மல்லையாவுக்கு அருகிலேயே நீரவ் மோடி; மருவைத்த மாறுவேட மோடி
மல்லையாவை இந்தியா கொண்டுவர அனைத்து ஒப்புதலும் கிட்டத்தட்ட இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.
இருப்பினும் மல்லையாவை இந்தியா கொண்டுவர இந்திய அரசு தாமதப்படுத்திக்கொண்டே உள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மல்லையாவை இந்தியா கொண்டுவர மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நீரவ் மோடியும் அதே லண்டன் நகரில் தான் வசித்து வருகிறாராம். அங்கு ஒரு பெரிய வைரக் கடை துவங்கியுள்ளார்.
அதுவும் அவர் பெயரில் பல மாதங்களாக நடந்து வருகிறதாம். கிளீன் சேவ் உடன் இந்தியாவை விட்டு சென்றார் நீரவ் மோடி.
அங்கு முறுக்கு மீசை, தாடி வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் சுற்றி வருகிறார். அவரை ஒரு பத்திரிக்கை கண்டு பிடித்துள்ளது.
அதன் பிறகே போலீசாருக்கும் மத்திய அரசுக்கும் தெரிய வந்துள்ளதாம். எம்.ஜி.ஆர். காலத்தில் மருவைத்துக் கொண்டாலே மாறுவேடம் எனக்கூறுவர்.
அதே போல் ஆகிவிட்டது நீரவ் மோடியின் மாறுவேடம். இதுநாள் வரை அரசு கண்களுக்குப் புலப்படாமல் இருந்தது.