Home சினிமா கோலிவுட் குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா!

குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா!

606
0
Nadhiya Family Photo

Nadhiya Family Photo; குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா! நடிகை நதியா குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை நடிகை நதியா வெளியிட்டுள்ளார்.

பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா. 1980 ஆம் ஆண்டுகளில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். ரேகா, ராதா, அம்பிகா ஆகியோர் வரிசையில் நதியாவும் இடம்பெற்றிருந்தார்.

சின்னதம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, நிலவே மலரே, சண்டை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் செட்டிலானார்.

இவர்களுக்கு சனம், ஜனா ஆகிய மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் களமிறங்கினார். ஆம், தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களை விட்டு ஒதுங்கி இருந்த நதியா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அதில் அவரது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஜப்பான் சென்று வந்த போது எடுத்த படம்.

முதல் முறையாக தனது குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு நதியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, ஹலோவின் நதியா குடும்ப புகைப்படம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா பாதிப்பு: இயக்குநர் பாண்டிராஜ் நிதியுதவி!
Next articleஅடுத்தடுத்து சாதனை படைக்கும் சூரரைப் போற்று: வெய்யோன் சில்லி 10 மில்லியன் வியூஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here