Home நிகழ்வுகள் இந்தியா தொடர்ந்து பலி கேட்கும் மின்னல், பீகாரின் வடக்கு பகுதியில் வியாழக்கிழமை 26 பேர் மின்னல் தாக்கி...

தொடர்ந்து பலி கேட்கும் மின்னல், பீகாரின் வடக்கு பகுதியில் வியாழக்கிழமை 26 பேர் மின்னல் தாக்கி இறந்தனர்

மின்னல் தாக்கி

பாட்னா: தொடர்ந்து பலி கேட்கும் மின்னல். பீகாரின் வடக்கு பகுதியில் வியாழக்கிழமை 26 பேர் மின்னல் தாக்கி இறந்தனர். இதில் பாட்னாவின் கிராமப் பகுதியை சேர்ந்த 6 பேரும் அடங்குவர்.

பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழப்பு இது மூன்றாவது முறை

இந்த வாரத்தில் மட்டும் மின்னல் தாக்கி உயிர் இழப்புகள் ஏற்படுவது பீகாரில் இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன் ஜூன் 25ஆம் தேதி, 22 மாவட்டங்களை சேர்ந்த 92 பேர் மின்னல் தாக்கி இறந்தனர், ஜூன் 30 ஆம் தேதி, 5 மாவட்டங்களை சேர்ந்த 11 பேர் மின்னல் தாக்கி இறந்தனர்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 இலட்சம் வழங்கப்படும்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 இலட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். வானிலை கொந்தளிப்புடன் உள்ளதால் மக்களை தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் படி அவர் மேலும் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here