இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு , பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று.
இங்கிலாந்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கிலாந்து மன்னரை தொடர்ந்து தற்போது பிரதமரையும் கொரோனா தாக்கியது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவரே தன்னை சுய தனிமை படுத்திக்கொண்டார்.
கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடையும்வரை, காணொலி காட்சி மூலம் தமது அன்றாட பணிகளை கவனிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உண்மைதான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர், பிரதமர் என அடுத்தடுத்து கொரோனாவால் மூத்த தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.