படுத்தப்பட்டால் அமெரிக்காவிற்கு வெளியில் ஹெச்1-பி விசா வைத்திருக்கும் யாரும் அமெரிக்காவிற்கு வேலைக்கு வரமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு பொருந்தாது
ஆனால் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து கொண்டே இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய சட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
மின்னனு பொறியாளர்களும் விரும்பும் ஹெச்1-பி விசா
ஹெச்1-பி விசா என்பது இந்தியாவில் வசிக்கும் அனைத்து மின்னனு பொறியாளர்களும் விரும்பும் விசாவாகும். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான இந்திய மின்னனு பொறியாளர்களின் மத்தியில் பாதகமான அதிர்வலையை கிளப்பி உள்ளது.
கொரோனா பரவல்
ஏற்கனவே கொரோனா பரவலால் பெரும் எண்ணிக்கையிளான ஹெச்1-பி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் வேலையை இழந்து அமெரிக்கவில் இருந்து இந்தியா திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் அரசாங்கம் நடவடிக்கை
இந்த நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப் அரசாங்கம் தெரிவிக்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் பொருட்டும், பொருளாதாரம் மீண்டவுடன் அமெரிக்கர்கள் முதலில் தங்களுக்குக்கான வேலைகளை பெறுவதில் உள்ள சிக்கலை குறைக்கும் விதத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.