Home நிகழ்வுகள் தமிழகம் தமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா எண்ணிக்கை

தமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா எண்ணிக்கை

270
0
தமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. நேற்று 1,164 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. நேற்று 1,164 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை: நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,164 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 11 பேர் நேற்று நோய் தொற்றிற்கு உயிரிழந்துள்ளனர்.

இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவிற்கு தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 184 ஆக அதிகரித்துள்ளன.

நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதியானவர்களில் 1,112 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள்.

நேற்று 413 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின்னர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13,170 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5,03,339 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 11,377 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் மட்டும் 964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு சகோதரிகள் பலி: கொல்கத்தா
Next articleஒரு மாதத்தில் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here