Home Latest News Tamil 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு-முதலமைச்சர் கடிதம்

11 எம்.எல்.ஏக்கள் வழக்கு-முதலமைச்சர் கடிதம்

394
0
11 எம்.எல்.ஏக்கள் வழக்கு-முதலமைச்சர் கடிதம்

11 எம்.எல்.ஏக்கள் வழக்கு-முதலமைச்சர் கடிதம். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு உச்ச நீதிமற்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், சபாநாயகரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள விளக்கம் இந்த வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவிற்குப் பின்னர் ஆ.தி.மு.க கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு கட்சி இரண்டாகப் பிரிந்தது. அடுத்த முதல்வர் யார் என தீர்மானிப்பதில் குழப்பங்கள் நீடித்தன.

அதன் பின்னர் பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம் மாஃபா பாண்டியராஜன் உட்பட11 எம்எல்ஏ-க்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

இதனால் இந்த 11 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி அப்போதையை அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் கடிதம் எழுதினர்.

தற்போது சபாநாயகருக்கு முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 11 எம்எல்ஏ-க்கள் தவிர்த்து, எஞ்சிய 122 பேருக்கு மட்டுமே கொறடா உத்தரவு அனுப்பப்பட்டது.

அதனால் 11 பேர் மீது நடவடிக்கைக் வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சட்டப்பேரவை செயலர் கடந்த 10-ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதில் முதல்வரின் கடிதத்தை மேற்கொள்காட்டி, புகார் அளித்த 6-பேரும் பதிலளிக்க கூறி அவர் குறிப்பிட்டுள்ளார். 11-எம்எல்ஏ-க்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், பேரவை சபாநாயகருக்கு முலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதம் திருப்பம் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Previous articleஒரே நாளில் 10,664 புதிய கொரோனா நோய் தொற்றுகள்
Next articleகோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here