Home நிகழ்வுகள் உலகம் கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது இஸ்ரேல்

கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது இஸ்ரேல்

376
0
கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது இஸ்ரேல்

கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது இஸ்ரேல். உலகையே அச்சுறுத்திவரும் கொலைகார கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடுத்துவிட்டதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

ஜெருசலேம்: கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹானில் துவங்கி, உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்ட கொரோனா நோய் தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை.

அதிகாரப்பூர்வ மருந்து இதுவரை இல்லை:

இந்த கொடிய வைரசிற்க்கு இதுவரை அதிகாரப்பூர்வ தப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகள் அனைத்துமே இந்த தடுப்பு மருந்து தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

இஸ்ரேலில் மருந்து கண்டுபிடிப்பு:

இந்நிலையில், தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. அடுத்த நடவடிக்கையாக இந்த மருந்துக்கு காப்புரிமை பெறுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

IIBR நிறுவனம் சாதனை:

வர்த்தக நோக்கத்திற்கான உற்பத்தியும் துவங்கவுள்ளது. இஸ்ரேலின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான IIBR பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து வெற்றிகரமாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இந்த விவரங்களை அந்நாட்டின் பாகாப்பு துறை அமைச்சர் நபிதாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ஆய்வு:

நேற்று ஆராய்ச்சி நிலையத்தில் நேரில் ஆய்வு செய்த அவர் கொரோனா தடுப்பு மருந்து பற்றிய விவரங்களை விரிவாக கேட்டறிந்தார். IIBR நிறுவனம், மருந்திற்கான காப்புரிமையை பெற முயற்சித்து வருகிறது.

மேலும் அதிக அளவில் இந்த மருந்தை தரிக்க மற்ற நாட்டு நிறுவனங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஆய்வு நிறுவனத்தில் மேற்பார்வையிட்டபின் பென்னட் செய்தி வெளியிட்டார்.

பணியாளர்களுக்கு பாராட்டு :

அதில், “தடுப்பு மருந்தை வெற்றிகரமாக கண்டுபிடிக்க உழைத்த IIBR நிறுவன பணியாளர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். இது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும்.

IIBR நிறுவன ஆய்வாளர்களின் அறிவாற்றல் தான் இந்த சாதனையை சாத்தியமாகியுள்ளது”. என்று பாராட்டியுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இஸ்ரேல் இருந்து வருகிறது.

நம்பிக்கை தந்த இஸ்ரேல் :

இந்த மருந்து நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இனி இஸ்ரேல் காப்புரிமை பெற்ற பின்னர் வர்த்தகத்திற்கு மருந்தை தயாரிக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் நாளிதழான ஹாரேட்ஸ் பத்திரிகையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் விஞ்ஞானிகள் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டனர், மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்று கூறியிருந்தது

இந்த தடுப்பு மருந்து மனிதர்களின் உடலில் சோதிக்கப்பட்டதா அல்லது விலங்குகளின் உடலில் சோதிக்கப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. கொரோனா தடுப்பு மருந்து குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் ஆய்வு செய்து வருகிறது.

பொதுவாக தடுப்பு மருந்துகள் முதலில் விலங்குகளின் உடலில் பரிசோதிக்கப்பட்டபின் பலகட்ட ஆய்வுகளுக்கு பின்னரே சந்தைக்கு விற்பனைக்கு வரும். பின்னர் தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் பற்றியும் ஆய்வு செய்யப்படும்.

5 நாடுகளின் மாதிரிகள் :

இந்த தடுப்பு மருந்தை IIBR கண்டுபிடிப்பதற்காக நோய் தொற்றின் மாதிரிகள் ஜப்பான், இத்தாலி, உள்ளிட்ட 5 நாடுகளிலிருந்து வரவழைப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதிகாரப்பூர்வ மருந்துகள் இதுவரை இல்லை :

உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இவை எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

கொரோனாவிற்கு உலக அளவில் இதுவரை 2.50 லட்சம் பேர் இறந்துள்ளனர். 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleபெட்ரோல் மற்றும் டீசல் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு அதிரடி
Next articleரவி சாஸ்திரி; கடை திறந்தாச்சு, ஒரு பீர் அடிக்கலாம்னு இருக்கேன், கம்பெனி கொடுக்க இவர் வந்தா நல்ல இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here