பரவை முனியம்மா காலமானார்: தமிழ் சினிமாவில் சிங்கம் போல பாடல் மூலம் பிரபலமாகி பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியவர் பரவை முனியம்மா.
பார்க்கத்தான் பாட்டி இவர் அடிக்கும் லூட்டிக்கு சிரிக்காத ரசிகர்களே இல்லை. தன்னுடைய எதார்த்த நடிப்பில் நம்மை மகிழ்வித்தவர்.
இவர் விவேக் பில்டப் செய்யும் உடற்பயிற்சி பழுது தூக்கும் கம்பியை அலேக்காக தூக்கி வீசும் காட்சி தான் இன்று வரை மீம் கிரியேட்டர்கள் பயன்படுத்தி வரும் முக்கிய டேம்லேட்களில் ஒன்று.
நாட்டுப்புற பாடகி என்று மட்டும் இல்லாமல் காமெடியால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் பரவை முனியம்மா.
நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் காலமானார். அவரின் வயது 76.
அவரது மதுரையில் வீட்டில் அவரின் உயிர் பிரிந்தது. கொரோனா பாதிப்பால் உடரங்கு அமலில் உள்ளது. இதனால் பிரபலங்கள் யாரும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாது.
நடிகர் விவேக் நேரில் செல்வது சந்தேகம் தான். சென்னை என்றால் கூட சென்றுவிடலாம். மதுரை வரை செல்வது கடினம். டிவிட்டரில் இரங்கல் தெரிவிக்கும் அளவிற்கு கொரோனா அச்சத்தை உண்டாகி வருகிறது.
நடிகர் விசு, நடிகர் சேதுராமன் தற்பொழுது பரவை முனியம்மா. தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமா பிரபலங்கள் இறந்து வருவது மேலும் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.