பேஸ்புக் வீடியோ கால் ஒரே நேரத்தில் 50 பேர் வரை பேசலாம் வேற லெவல், பேஸ்புக் மேஸ்செஞ்சர் செயலில் புதிதாக அறிமுகப்படுத்திய ரூம் ஆப்ஷனில் 50 நபர்கள் வரை வீடியோ கால் பேசலாம்.
கொரோனா பாதிப்பால் உலகமே ஊரடங்கில் இருக்கும் வேலையில் வீடியோ கால் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக குரூப் வீடியோ கால் செய்வோரின் எண்ணிக்கை.
இதில் பெரும்பாலோனோர் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அவர்கள் குரூப் வீடியோ கால் செய்யும் தேவையும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் ஜும் செயலியில் மட்டும் ஒரு நாளைக்கு 300 மில்லியன் தினசரி பயனாளர்கள் இருக்கின்றனர். இதுவே பேஸ்புக் திடீரெனே இந்த வசதி கொண்டு வார காரணமாக அமைந்தது.
இதில் பேஸ்புக்கில் இல்லாதவர்களும் அதன் நண்பர்கள் பகிரும் லிங்க்ஐ கிளிக் செய்து இணையலாம். மேலும் தற்போது இந்த சேவை பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் உலகத்தில் இருக்கும் அனைவரும் பயன்படுத்தாலம். இதன் சேவைகள் இன்னும் மேம்படுத்தபட்டு வருகின்றன. மேலும் பயனாளர்களின் அனைத்து தகவல்களும் பாதுகாக்கப்படும் என பேஸ்புக் உறுதி அளித்துள்ளது.