Silence Trailer; சைலன்ஸ் டிரைலர் வெளியாகியுள்ளது.
அனுஷகா, அஞ்சலி, மாதவன் நடிப்பில் உருவாகி வரும் சைலன்ஸ் டிரைலர் Silence Trailer வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா Anushka. விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த் என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழைத் தவிர, தெலுங்கு மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில், இவரது நடிப்பில் சைரா நரசிம்ஹா ரெட்டி படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார்.
சைலன்ஸ் (Silence Trailer)
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு தமிழில் சைலன்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சைலன்ஸ் படத்தில் அனுஷ்கா Anushka உடன் இணைந்து அஞ்சலி, மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோர் டித்துள்ளனர். கோபி சுந்தர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் சைலன்ஸ் டிரைலர் Silence Trailer வெளியாகியுள்ளது. இதில், அனுஷ்கா, அஞ்சலி, மாதவன் ஆகியோரது காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் நடக்கும் கதை. காட்டுக்குள் இருக்கும் வீட்டில் நடக்கும் சம்பவம் இது. அந்த வீட்டில் இருக்கும் அனுஷ்காவை யாரோ தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் அஞ்சலி விசாரணை மேற்கொள்கிறார். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.
மர்ம நபரை தேடும் வேட்டையும் நடக்கிறது. டிரைலரும் விறுவிறுப்பாகவே சென்று முடிகிறது.
இந்தப் படத்தில் அஞ்சலி கிரைம் டிடெக்டிவாக நடித்துள்ளார். அனுஷ்கா, பேசமுடியாத கலைஞராக நடித்துள்ளார். மாதவன், மியூசிசியனாக நடித்துள்ளார்.
சுப்பாராஜூ வைல்டுலைஃப் போட்டோகிராஃபராக நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு பிறகு அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வரன் தேடும் முயற்சியில் அவரது பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தெலுங்கு இயக்குநர் ஒருவரை அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அண்மையில் தகவல் வந்தது.
அவர், அனுஷ்காவின் சைஸ் ஜீரோ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.