முதல் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அபார வெற்றி
ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
கேப்டன் விராட் கோலி 6 ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும், அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் இருவரும் ஹர்பஜன் பந்துவீச்சில் சிக்கினார்கள்.
பார்திவ் படேல் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டத்தை இழந்தனர். அதிகபட்சமாக பட்டேல் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்களையும், பிரவோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 71 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
வெற்றியை மட்டுமே மனதில் கொண்டு களம் இறங்கிய சென்னை அணி மெதுவாக ஆட்டத்தை ஆரம்பித்தது. ரன் எடுக்காமல் வாட்சன் ஆட்டம் இழக்க மறுமுனையில் ராயுடு, ரெய்னா பொறுமையாக ஆடி வந்தனர்.
சின்ன தல ரெய்னா 5000 ரன்களை கடந்த முதல் ஐபிஎல் வீரரானார். சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாக அனைத்து சீஷனிலும் சிறப்பாக செயல்பட்ட ஒரே வீரர் இவர்தான்.
இறுதியில் சென்னை அணி 17.4 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதனையடுத்து ஐபிஎல் புள்ளி பட்டியிலில் ஒரு வெற்றியுடன் சென்னை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
முக்கியமான மூன்று விக்கெடை எடுத்த ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் படத்தை தட்டி சென்றது மட்டும் இல்லாமல் தன்னுடைய புலவர் பாணியில் ஆர்சிபியை டிவிட்டரில் கலாய்த்த ஹர்பஜன்.
ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB pic.twitter.com/bCqPlUl0tt
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 23, 2019