Masakali Remake; ரீமேக் செய்த நிறுவனத்தை சூசகமாக விமர்சித்த ஏ.ஆர்.ரஹ்மான்! தனது பாடலை ரீமேக் செய்து ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளான நிறுவனத்தை ஏ.ஆர்.ரஹ்மான் சூசகமாக விமர்சனம் செய்துள்ளார்.
தனது பாடலை ரீமேக் Masakali Remake செய்த நிறுவனத்தை ஏ.ஆர்.ரஹ்மான் சூசகமாக விமர்சனம் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.
பாலிவுட்டில் வெளியான டெல்லி 6 என்ற படத்திற்கு இவரே இசை. கடந்த 2006 ஆம் ஆண்டு அபிஷேக் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் வந்த இந்தப் படம் தோல்விப்படமாக அமைந்தது.
ஆனால், படத்திற்கு இசை கைகொடுத்தது. மசக்கலி என்ற பாடல் ஹிட்டோ ஹிட் கொடுத்தது.
டெல்லி 6 படத்தில் வந்த Genda Phool என்ற பாடலை பாட்ஷா என்ற இசையமைபபாளர் ரீமேக் செய்து டி சீரிஸ் யூடியூப் சேனலில் வெளியிட்டார். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதே போன்று, Masakali என்ற பாடலையும் ரீமேக் Masakali Remake செய்து நேற்று வெளியிட்டார். ஆனால், இதற்கு ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு வரவில்லை.
மோசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளனர். அதே போல டுவிட்டரில் #ARRahman, #masakali2 போல இரண்டு ஹேஷ்டேக்குகளும் டிரெண்டானது.
இந்த நிலையில், ரீமேக் செய்த நிறுவனத்தை விமர்சிக்கும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் குறுக்கு வழி கிடையாது 200 மேற்பட்ட இசையமைப்பாளர்கள் எழுதி 365 நாட்கள் ஒரு தலைமுறை நிலைக்கும் இசையை கொடுக்க மண்டையை குழப்பினோம்.
ஒரு குழு இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர்கள் நடன இயக்குனர்கள் மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது அன்பும் பிரார்த்தனையும் என்று பதிவிட்டுள்ளார்.