சென்னை: புதன் கிழமை தமிழக அரசு தெரிவிக்கையில், சென்னை, மதுரை, கோவை நகரங்களில் முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது என்றும் மேலும் நீடிப்பு கிடையாது எனவும் தெரிவித்தது.
மேலும் ஏப்ரல் 30 தில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் விற்பதற்கு காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பரவல் அதிகரிப்பால் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அன்று முதல் நான்கு நாட்களுக்கு (இன்று வரை) சென்னை, கோவை மற்றும் மதுரையில் காய்கறிகடைகள் முதற்கொண்டு எந்த கடையும் திறக்காத முழு ஊரடங்கை அறிவித்து இருந்தார்.
இந்த முழு ஊரடங்கு சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் புதன் கிழமை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாகவும், ஏப்ரல் 26ம் தேதிக்கு முன் இருந்த ஊரடங்கு நிலை கடைபிடிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன் கிழமை, அரசு அறிவிக்கையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரம் வியாழக்கிழமை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை என அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அடுத்த நாள் மே 1 முதல் இந்த நேரம் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி என மாற்றி கடைபிடிக்கப்படும்.
மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் பொழுது கண்டிப்பாட சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் அமைதியான வழியில் பொருட்களை வாங்குதல் வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது.
“மக்கள் முககவசம் கண்டிப்பாக அணியவேண்டும்”, எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.