Home சினிமா Boomerang Movie Review: பூமராங் திரைவிமர்சனம்

Boomerang Movie Review: பூமராங் திரைவிமர்சனம்

976
0
Boomerang Movie Review

Boomerang Movie Review: பூமராங் திரைவிமர்சனம்

ஐ.டி. கம்பெனியில் வேலை பறிபோகிறது. இதனால் நாயகன் அதர்வா ஊரில் விவசாயம் செய்ய முடிவு செய்கிறார்.

ஆனால் ஊரில் தண்ணீர் இல்லை. இதனால் அருகில் உள்ள ஆற்றில் இருக்கும் தண்ணீரை, ஏரி வெட்டி ஊருக்கு கொண்டுவர முடிவு செய்கிறார்.

அங்கு ஒரு கார்பரேட் முதலாளி அங்குள்ள நிலத்தை வாங்க முயற்சி செய்கிறார். இதற்கு அதர்வா முட்டுக்கடையாக இருக்கிறார்.

அவரை தீர்த்துக்கட்டுகின்றனர். அவருடைய முகத்தை வேறு ஒரு நபருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்கின்றனர்.

மீண்டும் அதர்வா உருவாகிறார். தனக்கு முகம் கொடுத்த அந்த நபரின் ஊருக்குச் சென்று வில்லன்களைப் பழிவாங்குகிறார்.

இந்தக் கதை ‘கத்தி’ என்று பெயரில் ஏற்கனவே வந்துவிட்டு. கத்தி படம் என்னுடைய கதை என பலர் வழக்குப்பதிவு செய்தனர்.

அப்படி ஒரு கதையை தான் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். கதை காப்பி எனத் தெரியக்கூடாது என பட்டி டிங்கரிங் பார்த்துள்ளார்.

படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகள்

முகமாற்று அறுவை சிகிச்சை

ஒருவரின் முகத்தை இன்னொருவருக்கு பொருத்துகின்றனர். அச்சு அசலாக அதே முகத்தில் வருகிறார். சரி இதைக்கூட சினிமாடிக் எனக்கூறிவிடலாம். அதே குரல் எப்படி இரண்டு நபருக்கும் வந்தது?

ஏதோ மலைக்குகையை குடையும் போது அதில் பாம் வைத்தால் மண்சரிவு ஏற்பட்டு இறப்பது சகஜம். சாதாரணமான ஒரு ஓடை வெட்டுவதில் மண்சரிவு ஏற்பட்டு இறந்தனர் என்பது கற்பனையையும் மிஞ்சிய காட்சி.

பூமராங்

நதிநீர் இணைப்பைப் பற்றி இந்த் படம் பேசுகிறது என ரஜினிகாந்தை வைத்து படத்துக்கு பப்ளிசிட்டி தேடினர்.

ஒரு ——– இந்த படத்தில் நதிநீர் இணைப்பு பற்றி பேசவில்லை. விவசாயம் பற்றி பேசுகிறேன் என ஒரு வறண்ட கண்மாய்க்குள் இரண்டாம் பாதியை எடுத்து முடித்துவிட்டனர்.

இவர்கள் எடுக்கும் படம் ஓட வேண்டும் என்பதற்கு விவசாயி தான் கிடைத்தானா? நதிஇணைப்பு பற்றிய படம் என ஓடி வந்து பார்த்த விவசாயி ஏமாற்றப்பட்டு உள்ளான்.

இதுவே இந்த படத்திற்கு நெகடிவ் பப்ளிசிட்டியாக அமைந்துவிட்டது. இந்தப் படம் அட்டர் ப்ளாப் ஆகும் என்பது மட்டும் உறுதி.

Previous articleபரிசு மழையில் நனைந்த நிர்மலா தேவி; சிறைக்குள் நடந்தது என்ன?
Next articleமல்லையாவுக்கு அருகிலேயே நீரவ் மோடி; மருவைத்த மாறுவேட மோடி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here